Showing posts with label எனது. Show all posts
Showing posts with label எனது. Show all posts

Tuesday, May 26, 2009

நான் என்ன செய்யட்டும்? நான் என்ன செய்ய முடியும்? நான் ஏன் செய்யனும்?

நான் என்ன செய்யட்டும்? நான் என்ன செய்ய முடியும்? நான் ஏன் செய்யனும்? தமிழன் தமிழன்னு சொல்லறவங்க, எல்லாம் தமிழ்லயே… பேச மாட்டேங்குறாங்க, இதுல தமிழச்சியை பத்தி சொல்லவே வேணாம். நல்ல தமிழ் பேசுற பெண்ணை காட்டின, நான் தீக்குளிக்க கூட தயாரா இருக்கேன். பிழைக்கதான் ஆங்கிலம் படிக்கிறோம் அதுக்காக தமிழை சாவடிக்கிறது சரியா?

நான் என்ன செய்யட்டும்? நான் என்ன செய்ய முடியும்? நான் ஏன் செய்யனும்? கடவுள் கடவுள்னு சொல்லறவங்க, கடவுள பாக்கல, கேக்கல, ஆனா ஆனா உணர்த்துட்டாங்கலாம் (?), நாட்டுல மதத்தின் பேரால, மாநிலம், மாநில சாதி பேரால நடக்குற பிரச்சனைகள், வன்முறையெல்லாம் இவங்க பாக்கலையா? கேக்கலையா? பார்த்தும், கேட்டும், உணரல அதனே…? ஆண்டவன் நமக்கு அள்ளி கொடுப்பான். சொன்ன உணர்ந்துடும். கோயிலுக்கு போறவகங்களுக்கெல்லாம் ஒரு கை போயிடும் அப்படினு சொன்னா இங்க யாராவது அந்த பக்கம் போவாங்க???

நான் என்ன செய்யட்டும்? நான் என்ன செய்ய முடியும்? நான் ஏன் செய்யனும்? பெண்களெல்லாம் கடவுளுக்கு சமம்னு சொல்லுவாங்க… ஆனா இப்பயும் அந்த பெண்னுக்கு மரியாதை இல்ல… பெண்னுன்னா மெண்மைனு எவன் சொண்னானோ? அவனத்தான் முதல்ல அடிக்கனும். அழகு, மெண்மைனே சொல்லி காலகாலம அடிமையாக்குவங்க… இதுல சிரிப்பே இது தெரியாம பெண்களே, அடிமையாகிறதுதான்… கற்புனு ஒரு பெரிய தங்க சுரங்கம் இவங்கதான் பார்த்துகனும், இல்லீனா காக்கா தூக்கிடு போயிடும்…. அழகு, மெண்மை, அன்பு, பாசம், கற்பு, ஒழுக்கம் இன்னும் எத்தனை விலங்கு?? இதெல்லாம் நல்ல பண்புகள்தானேனு.. நீங்க சொல்ல வரலாம்.. ஆனா பசிச்சாதான் சாப்பிட முடியும், நாளைக்கு பசிக்கும்னுட்டு இன்னைக்கே சாப்பிட முடியாது… அது போலதான் இதுவும் தேவையானதப்பதான் எடுத்துக்கனும்.

போதும்… போதும்… இதுக்கு மேல… நான் என்ன செய்யட்டும்? நான் என்ன செய்ய முடியும்? நான் ஏன் செய்யனும்?

நீங்களே சொல்லுங்க… நீங்க கண்டிப்பா சொல்லுவீங்க…

இவன், மு.இரா.


கடவுளை நான் வெறுக்கிறேன்...

கடவுளை நான் வெறுக்கிறேன்,

சூது, வாது தெரியாத, சின்ன குழந்தையை கூட,

சாதி பெயரிட்டு தாழ்த்தியும், உயர்த்தியும் சொல்லும்,

கடவுளை நான் வெறுக்கிறேன்,

தோஷம் என்றும், தீட்டு என்றும், என்னருமை

அக்கா, தங்கையை கேலி செய்து தாழ்த்தும்,

கடவுளை நான் வெறுக்கிறேன்,

என்னை மூடனாக்கி, கல்லை கும்பிட செய்யும்,

சோம்பேறியாக்கி, நித்தம் நம்ப சொல்லும்,

கடவுளை நான் வெறுக்கிறேன்,

இந்த கடவுளையும் படைத்த கடவுள் காலமெல்லாம்,

நம்மை அடிமையாக்க துடிக்கும் கடவுள்,

பூணூல் போட்டு புரளி பேசும் கடவுள் இந்த,

கடவுளையும் நான் வெறுக்கிறேன்.

இவன்,

மு.இரா.