தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இந்தியா 10.10.87 ம் ஆண்டு யுத்தப் பிரகடனம் செய்ததை தெடர்ந்து அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனால் எழுதப்பட்ட முதலாவது கடிதம்...
தலைமைச்செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
யாழ்ப்பாணம்.
12.10.1987
கனம் ராஜீவ்காந்தி அவர்கள்
இந்தியப்பிரதமர்
புதுடில்லி
கனம் பிரதம மந்திரி அவர்களே...
யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மிகவும் ஆபத்தான பாரதூரமான நிலைமையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
இந்திய அமைதி காக்கும் படைகள் விடுதலைப்புலிகள் மீது போர்ப்பிரகடனம் செய்து இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. தற்பாதுகாப்பிற்காகவும் எமது போராளிகளையும் பொதுமக்களையும் காப்பதற்காக நாம் இந்தியா மற்றும் சிறீலங்கா இராணுவங்களை நாம் எதிர்த்து போராட நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளோம்.
மக்கள் ஆதரவு பெற்ற விடுதலை இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கம் மீது இந்திய அரசு யுத்தம் தொடுத்துள்ளதால் எமது மக்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்கம் மீது பிரகடனப் படுத்தப்பட்டுள்ள இந்தப்போரானது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படைகளையே மீறுவதாக அமைந்துள்ளது. எமது மக்களின் கருத்தும் அதுவாகும்.
இந்தியப் படைகளும் சிறீலங்கா இராணுவமும் கூட்டாக சேர்ந்து மேற்கொண்டுள்ள இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பொதுமக்களிற்கு பெரும் உயிர்ச்சசேதம் ஏற்படும் பேராபத்து உருவாகியுள்ளது.இதனால் எழும் பாரதூரமான விளைவுகளிற்கு இந்திய அரசே பொறுப்பேற்கவேண்டும்.
இந்திய மக்கள் மீது எமக்குள்ள நல்லறவின் அடிப்ப்டையிலும் சமாதானமும் நல்லெண்ணமும் பேணப்படும் அவசியத்தை முன்னிட்டும் இராணுவ நடவடிக்கைகளை உடன் கைவிடும்படி இந்திய அமைதிப்படையை பணிக்குமாறு நான் உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப்புலிகள்
அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அன்றும் புலிகளின் வேண்டு கோள்களை ராஜீவ் காந்தி எவ்வளவு உதாசீனம் செய்தாரென்பதனை காலத்தின் தேவை கருதி இங்கு இணைக்கிறேன் .
0 comments:
Post a Comment