Showing posts with label பெண் புலிகள். Show all posts
Showing posts with label பெண் புலிகள். Show all posts

Wednesday, September 2, 2009

பிணங்களே உயிர்த்தெழுங்கள்…

முள்ளிவாய்க்காலில் பிணமான ஆயிரமாயிரம் பேரோடு பிணங்களான புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள். இன்னும் எம் உரிமைகள் கிடைக்கவில்லை. நீங்கள் வீதியில் இறங்கி போராடிய அந்த போராட்டத்தின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை. பாராம் என்று நீங்கள் சலித்து விட்டால் மீண்டும் மீண்டும் நாங்கள் அடக்கப்ட்டுக்கொண்டிருப்போம்.

எம் இனத்தில் குரல்கள் அடக்கப்பட்டுள்ளது. அதன் நியாயபூர்வமான கோரிக்கைகள் மறுதலிக்கப்படுகின்றது. அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த போதும் அது பற்றிய அக்கறையை காட்ட நீங்கள் யாரும் தயாராய் இல்லை என்பது வேதனையான விடயமாகும்.

ஆயுதப்போராட்டத்தில் முடிவு எம் ஈழப்போரின் முடிவு அல்ல. நாம் தொடர்ந்து நகரவேண்டும், எம் கனவுகள், எம் தேச மக்களின் சோகங்கள் எல்லாம் களைந்து எமக்கான தேசத்தை அடைய வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் தெளிவாயும் அதே நேரம் அதற்காய் அந்த இலக்கை அடைய தம்மை அர்ப்பணித்து பணியாற்ற தயராய் இருக்க வேண்டும்.

வீதிகளில் கொடிகளை கொண்டு விரைந்து வந்து நின்ற போது தமிழனின் ஒற்றுமை பற்றி பேசிய இந்த ஊடகங்கள், இன்று எம்மை பற்றி குறைந்த பட்ச செய்திகளை கூட கொண்டுவருவதில்லை. போர் இல்லாதவிடத்து தமிழன் என்பவனின் அடையாளம் அழிக்கப்பட்டிருக்கும்  ஆனால் இன்று அந்த விடுதலைப்போர் பின்னடைவைச் சந்தித்துள்ள இந்த வேளை நாம் அந்த இடத்தை நிரப்ப வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாக தம்மை அhப்;பணித்து மூன்று ஒரு சந்ததி போராடி அதன் இலக்கை அடையாது பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. முப்பதாயிரத்துக்கு அதிகமான இளைஞர்கள் யுவதிகள் தங்கள் உயிர்களை கொடுத்து சென்றுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கான மக்கள் இந்த போரின் போது தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதுமட்டுமன்றி, கோடிக்கணக்கான சொத்துக்களை நாம் இழந்துள்ளோம்.

ஊரிழந்து, சொந்த நாடிழந்து சிங்களத்தின் திட்டமிட்ட வல்வளைப்பால் நாங்கள் அகதியாக அடுத்தவன் நாடுகளின் வாழ்கின்றோம். இந்த வாழ்வு எமக்கு இனிக்கின்றது. ஆனால் சொந்த மண்ணில் அகதியாய் சிங்களவன் காவலுக்குள் எந்த நேரம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கும் லட்சக்கணக்கான மக்களை பற்றி கவலை இன்றி எம்மால் வாழமுடியுமா?

அவர்கள் எம் உறவுகள் என்றில்லை என்று சொல்லி ஒதுக்கிட முடியுமா? புலத்தில் அமிழ்த்தப்பட்ட போராட்டங்கள் மீண்டும் மீட்சி பெறவேண்டும்.

உறங்கு நிலையில் இருக்கும் இளையோர் அமைப்புக்கள் புலம் எங்கும் சிலருக்கும், சில அமைப்புக்களுக்கும் பின்னால் அணிதிரள்வதை விடுத்து எமது மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இளையோர் அமைப்பு முள்ளிவாய்க்காலின் அடுத்த நாளே செயல் இழந்து கிடப்பது வேதனை!

தலைவர் இளையோரை நம்பி ஒப்படைந்த போராட்டம் சிலரின் பதவி பசியால் வாடி வதங்கி அந்த இளைஞர்களின் உணர்வுகள் முடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இளையோரை நீங்கள் அடுத்த கட்ட தலைவர்கள், உங்களுக்குள் நிச்சயமாக பதவிச் சண்டைகள் இல்லை. சிலரின் இந்த சண்டைக்குள் நீங்கள் பலிக்கடாவாக்கப்படுகின்றீர்கள்!

எமது இனத்தின் ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே தலைவரின் சிந்தனையில் உதித்தது இளையோர் அமைப்பு!

அந்த அமைப்பு இன்று சிலரின் தலையாட்டு பொம்மையாக செயற்ப்படுவது வருந்தத்தக்கது. இந்நிலை மாற்றம் பெற்று இளையோர் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், இன்னும் இதர இளையோர் சம்பந்தமான கழகங்கள் மக்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னேடுக்க வேண்டும். அகதி முகாம்களுக்குள் முடங்கி கிடக்கும் உறவுகளை மனதில் வையுங்கள்! இன்னும் இன உணர்வுகளை கொச்சைப்படுத்தி சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்குள் உங்கள் உன்னத அமைப்பை அடகு வைக்காதீர்கள். பிணங்களாய் இருக்கும் அவர்களையும் உயிர்ப்பியுங்கள். நீங்களும் உயிர்த்தெழுங்;கள். முரணித்து போன எம் ஆயுத வழி போராட்டங்களோடு நீங்களும் பிணங்களாவதை விடுத்து அடுத்த கட்டம் நோக்கிய நகர்வை இளையோர் நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகின்றேன்.

கனடாவிலிருந்து ஆதவன்


Tuesday, June 30, 2009

இளமையை தொலைத்து… இன விடுதலை தேடி… பெருமிதம் கொள்ளச் செய்யும் பெண் புலிகள்.

p83a
‘அபிதா’…
- இது இலங்கை அரசுக்குச் சொந்தமான கப்பல். காங்கேசன் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த இந்தக் கப்பலைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது புலிகளின் திட்டம். ஏற்கெனவே ஒருமுறை புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிய கப்பல்தான் இது.
”நான் கப்பலை அடிக்கறப்ப… நல்லூர் முருகனுக்கு திருவிழா நடக்கும் காலமாய் இருக்கவேணும். ஏனெண்டால், அப்பத்தான் கடலை வித்து காசு வைச்சிருப்பா அம்மா. நீங்க என் சாவு செய்தியை அவகிட்ட சொல்லும்போது அவாளால ஒழுங்கா சோறு சமைச்சு சாப்பாடு போட முடியும்…”
- ‘கேப்டன் அங்கயற்கண்ணி’ என்றழைக்கப்படும் புஷ்பகலா துரைசிங்கம், தன் தோழிகளிடம் இப்படி சொல்லிக்கொண்டே இருப்பாள். சொன்னது போலவே 94-ம் வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் உடல் முழுக்க வெடிகுண்டுகளோடு நெடுந்தூரம் கடலில் நீந்திச்சென்று, அந்தக் கப்பலை மோதித் தகர்த்தாள். அவள்தான், தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முதல் பெண் கடற்கரும்புலி!
1985 ஆவணி 18… விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி அதிகாரப்பூர்வமாக கொடியேற்றித் தொடங்கப்பட்ட நாள். அதற்கு முன்பு புலிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்வது, இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்க நாடகங்கள் போடுவது என்ற அளவில் மட்டும் உதவிக் கொண்டிருந்தனர் பெண்கள்.
அன்றிலிருந்துதான் ஆயுதம் ஏந்தி நேரடியாக களத்துக்கு வந்தனர். வாழ்வைக் கொண்டாட வேண்டிய பதினெட்டு, இருபது வயது பருவத்தில், இளமையை தொலைத்து ‘எம் இனத்துக்கு ஒரு தேசம் வேண்டும்’ என்று தாயகக் கனவுகளை நெஞ்சில் சுமந்து, கையில் ஆயுதம் ஏந்திய பெண்கள் அவர்கள்.
இந்தப் பெண்களின் பெருமுயற்சியால் மட்டுமே விடுதலைப் புலிகள் வென்ற போர்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது ‘ஜெயசிக்குறு’ என்று அழைக்கப்படும் போர். நிலப்பகுதியை இரண்டாகப் பிரிக்கும் ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான சிங்களப் படையினரும், ஆயிரக்கணக்கான புலிகளும் ஈடுபட்டனர். அதில் ஏராளமானனோர் பெண் புலிகள்.
அது ஓரிரு நாளில் முடிந்த போரல்ல… ஒன்றரை வருடங்களைத் தாண்டியும் நீண்ட போர். மழைக் காலங்களில் பதுங்கு குழிகளுக்குள் தண்ணீர் நிறையும். கழுத்தளவு தண்ணீரில் நாள் கணக்கில் நின்று எதிரிக்கு குறி வைக்க வேண்டும்.
நூற்றுக்கணக்கான பதுங்குக்குழிகளை பெண்களே வெட்ட வேண்டும். இறுதியில் ஏ-9 நெடுஞ்சாலை புலிகளின் வசமானது. அந்த வெற்றியின் முழுப் பெருமையும் பெண் புலிகளையே சேரும்.
p83b
இவை, பெண் புலிகளின் தரைப்படை தாக்குதல்கள். இதுதவிர… பெண் கடற்புலிகள், பெண் வான்புலிகள் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சகல பலங்களிலும் பெண்கள் சம பங்குடன் இருந்தார்கள்.
இன்றைக்கு விடுதலைப் புலிகள் பெருமளவில் சிதறடிக்கப்பட்டிருக்கும் நிலையில், புலிப்பெண்களின் உடல்கள், வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதியிலும் நந்திக்கடல் பகுதியிலும் பிணங்களாக மிதந்து கொண்டிருக்கின்றன – கனவு ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு!