Tuesday, June 23, 2009

இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள் – பாகம்-4.

அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத ''மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம்.

''சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்:அர்க்கபுஷ்ப

ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத்

மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன

தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"

அதாவது, சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண் விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான். பாலியல் வக்கிரத்தில் இருந்து வழிகாட்டும் இந்துமதம், எப்படிப்பட்டது என்பதற்கு இவைகளே சாட்சிகள். இந்த ஆபாசமான கூத்துகளைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதால்தான், சமஸ்கிருத மொழியில் ஆணாதிக்க ஆபாசமாக வக்கிர மந்திரம் சொல்லி மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கின்றனர்.

சிவனுக்குச் சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும்?

'

'... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே

மாரபுத்தம் ப்ரயூர் வதீம், தாம் த்யாயேத் ஸ்மோவதனாம்

விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ

பவேந்"

- என்று இந்துமத நூலான மஹோநதி கூறுகின்றது. இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடையவளுமான தேவியைத் தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.

இந்து மத சிவன் பக்தர்கள் முதல் அனைத்து பக்தர்கள் ஈறாக இதை எப்படிப் போற்றமுடிகின்றது? இவை பெண்கள் மீதான வக்கிரமான ஆணாதிக்கப் பார்வையில் இருந்தே, இந்துமதக் கோட்பாடுகள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து வக்கரித்து சொன்னவைகளேயாகும் என்பதை இது காட்டுகின்றது. இதையொத்த மற்றொரு வக்கிரத்தைப் பார்ப்போம்.

கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி நடு இரவில் நீராடி, சந்தனம் இட்டு, சிவந்த மாலை அணிந்து, சிவந்த உடையணிந்து தனியிடத்தில் இருந்து கொண்டு, இளமையும் அழகும் நிறைந்த ஐந்து ஆண்களைப் புணரக் கூடிய புன்சிரிப்பும் அவிழ்த்துவிட்ட கூந்தலையுமுடைய பெண்ணுக்கு, ஆடை அணிகள் கொடுத்து, மகிழ்ச்சியுண்டாக்கி, பின் அவளின் ஆடைகளை, அகற்றி நிர்வாணமாக்கிப் பூசிக்கவேண்டும். பின் அவளைப் புணர்ந்து பத்தாயிரம் மந்திரம் சொல்பவனுக்குச் செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்ல மனைவி கிடைக்கும். பாவங்கள் அவனை அணுகாது. ஆறுமாதம் காலையில் எழுந்து நூறு உரு ஜெபித்தால் சுக்கிராச்சாரியை விடச் சிறந்த கல்விமான் ஆவான். இவ்வாறு பூசா விதியையும் அதன் பலன்களையும் இந்து மதம் கூறுகின்றது.

புணர்வதற்கு, அதுவும் வக்கரித்து இவ்வாறு செய்வதன் ஊடாக நல்ல மனைவியை அடைவான் என்று கூறும் இந்துப் புரவலர்களின் ஆணாதிக்க வக்கிரங்கள்தான் இவை. சுக்கிராச்சாரி போன்ற மண்டைக் கிறுக்கர்களின் அறிவு உளறல்தான் இவை என்று இந்தக் கூத்தின் மூலம் அம்பலமாகின்றது. அதாவது அழகுராணி போட்டி போன்றனவற்றின் தோற்றத்துக்கு இந்துமதமே மூலமாகின்றது அல்லவா? ஆடை கொடுத்து, அதை விதவிதமாக அவிழ்த்துவிட்டு, இரசித்துப் புணருவதே இன்றைய ஏகாதிபத்திய அழகுராணிப் போட்டி. இதையே இந்து மதம் செய்து புணரும்போது அங்கு செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்ல மனைவி கிடைப்பாள் என்பதன் ஊடாக இருக்கும் ஒற்றுமைதான், அண்மையில் இந்தியாவில் நடந்த அழகுராணிப் போட்டிகளும் தெரிவுகளும்.

குழந்தை பெற வேண்டுமா அதற்கும் வழியை இந்துமதம் கூறுகின்றது. வேதங்கள் இதிகாசங்கள் கூறும் புத்திரக் காமேஷ்டி யாகத்தின் மூலம் எதைச் செய்யச் சொல்லுகின்றது எனப் பார்ப்போம்;. புத்திரன் வேண்டுபவன் தனது மனைவியைக் குதிரையின் அருகில் அனுப்பிவைப்பான். அவள் அருகில் சென்று,

'

'1. கணானாம் த்வா, கணபதிம் ஹவாமஹே (வஸோமம)

2. ப்ரியாணாம் த்வா: ப்ரியாபதிம் ஹவாமஹே (வஸோமம)

3. நதீனாம் த்வா நிதிபதிம் ஹவாஹமஹே (சோமம)"


- என்று கூற வேண்டும். இதன் அர்த்தம், ''ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றும் தலைவனும், பொருட்களின் தலைவனும் ஆகிய உன்னை அழைக்கின்றேன். நீ எனது கணவனாக இருக்கவேண்டும். பிறகு பெண் குதிரைக்கு அருகில் படுத்துக் கொண்டு, ''ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் இடுகிறேன். அதேபோல் நீயும் செய்ய வேண்டும்."37 இப்படி சொன்னவுடன் பெண்ணைத் துணியொன்றால் மூடிவிடவேண்டும். அவள் அதன்பின் ''விந்துவைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கின்ற குதிரை அதை என்னிடத்தில் வைக்கட்டும்;"37 பிறகு ஆண் குறியைத் தனது கையால் பெண் குதிரையின் யோனியில் வைப்பாள். பின் ஆண் குதிரையி;டம் சென்று, நான் செய்யும் காரியத்தை எனக்குப் பதிலாக நீ செய்ய வேண்டும் என்று வேண்டுவாள். இதையே யஜீர் வேதத்தில் புத்திரக் காமேஷ்டி செய்யக் கோருகின்றது. இராமனைப் பெற்ற மலட்டுத் தசரதன் செய்த யாகமும் இதுதான். இன்று குழந்தை வரம் வேண்டிக் கோயில் செல்லும் பெண்கள், மலட்டுக் கணவன் ஊடாக அல்லது ஆணாதிக்க வக்கிரத்தில் முன்கூட்டியே விந்தை இழக்கும் கணவனுக்குக் குழந்தையைப் பெற முடியாது. அவர்கள் கோயில் பூசாரிக்கு மட்டுமே குழந்தையைப் பெற்றுப் போடமுடியும்.


குழந்தை பெற இந்து மதம் மிருகத்துடன் புணரும்படி முன்வைக்கும் இந்து வேத வக்கிரங்களில், உண்மையில் யாகம் செய்யும் முனி பார்ப்பனர்களின் ஆணாதிக்கக் காம இச்சையை அப்பெண்களிடம் தீர்க்கும் மாற்று வழியாகும். இந்தப் பார்ப்பனர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருந்ததுடன், பார்ப்பனர்களைப் புணர்வது பெண்களின் புண்ணியத்தைக் குறிக்கும் என்ற இந்துப் பண்பாடுகளும் சமுதாயத்தில் இருந்துள்ளது. இழந்துபோன பல சொர்க்கத்தை மீளக் கொண்டு வரும் இந்து இராஜ்ஜியக் கனவை அடிப்படையாகக் கொண்டே, இன்று மீளவும் பாசிசச் சதிராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

தங்கமும் வெள்ளியும் உருவான வக்கிரத்தைப் பார்ப்போம். மகாவிஷ்ணு மோகினி வேஷம் போட்டு அசுரர்களை மோகிக்கும் படி செய்வதாக அறிந்த பரமசிவன், கைலாயத்தில் இருந்து பார்வதியுடன் அவரைக் காணச் சென்றாராம்.

அவரிடம் மோகினி வேஷத்தைப் பார்க்க வேண்டும் என்று சிவன் கேட்டாராம். அதற்கு மகாவிஷ்ணு, காமுகர்தான் அதை வணங்கி மோகிப்பர் என்ற கூறி மறைந்தாராம்.

சிவன் அவரைத் தேடியபோது, பெண் வேஷத்தில் பெண்கள் விளையாடிக் கொண்டிருந்த மைதானம் ஒன்றில் நின்றாராம். சிவன் மகாவிஷ்ணு மீது மோகம் கொண்டு மனைவி உமாதேவி நிற்பதையும் கூட எண்ணாது காமம் கொள்ள, மகாவிஷ்ணு பந்தடிக்கும் கவனத்தில் ஆடையை நழுவவிட்ட நிலையில், சிவன் நிற்பதைக் கண்ட மகாவிஷ்ணு என்ற மோகினி மரத்தின் பின் ஒளிந்தாள். சிவன் அவளைப் பிடிக்க அவள் திமிரியபடி நிர்வாணமாகத் தலைவிரி கோலமாக ஓட, சிவன் துரத்திய படி தன்னுடைய ஆண்விந்தைக் காம வெறியில் சிதறவிட்டபடி துரத்தினர். விந்து வெளியேறிய நிலையில் மகாவிஷ்ணு மறைந்து போனாராம். சிவனின் விந்து எங்கு எங்கெல்லாம் விழுந்ததோ, அவைதான் தங்கம், வெள்ளியாகிப் போனதாம். நம்புங்கள்; இந்த இந்து மத வக்கிரத்தை.

பெண்கள் நீராடி, அழகுபடுத்தி தலையவிழ்த்து கோயில் செல்லும் போது, வீதி தோறும் நிற்கும் ஆணாதிக்கச் சிவன்கள் எல்லாம் இந்தக் கூத்தைத்தான் செய்கின்றனர். கும்பிடும் கோயில் சிற்பங்கள் புணர்வின் வக்கிரத்தில் பக்தியின் பின்னால் அரங்கேற்றுவதையே இந்துமதம் எமக்குப் போற்றித் தருகின்றது. ஆணாதிக்கச் சிவன் தனது மனைவியைத் தாண்டி மற்றைய பெண்களைப் புணரும் தன்மையும், வக்கிரமும் நியாயப்படுத்தும்போது உரிமை மறுக்கப்பட்ட பெண் கவர்ச்சியால் எதையும் சாதிக்க முடியும் என்கின்றது.

உலகத்தைக் கடவுள் படைத்தான் என்ற கற்பனைகள் போல், தங்கம் வெள்ளி கதையும், இந்து மதத்தின் பொய்மையை ஆணாதிக்க வக்கிரத்தினூடாக அம்பலப்படுத்துகின்றது. பெண்கள் தமது மார்பை இந்தா பிடி என அழைப்பவர்கள் என்று கருதும் ஆணாதிக்க ஆண்கள் சிவனின் அதே வாரிசுகள்தான். இன்று சினிமா முதல் ஆணாதிக்கப் பண்பாட்டுத் தளம் பெண்ணின் மார்பைச் சிவனைப் போல், மோகித்து காட்டும் எல்லா விளம்பர மற்றும் கலை இலக்கியக் கோட்பாடுகள் வக்கிரத்தின் உச்சமான பன்றித்தனமாகும்;. இன்றைய ஜனநாயகச் சமுதாயம் ''காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும், துயரத்தை விரக்தியாகவும்" (ஏப்பிரல் மே 2000) மாற்றிவிடும் இன்றைய பண்பாடுகளின், இறுகிய ஆணாதிக்க வக்கிரத்தையே அன்று முதல் இந்துமதம் உருவாக்கி வளர்த்தெடுத்தது. நீங்கள் கழுத்திலும், மார்பிலும் தவளவிடும் தங்கம், வெள்ளி எல்லாம், சிவனின் விந்தாக இருப்பதையே இந்து மதம் பெண்களுக்கு அறிவ+ட்டுகின்றது. இந்து மதத்தை வழிபடும் மானம் வெட்கமற்ற ஆண்கள், குறிப்பாகப் பெண்கள் இதைச் சகித்துக் கொள்ளலாம்;. ஆனால் அறிவுள்ள மானவெட்கம் உள்ளவன் இதை எப்படி சகித்துக் கொள்வது. இதை வேரறுக்க இந்து மதத்தையே நொறுக்கவேண்டும்.

அருணகிரிநாதர் என்ற நாயனார் ஆயிரம் ஆயிரம் பெண்களிடம் அற்பத்தனமான பாலியல் சுகம் கண்ட ஆணாதிக்க வெறியன் என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லையென்றால் அவனின் ஆணாதிக்க வரலாற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ராகு, கேது பிறப்பு எப்படிப்பட்டது? தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனராம். அப்போது அழகிய பெண்களும், அமிர்தமும் கிடைக்க, தேவர்கள் அமிர்தத்தையும், அசுரர்கள் பெண்களையும் விரும்பினராம். மகாவிஷ்ணு பெண் வேடத்தில் தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறினாராம். அப்போது இரண்டு அசுரர்கள் கள்ளத்தனமாகத் தேவருடன் அமர்ந்து விருந்து உண்டனராம். இதை அருகில் இருந்த சந்திரன் காட்டிக் கொடுக்க, மகாவிஷ்ணு அமிர்தம் பரிமாறும் அன்னவெட்டியால் அசுரர்களை வெட்டினராம். இந்த அசுரர்களில் ஒன்று அசுரப் பாம்பாம். மற்றது அசுர மனிதனாம். அமிர்தம் உண்டதால் அவர்கள் இறக்கவில்லை. வெட்டுண்ட தலையை மாற்றிப் பொருத்திவிட்டதால், தலைமாறி ராகு கேதுவானார்கள்;. நம்புங்கள். மக்களின் பல்வேறு வழிபாட்டு முறைகளைப் பார்ப்பனிய இந்து மதம் செரித்தபோது, இந்தமாதிரிப் புனைக் கதைகள் மூலமே பிறப்பு பற்றிக் கூறிச் சிறுவழிபாடுகளை அழித்தனர்.

இங்கு கடைந்து கிடைப்பது பெண்ணாக இருப்பதும், அதை விரும்பியவாறு பயன்படுத்த முடியும் என்ற புராண இதிகாச விளக்கங்கள், பெண்ணின் சுயத்தை அழித்து அடிமைப்படுத்துகின்றன. பெண்ணை ஒரு மனிதப் பிறவியாகவே மதிக்க மறுக்கின்றது இந்து மதம். அதைப் போற்றும்போதே ஆணாதிக்க வக்கிரம் கொப்பழிக்கின்றது.

தேய்பிறை வளர்பிறை பிறந்த வரலாற்றைப் பார்ப்போம். சந்திரனுக்கு இறைவன் அருளியதாகக் கூறும் கீதையில், மிகப் பெரிய நட்சத்திரம் சந்திரன் என்று அறிவியலுக்குப் புறம்பாகக் கூறுகின்றது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்து மத விளக்கப்படி 27 மனைவிமார் இருந்தும் சந்திரன் ரோகினி என்ற பெண் மீதே அதிக அன்பாக இருந்தானாம். மற்றவர்களை ஏறுஎடுத்தும் பார்ப்பதில்லை. இந்தப் பெண்களுக்கு இன்றைய பெண்ணியவாதிகள் கோரும் ஓரினச் சேர்க்கையைப் பற்றித் தெரியாததாலோ என்னவோ, தந்தை தக்கனிடம் போய் முறையிட, தந்தை சந்திரனுக்குத் ''தேய்ந்து அழியக் கடவது" எனச் சாபம் போட்டதால் தேய்பிறையானதாம். இதனால் சிவனிடம் போய் முறையிட, அந்த ஆணாதிக்கச் சிவன் தனது தலையில் அணிந்து, ''வளரக் கடவது" என்று சாபம் போட்டாராம். பெண்ணின் பாலியல் பிரச்சினைக்கு, இன்றைய பெண்ணியவாதிகளின் ஆண் எதிர்ப்பு போல், சுடச்சுடத் தீர்வு கொடுத்த தக்கன் இன்றைய பூர்சுவா பெண்ணியவாதிகளின் மேதையல்லவா?

முனிவர்கள், ரிஷிகள் பிறந்த வரலாறே வக்கிரமானது. இந்து புராண, இதிகாச மேதைகளின் பிறப்புகளை ஆராய்வோம்.

''கலைக் கோட்டு ரிஷி மானுக்கும், கௌசிகர் குசத்திற்கும், ஜம்புகர் நரிக்கும், கவுதமர் மாட்டிற்கும், அகஸ்தியர் குடத்திலும், மாண்டவியர் தவளைக்கும், காங்கேயர் கழுதைக்கும், கவுனர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், சுகர் கிளிக்கும், ஜாம்புவந்தர் கரடிக்கும், அஸ்வத்தாமன் குதிரைக்கும்"38 பிறந்தாக இந்;து புராணங்கள் கூறுகின்றன. இந்து பார்ப்பனப் புராண இதிகாச நாயகர்களின் தாய், அவர்களை யாருடன் இணைந்து பெற்றாள் என்பதை ஆணாதிக்க அடிப்படையில் விளக்க முடியாத பெண்ணின் புணர்ச்சி வடிவத்தை, மனிதன் அல்லாத மிருகப் புணர்ச்சியூடாக விளக்கியது. பரிசுத்த ஆவி இயேசுவின் தாய் மரியாவின் வயிற்றில் புகுந்ததால் இயேசு பிறந்தார் என்ற ஆணாதிக்க விளக்கம்போல், இந்த விளக்கம் மிருகப் புணர்ச்சியாக்கிவிடுவதில், தனது ஆணாதிக்க விளக்கத்தை இந்து மதமாக்கியது. பாலியல் நெருக்கடியால் ஆண்கள், பெண்கள் மிருகப் புணர்ச்சியில் ஈடுபடுவது இன்றைய எதார்த்தம்;. அண்மையில் பிரஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகையிடம் கேட்ட கேள்வி, நீங்கள் வளர்ப்பு மிருகத்துடன் புணர்வதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? இதை நீங்கள் செய்கின்றீர்களா? இன்று பல்வேறு வகையில் மனிதப் பெண்ணும், மிருகப் பெண்ணும் பெற்றெடுக்கும் குழந்தை, குட்டி மனித உருவத்தை ஒரு பகுதி கொண்டிருப்பதை அறிகின்றபோது, மனித - மிருகப் புணர்ச்சி அம்பலமாகின்றது.

பட்டினத்தாரின் ஆணாதிக்கம் பற்றிப் பார்ப்போம். ஒருநாள் பட்டினத்தார் விபச்சாரி வீட்டுக்குச் சென்றாராம்;. விபச்சாரியின் மகள் மேல் ஆசைப்பட்டு, அவளைப் புணர அழைத்தாராம். அவள் அம்மாவிடம் கேட்டு வருவதாக உள்ளே செல்ல, பட்டினத்தாருக்கு விந்து வெளியேறிவிட்டதாம். அந்த விந்தை ஒரு எருக்கந் தொன்னையில் பிடித்து வைத்திருந்தாராம். தாயின் சம்மதம் பெற்று வந்த மகள் புணர அழைத்தாளாம். அதற்குப் பட்டினத்தார் கோபத்தோடு ''உன்னை அழைத்தவன் தொன்னையிலே, என்னிடம் வந்தால் இடுப்பை ஒடித்து விடுவேன்"38 என்று கூறிவிட்டுச் சென்றாராம். அப்பெண் விந்து வீணாகக் கூடாது என்று நினைத்து, வாயினூடாக எடுத்து விழுங்கினாளாம்;. இதனால் அப்பெண் கருத்தரித்து குழந்தையைப் பெற்று எடுத்ததாக இந்துமத வரலாறு கூறுகிறது. நம்புங்கள்;. திருமணம் செய்யாது கருத்தரிக்கும் பெண்களே, உங்கள் நிலையை இந்துப் பண்பாட்டு ஆணாதிக்கத்திடம் சொல்லிப் பாருங்களேன் என்ன நடக்கின்றது எனப் பார்ப்போம். பெண்கள் பார்ப்பனச் சந்நியாசிகளுக்குப் பாய் விரித்துப் படுக்க வேண்டும் என்பதையே இது கோருகின்றது. இன்று இந்து இராஜ்ஜியமும், இந்த வக்கற்ற பண்பாட்டை ஏற்படுத்தி ருசிக்கவே படாதபாடு படுகின்;றது. விபச்சாரம் செய்யும் பட்டினத்தாரைப் போற்றுவதன் மூலம், சொந்தக் கணவனின் வைப்பாட்டித்தனத்தையும், விபச்சாரத்தையும் விமர்சனம் இன்றி அங்கீகரிக்க இந்துப் பண்பாட்டு விளக்கங்கள் வழிகாட்டுகின்றது.

குரங்கின் முகம் ஏன் இப்படி போனது தெரியுமா? இந்து மத விளக்கத்தைப் பார்ப்போம்;. இராமனை வழிபடும் அனுமானின் வழியில் வந்த குரங்கு ஒன்று, ஒருநாள் சூரியனின் செந்நிறத்தைக் கண்டு, அதை ஒரு பழமாகக் கருதி, அதன் மீது பாய, அது முகத்தைச் சுட்டுப் பொசிக்கிவிட குரங்கின் முகம் பொசுங்கிவிட்டதாம். பாவம் குரங்கும் இந்து பக்தர்களும். அனுமானை வழிபட்ட இந்து பக்தர்களின் முட்டாள்த் தனமல்லவா இங்கு சந்தி சிரிக்கின்றது.

வெள்ளைக்காரன் பிறப்பை ஒட்டி இந்துமதம் ''நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று ஒரு பிராமணன் தவம் இருக்கின்றான். உனக்கு நல்ல குழந்தை பிறக்கும் என்று சொல்லி கடவுள் அவனுக்கு வரம் கொடுக்கின்றார். ஒரு பெண்ணோடு சேர்ந்தால்தான் குழந்தை பிறக்கும். வேறு ஒன்றும் வழி கிடையாது. கடவுளின் ஆசீர்வாதத்தால் விந்து வழிந்து அவன் இருந்த இடத்திலேயே கீழே விழுந்து விடுகின்றது. ஒரு கொக்கு அதை எடுத்து சாப்பிட்டுவிட்டது. அந்தக் கொக்கின் வயிற்றில் பிறந்ததனால் வெண்காலியன். கொக்கு வெள்ளையாக இருப்பதால் வெள்ளைக்காரன், வெள்ளையாக இருக்கின்றான்."

எப்படி இருக்கின்றது இந்துமதப் புரட்டுகள். ஆணாதிக்கப் பாலியல், ஆண்களின் விகாரமான போக்கையும் அதன் கொப்பளிப்பையும் காட்டுகின்றன.

நாடார் சாதி மக்களைப் பார்ப்பனியம் இந்துமதத்துக்கு மாற்றியபோது, அடித்தட்டு மக்களின் வழிபாட்டுக் கடவுள்களையும் புணர்ந்து உறவுகளை உருவாக்கினர். இந்தவகையில் பத்திரகாளியின் தோற்றமும் விகாரமாக்கப்பட்டது. பனை சார்ந்து உழைப்பில் வாழ்ந்த மக்கள், தாம் வழிபட்ட கடவுளுக்குப் பனையை ஒட்டி பத்திரகாளி என்ற பெயரை வைத்தனர். இந்த வகையில் நாடார் சாதி மக்களின் பிறப்பை ஒட்டி ''மகாவிஷ்ணு, வித்தியாதர முனிவர் வேடமிட்டு ஏழு கன்னிகளைப் புணர்ந்து அதில் பிறந்த குழந்தைகளும், அவர்களுடைய வாரிசுகளும் தான் நாடார்கள்... அண்ணனாகிய மகாவிஷ்ணுவின் வேண்டுகோளுக்கு இணங்க தங்கை பத்திரகாளியால் வளர்க்கப்பட்ட..."28 மக்கள்தான் நாடார் என்று கடவுள்களின் விளக்கங்களைக் கேட்க வேண்டியுள்ளது. இந்துப் பிறப்பில் பிறந்ததாகக் கூறும் நாடார் சாதி மக்கள் மீது திருவிதாங்கூர் அரசு தலைவரி, முலைவரி என எண்ணற்ற வரிகளை விதித்தது. அதாவது மார்பை மறைப்பதற்கும் வரி. வரிகட்டமுடியாதவர்கள் மார்பை மறைக்க முடியாது. இது ஆணாதிக்க இந்து சாதிச் சட்டமாக இருந்தது.

பதிவிரதையாவதற்;குப் பெண்கள் செய்யவேண்டியது, கடவுள்களின் காமக் கற்பழிப்புகளுக்கு எதிர்ப்பின்றி இணங்கிப் போவதாகும். கடவுளான இந்திரன் அகலிகையைக் கற்பழித்ததை நியாயப்படுத்தி, அகலிகையைப் பதிவிரதை ஆக்கியது இந்துமதம். இந்திரனின் வாரிசுகளான பார்ப்பனர்களின் கற்பழிப்புக்குப் பெண்கள் இணங்கி பாய் விரித்தால், உலகம் போற்றும் கற்புக்கரசியாக முடியும். அதைப் பார்ப்பனிய ஆணாதிக்க இலக்கியம் புகழும். பெண்களே என்ன செய்யப் போகின்றீர்கள்? எதிர்த்து நிற்க போகின்றீர்களா? அல்லது இணங்கிப்போகப் போகின்றீர்களா?

நன்றி: www.tamilcircle.net

- தொடரும்.


0 comments:

Post a Comment