Tuesday, June 23, 2009

இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள் – பாகம்-5.


மனைவியைக் கூட்டிக் கொடுப்பதும் பதிவிரதைக்கு உயர் பண்பாடாகும். இயற்பகை நாயனார் தனது மனைவியையே கூட்டிக் கொடுத்ததால் 63 நாயன் மார்களில் ஒருவரானார். இதை நீங்கள் செய்யப் போகின்றீர்களா? பெண்கள் இதற்கு இணங்கப் போகின்றீர்களா? இன்று தேசங்களை ஏகாதிபத்தியத்துக்குக் கூட்டிக் கொடுக்கும் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை அரசுகளை மௌனமாக அனுமதிக்க போகின்N;றாமா? சிந்தியுங்கள் எதைச் செய்யப் போகின்றோம்?

பெண்கள் ஏன் பூச்சூடுகின்றனர் தெரியுமா? ஆண்களின் காமத்துக்கு, பெண்கள் தாங்களாகவே திரிவதாகக் காட்டி, அதற்குத் துணை போவதற்குமே. இந்தியப் பண்பாட்டின் சின்னமாகக் காட்டும் பெண்களின் தலையில் வைக்கும் பூ, ஆண்களின் காமத்தைத் தூண்டும் ஓர் ஊடகமாகும். மல்லிகை, முல்லைப் பூ காமத்தை ஏற்படுத்தும் மணம் கொண்டது என்ற அடிப்படைக் காரணத்தைக் கொண்டே, அவை பெண்கள் தலையில் அணிவிக்கப்பட்டது. ஆண்கள் படுக்கையை நாடி வீடு வரும்போது, பெண்ணின் கடமையை ஊக்குவிக்க, பூ கொடுக்கும் அதேநேரம் ஆணின் காமத்தை ஏற்படுத்த உதவுவதாகவே இந்த ஆணாதிக்கப் பண்பாடு காணப்படுகின்றது. இதில் இருந்தே கன்னிப் பெண்கள் மல்லிகை, முல்லைப் ப+ச்சூடக்கூடாது என்ற வழக்கமான ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றது.

காமதகனம் காமத்தைத் தடுக்க இந்து ஆணாதிக்க வழியாகக் கொண்டாடும் விழாதான் ~காமூட்டி கொளுத்துதல்| ஆகும். சிவனின் தவத்தைக் குலைக்க மன்மதன் காமத்தைச் சிவன் மீது ஏவியதாகவும், சிவன் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்ததாகவும் கூறும் கதையை அடிப்படையாகக் கொண்டு, ~காமூட்டி கொளுத்துதல்| விழாவாக இருக்கின்றது. இன்றைய பூர்சுவா பெண்ணியவாதிகளும், ஓரினச் சேர்க்கையாளரும் ஆணாதிக்கத்தை ஒழிக்க முன்வைக்கும் வழிகளைப் போல், இந்து ஆணாதிக்கம் வைக்கும் கூத்துதான் இது.

தீபாவளியாகக் கொண்டாடும் நரகாசுரன் வதையை இந்துமதம் எப்படி வக்கிரத்து உருவாக்கியது எனப் பார்ப்போம். பூமியைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள் அசுரன் ஒருவன் ஒளித்து விட, விஷ்ணு மூன்றாவது அவதாரமாகப் பன்றி அவதாரம் எடுத்து மீட்டு வந்து, பூமாதேவியை விபச்சாரத் தளத்தில் புணர்ந்து நரகாசுரனைப் பெற்றதாக இந்துமதம் கூறுகின்றது. இந்தப் பிறப்பு எப்படிப்பட்டது. இன்றைய நவீன கொலிவூட் சினிமா பொலிஸ் படங்கள் போல், மீட்பவர்கள் அப்பெண்ணைப் புணர்வது என்ற வடிவில் பூமியைப் புணர்வதாகக் கதை உள்ளது. ஆணாதிக்கக் கண்ணோட்டப்படி, மீட்கப்படுவது எப்போதும் பெண். மீட்பவர் எப்போது ஆண். மீட்ட பின் எப்போதும் புணர்வது என்று உலகப் பண்பாடு ஒரே பொதுக் கண்ணோட்டத்தில் காணப்படுகின்றது. இந்த இயற்கை பற்றிய ஆணாதிக்க இந்துமதக் கண்ணோட்டத்திலும் பிரதிபலிக்கின்றது.

விஷ்ணுவின் கற்பழிப்புக் கதையைப் பார்ப்போம். பத்மப்புராணம் உத்தரக் காண்டம் 263 இல், ஞானி ஜலந்தரின் மனைவி விராந்தா மீது ஆசைப்பட்ட விஷ்ணு அவள் கற்பைச் சூறையாடத் தீர்மானித்தார். அதன்படி அவளை ஏமாற்றிக் கற்பழித்தார். இதையடுத்து விராந்தா கோபத்துடன் சபித்ததைப் பார்ப்போம்;. ''ஓ, விஷ்ணு! பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது உனக்கு வெட்கமாக இல்லையா? ஞானிபோல் தோற்றமளிக்கிறாய்; த்தூ, கடைகெட்ட குற்றவாளி"27 என்று சபித்தாள். கடவுள்களின் கற்பழிப்பை இந்து மதம் நியாயப்படுத்தும்போது, பெண்கள் எப்படி இந்து இராஜ்ஜியத்தில் கற்புரிமையைப் பாதுகாக்க முடியும். இந்து மதம் ஆணாதிக்க மதம் அல்லவா?

எதிரியைத் தோற்கடிக்க எதிரியின் மனைவியைக் கற்பழிக்குமாறு சிவன் வழிகாட்டுகின்றார். இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம். சங்காசுரன் என்ற அசுரனைக் கடவுளால் கொல்ல முடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தைக் கண்டறிந்தாராம். சங்காசுரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியைக் கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். இதன் பின் துளசி உண்மை அறிந்து ''ஓ, சிவனே, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாகப் போ!"27 என்று சபித்தாள். மகாபாகவதப் புராணம் (9,24,25) இல், கீழ்ச் சாதிப் பெண் இகழ்ந்தாலும், மேல் குலத்தைச் சேர்ந்தவன், பெண்ணின் கற்புரிமையை அழிக்க தர்மசாஸ்திரம் அங்கீகரிப்பதுடன், இது மேல் சாதிப் பிரிவுக்குப் பெருமையைக் கொடுப்பதாகும் என்று விளக்கி கற்பழிப்பை ஊக்குவிக்கின்றது. துளசி கீழ்ச் சாதிப் பெண்ணாக இருப்பதால் அவளைக் கற்பழித்த சிவனின் வெற்றியை இந்து மதம் போற்றுகின்றது. இதைப் புராணமாகக் கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து ஆணாதிக்க மரபில் அங்கீகரிக்கின்றோம். இந்த இந்து மதத்தைப் பெண்கள் எப்படிப் போற்றமுடியும்?

சங்கரனின் (சிவனின்) காமம் பெண்களை ஓட வைக்கின்றது. சிவனுக்குக் காமம் ஏற்பட மோகினியைக் கட்டிப்பிடிக்க அவள் தப்பி ஓடினாளாம். அதை மகா பாகவதப் புராணம் பெண் யானையைக் காமம் பிடித்த ஆண் யானை விரட்டுவது போல், மோகினியைச் சங்கரன் துரத்திச் சென்றாராம். வீதிக்கு வீதி இன்று ஆணாதிக்க வக்கிரத்தால் காமம் மேலிட, வதைக்குள்ளாகும் பெண்கள் படும்பாட்டை நாம் அறிவோம். ஆனால் நாம் வழிபடும் கடவுள் சிவனும் இதைத்தான் செய்தான் என்று தெரிகின்றபோதும், அதை நியாயப்படுத்தும் போதும், இதைச் சகித்து வழிபடுவது கேவலமானது. இது பெண்களைக் கற்பழிக்க மறைமுகமாகவும், நேரடியாகவும் துணைபோவதாகும். என்ன செய்வது என்பது எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும்.

கடவுள்களின் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) கூட்டுக் கற்பழிப்புகளுக்கு ஊடாகவே இந்துமதம் வக்கரித்து உருவானது. பாவிஸ்ய புராணத்தில் அத்திரி மாமுனிவரின் மனைவி அனுசூயாவின் அழகில் காமம் கொண்ட பிரம்மா, விஷ்ணு, சிவன் கூட்டாகச் சேர்ந்து கட்டிப்பிடித்து கற்பழிக்க முயன்ற போது அனுசூயா சபித்தாள். சாதாரணப் பெண்கள் ஆணாதிக்கக் கடவுள்களின் கற்பழிப்பு முயற்சிகள், கற்பழிப்புகளில் பிழைத்து வாழ்வது என்பது பெரும் போராட்டமாகவுள்ளது. இன்று அந்தக் கடவுள்களின் பெயரில் கற்பழிப்புகள் மற்றைய மதப் பெண்கள் மீதும், சாதி குறைந்த பெண்கள் மீதும் சர்வசாதாரணமாக நிகழ்கின்றது. இதுதான் இந்துமதத்தின் ஆணாதிக்க ஜனநாயகம்.

மகளுடன் உறவு கொண்ட பிரம்மன். பிரம்மன் தன் மகள் சரஸ்வதியுடன் உறவு கொண்டதாக ஸ்ரீமாதா பாகவதம் 3ஆவது காண்டம் 12 ஆவது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது. ஆணாதிக்க வக்கிரங்கள் சொந்த மகளையும் விட்டுவிடுவதில்லை என்பதை அண்மைய ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. அது இன்று பெண்களாலும் நடத்தப்படுமளவுக்கு ஆண் - பெண் என்ற விதிவிலக்கு இன்றி தொடருகின்றது. வரைமுறையற்ற பாலியல் நிலவிய சமூகத்தில் இருந்து வளர்ச்சி பெற்று ஆணாதிக்க அமைப்பு உருவான பின்பு, மகளைத் தந்தை உறவு கொள்வது என்பது வக்கரித்துப்போன சமூக நிகழ்வாகும். உலகளவில் பாலியல் நெருக்கடி வளர்ச்சி பெற, சொந்தக் குழந்தைகளைப் பலியிடப்படுவது சர்வ சாதாரணமாக நிகழ்கின்றது. இந்து மதம் இதைத் தனது புராண இதிகாசங்கள் ஊடாக நியாயப்படுத்தி ஊக்குவிக்கின்றது.

கற்பழித்த பின் கொன்ற விஷ்ணுவின் பின்னால் ஊடுருவி நிற்பது அற்பத்தனமான ஆணாதிக்கக் காமமே. இந்திரனுக்கு ஆதரவாக நிரபராதியான பராகுவின் மனைவியின் தலையை வெட்டி எறிந்தான். இதை அடுத்து பராகு சபித்ததைப் பார்ப்போம். ''ஓ, விஷ்ணு! மாதர் குலத்தைக் கொல்லலாமா? ஒரு பாவமும் அறியாத ஒரு பெண்ணை ஒழுக்கக்கேடு விளைவித்தப் பின் கொன்று விட்டாயே. தமோ குணம் உள்ள கெட்ட குணமிக்கவனே! நீ பாம்பு போல் நடந்து வருகிறாயே!" என்று பார்ப்பன ஆணாதிக்கச் சதிராட்டத்தை வெட்டவெளிச்சமாக்குகின்றான்.

முப்பத்து முக்கோடி தேவர்களின் குருநாதர் பிரகஸ்பதியின் ஒழுக்கம் என்ன? ஸ்கந்த 9, அத்தியாயம் 20 இல், நாதர் பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, முறைகேடாக உறவு கொண்டு பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவார். இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன் என்பதைத் தேவி பாகவதப் புராணம் விளக்குகின்றது. இந்தப் பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறியபோது உருவானவரே, வேதவிற்பன்னர் துரோணர் என்று மகாபாரதம் ஆதிபர்வதம் அத்தியாயம் 131இல் கூறுகின்றது. எப்படி இருக்கிறது இந்து புராணங்கள். கொஞ்சம் சிந்தியுங்கள். ஆணாதிக்க இந்துமதத்தின் பிறப்புகளே விசித்திரமான வக்கிரமாகும்.

தேவேந்திரனின் கள்ள உறவுகளும் வைப்பாட்டித்தனமும் பற்றி வால்மீகி இராமாயணம் பாலசர்கா 48 இல், கூறி நியாயப்படுத்துகின்றது. வேத ரிஷிகளில் சிறந்த கௌதம ரிஷியின் பத்தினி அகல்யாவுடன் பாலியல் சுகம் அனுபவித்த பின், அவளின் இன்ப நிலையில் தேவேந்திரன் விடைபெறுகின்றான்;. பெண்களின் இயற்கையான பாலியல் தேவைகளை மறுத்து, வைப்பாட்டித்தனம் ஆண்களின் வக்கிரத்தில் உருவாகி இருப்பதற்கு இந்தியாவில் இந்து மதம் காரணமாகும்;. கடவுள்கள் என்று போற்றி வழிபடும் ஆணாதிக்க வக்கிரம் பிடித்த கதைகள் இதன் மூலமாகி ஆதாரமாகின்றது.

பெண்ணைக் கடத்திச் சென்று கற்பழித்து சுகம் அனுபவித்த கடவுள் சந்திரன். திரிபுவனம் வெற்றி கிடைத்ததையடுத்து சந்திரன் இராஜசூய யாகம் செய்தார். இந்த நேரம் சந்திரன் தனது குருநாதர் பிரகஸ்பதியின் மனைவி தாராவைப் பலாத்காரமாகத் தூக்கிச் சென்றான்;. இந்தக் கட்டத்தில் அசுரர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் இப்பெண்கடத்தல், தேவர் அணியைப் பிளந்து விடும் என்று கருதி சந்திரனுக்குப் பிரம்மன் புத்தி கூறியதன் பேரில், தாரா விடுவிக்கப்பட்டாள். ஆனால் சந்திரன் பலாத்காரமாக உறவு கொண்டு பிறந்த குழந்தை புத்தாவைக் கொடுக்க மறுத்துவிட்டான். இதன் மூலம் இந்து மதம் ஆண்களுக்குக் கூறும் போதனை, பெண்களைக் கடத்திச் சென்று ஆணாதிக்கச் சுவைகளை அனுபவியுங்கள் என்பதே.

சாதி கடந்த வசிட்டரின் ஆணாதிக்க அத்துமீறல் பெண்களின் கற்புரிமையைச் சூறையாடுவதாக இருந்தது. விஷ்ணுவின் அவதாரப் புருஷன் இராமச்சந்திரபிரபுவின் குரு வசிட்டர், சாதி குறைந்த பெண் அஷ்கமாலாவின் மீது காமம் கொண்டு சூறையாடினான். இந்த வசிட்டரின் காம லீலைகளைப் போட்டிக்காரரான விசுவாமித்திரன் புட்டு வைக்கின்றார் மகாபாரதம் ஆதி பர்வதம் அத்தியாயம் 27 இல்.

விசுவாமித்திரனின் கட்டற்ற பாலியல் நடத்தையை ஆராய்வோம். தவம் இருந்த விசுவாமித்திரன் மேனகாவைக் கண்டு மயங்கி காமம் கொண்டு உறவாடினான். இந்த உறவால் சகுந்தலா பிறந்தாள். இந்தச் சகுந்தலா துஷ்யந்த மன்னனிடம் கண்ட இடத்தில் உறவு கொண்டு பாரதனைப் பெற்றாள். இப்படி தான் இந்து முனிகளின் உறவுகள், பழக்க வழக்கங்கள் காமத்தை அடிப்படையாகக் கொண்டு கண்ட இடத்தில் நடந்தது.

கண்ட இடத்தில் காமம் கொண்டு; உறவு கொண்ட மித்திர வருணன். வால்மீகி இராமாயணம் உத்தரக்காண்டம் சர்கா 55 இல், மித்திரவருணன் ஜலதேவதாவுக்குச் சென்றான். ஊர்வசி வருணாலயத்தில் குளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு காமம் கொண்டு உடலுறவு கொண்டான். இதனால் பிறந்த புத்திரர்களே மன்னர் நிமாவும், மகரிஷி வசிட்டரும்.

மானின் வயிற்றில் இருந்து பிறந்த ஸ்ரங்கி ரிஷி. ஒருநாள் விபாந்தக முனிவர் குளித்துக் கொண்டிருந்த போது, வனமோகினி ஊர்வசி அவர் அருகில் வர, காமம் கொண்ட முனிவருக்கு விந்து வெளியேறியதாம். அது தண்ணீரில் கலந்துவிட, அதை ஒரு பெண் மான் குடித்து கருவுற்று ஸ்ரங்கி ரிஷியைப் பெற்றதாம். மானில் இருந்து பிறந்ததால் இருகொம்பைக் கொண்ட அவருக்கு ~ஸ்ரஸ்ய ஸரங்கி| என்ற பெயர் வந்ததாம். இந்து மதத்தின் விசித்திரமான ஆணாதிக்க வக்கிரமான பிறப்புகளில் இது ஒன்று.

விதியின் பின்னால் ஆணாதிக்க வக்கிரத் தேவையை அனுபவிக்க முயலுதல். தேவி பாகவதப் புராணம் (6,26,36) இல், தேவர்களின் ஆலோசகரும், திரிகால ஞானியும், மகா பண்டிதரும், ஜோசியருமான நாரதர் சஞ்சய மன்னனைப் பார்க்கச் சென்றார். அந்த மன்னனின் மகள் சுதந்தியைக் கண்டு காமம் கொண்டு, இளவரசி என் மனைவியாகப் பிறந்து இருக்கின்றாள் என்ற திருவாய்மொழிந்தார். மன்னன் கோபம் கொண்டு குரங்கு முகத்தினனாக மாறு என்று சாபம் இட்டார். இன்றைய சாமிகள் போல் ஆணாதிக்கத் தேவைகளைப் பிறப்பின் தொடர்ச்சி, எனக்காகப் பிறந்தது போன்ற கடவுள்களின் மோசடிகளின் ஊடாக அனுபவித்ததையும், அதைக் கோரியதையும் இந்துமதப் புராணங்கள் நியாயப்படுத்தல்கள் ஊடாக அம்பலப்படுத்துகின்றன.

குருவுக்குப் போதை ஊட்டிவிட்டு அவரின் மனைவியுடன் கூடிக் குலாவுவதை இந்து மதம் நியாயப்படுத்துகின்றது. தேவி பாகவதப் புராணத்தில் கீரனாத் புத்திரன் சுதீஸ்னா தனது குருவுக்குப் போதையைக் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பின், அவரின் மனைவியுடன் உடலுறவு கொண்டு வந்தான்.

வேத வியாசர் தனக்குத் தானே புணர்ச்சி செய்த வக்கிரமான ஆணாதிக்க வெளிப்பாட்டை இந்துமதம் போற்றுகின்றது. தேவி பாகவதப் புராணம் (1,10,31,34,14,6) இல், இவர் தனக்குத் தானே காமச் சுகம் தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அக்னி, ஆரணி தேவதைகளை நினைத்து தனது ஆணாதிக்க வக்கிரத்தினூடாகத் தனக்குத் தானே புணர்ச்சி செய்தார். இதனால் வெளியேறிய விந்தில் இருந்து ~சுகா| என்ற புத்திரன் பிறந்தான். வேத வியாசர் சந்திரவன்சாவை மனைவியாகக் கொண்டிருந்த அதே நேரம், கிராதலி என்ற விபச்சாரியுடன் உறவு கொண்டார். இந்து மதத்தின் மகிமைகள், அற்புதங்கள் இவை. வக்கிரமான ஆணாதிக்க முகங்கள் இவை.

இலட்சுமியின் கற்புரிமையும், பெண்ணின் ஆணாதிக்கச் சந்தேகங்களையும் தேவி பாகவதப் புராணம் தெளிவாக நிர்வாணமாக்குகின்றது. பெண்ணின் கற்பு பற்றி இந்து ஆணாதிக்கம் பெண்களுக்கு உபதேசிக்கும் வன்முறையைத் தாண்டி, இலட்சுமி விஷ்ணுவைத் திருமணம் செய்யும் முன்பே தனது கன்னி பருவத்தில் தேவேந்திரனால் பலாத்காரமாகக் கற்பழிக்கப்பட்டாள். இதைவிட ஒருநாள் துர்வாசமுனிவர் இந்திரனைப் பார்க்க வந்தபோது, இந்திரன் ஆணாதிக்கக் காமத்தில் இலட்சுமியை வெறித்து பார்த்தபடி இருந்ததால், வந்த முனிவரை வரவேற்கக்கூட முடியவில்லை. ஒருநாள் விஷ்ணு தனக்குள் தானே சிரித்து கொள்ள, இலட்சுமி சந்தேகப்பட்டு, ~உமது சிரம் துண்டிக்கப்படட்டும்|27 என்று சாபம் போட்டாள். ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் மீதான கற்பழிப்பு, வெறித்த காமப் பார்வைகள், பெண்ணின் சந்தேகங்கள் கடவுள்களையே விட்டுவிடவில்லை. சமூகத்தின் இயல்பான நடத்தைகளை, மனிதன் தான் கற்பனையில் உருவாக்கிய கடவுளுக்கும் பொருத்தியதன் ஊடாக அக்காலக்கட்டச் சமூகத்தைப் புரிந்து கொள்ள இவை உதவுகின்றன.

நன்றி: www.tamilcircle.net

- தொடரும்.


0 comments:

Post a Comment