Showing posts with label தலைவர் பிரபாகரன். Show all posts
Showing posts with label தலைவர் பிரபாகரன். Show all posts

Thursday, September 3, 2009

தம்பி வருவார் தமிழினம் மீள... – அருணாசுந்தரராசன்.

தாய்மாரை

தவிக்க விட்டு

தங்கைகளின்

கண்ணீர் கேட்டு

இருப்பாரா தலைவர்

இல்லை இல்லை

திரும்பி வருவார்...

தாயக மீட்சி

தலைமேல் காத்து

தியாகம் செய்திட

தம்பிகள் உண்டு

இருப்பாரா தலைவர்

இல்லை இல்லை

திரும்பி வருவார்...

தம்பியின் இருப்பு

தமிழரின் விருப்பு

தமிழீழ நெருப்பு

தாங்கிடும் பொறுப்பு

இருப்பாரா தலைவர்

இல்லை இல்லை

திரும்பி வருவார்...

எங்கள் வானும்

எங்கள் நிலமும்

ஏதிலியர் மயமானது

எங்கும் விரிந்த

எங்கள் தமிழர்

ஏங்கும் நிலையானது

இருப்பாரா தலைவர்

இல்லை இல்லை

திரும்பி வருவார்..

சிங்கள செருக்கு

சிதறிப் போகும்

செந்தமிழ் ஈழம்

சீக்கிரம் விடியும்

தம்பி வருவார்

தமிழினம் மீள

தலைமையும் ஏற்பார்

தமிழீழம் விடிய...


Wednesday, September 2, 2009

எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார் – ஜெகத் கஸ்பர்.

ltte leaderமே-17 வரை நந்திக் கடற்கரையில் நின்ற சிவரூபன் தொடர்கிறேன்…

எங்கும் பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத்தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன்.

ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத்தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத்தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடையின்றிக் கிடந்தன. அநேகம்பேர் எம் குலப் பெண்கள். கொடுமை யை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவுகள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப் பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்கவில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச்சைத் தமிழில் சிங்களன் அறிவித்துக் கொண்டிருந்தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது.

அருகிலிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். “”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌரவமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத் தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் ராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவ னிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று.

“”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போற வங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத் தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன்னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன். “பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு ராணுவக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட்டத்தினர் மீது கேவலச் சிரிப்புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள்.

தமிழரின் இயலாமை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போனவர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக்காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண்ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந்தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக்குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட ராணுவத் தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார்.

ஒன்று,

“நேர்மையானவர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர்களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது.

இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார்.

நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.

உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரி சோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார்களோ, என்னவெல்லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக் கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத்தினர் சுடும் நிலையில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம் பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர்களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.

இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மணலாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயிரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன்.

போர்க்களத்தில் தன்னையே கொடையாக்கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது.

முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.


Tuesday, September 1, 2009

என் கனவு தேசம்!

image

கல்லறைகளையும்

சாம்பல் மேடுகளையும்

கொண்டே சாத்தியமாக்ப்படும்

என் கனவு தேசமே!

எத்தனை வலியகள் சுமந்தாய்

எத்தனை புயல்கள் கடந்தாய்

எத்தனை ஏமாற்றம் கண்டாய்

எதற்க்கும் சளைக்காத –என்

கனவு தேசமே!

நேற்றைய வேதனையை

வேதமாக்கிய உன்

வேள்விப்புருசர்கள்

நாளை உனை மீட்பர்

நொய்ந்து தினம் சாகும்

கோலத்தமிழினம்

உயந்து கொல்லும் பகை

என் கனவே தேசமே

காணமல் போய் விடாதே!

கருங்காலிகள் பலரின்

குள்ள நரித்தனத்தால்

காட்டிக் கொடுக்கப்பட்ட

என் கனவு தேசமே

கவலை கொள்ளாதே

பிரிவினில் வாடும் காதலர் என

அழுது நீ தவிப்பது புரிகிறது

உன் மகன் என் தலைவர்

அவர் காலடி உன் அடியில்

இருக்கும் வரை

அழுகை வேண்டாம்

என் கனவு தேசமே!

என் கனவு தேசமே

கல்லறையின் விதைப்பு உனக்காய்

காவலரணில் என் தோழனின்

விழிப்பும் உனக்காய் தான்

காத்திரு விழி பூத்திருக்கும்

உன் குழந்தைகள் உனை மீட்பர்.


Tuesday, July 28, 2009

தமிழ்நாட்டுத் தமிழனுக்கு... – நிர்மலா.

அன்று

வணிகக் கப்பல்கள்

வரிசையாய் அணிவகுத்த நின்ற

நம் தென்கடலில்,

இன்று-ltte-tamilan-eelam

நச்சு உலைகள்

நங்கூரமிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன

நீ,

தாராளமாய்த் தாரைவார்த்துக் கொடுத்தத்

தமிழ் மண்ணில்

உன்னையே வேவுபார்க்க

உளவுக்கோபுரம் உயர்ந்து கொண்டிருக்கிறது

இங்கிருந்து

அமைதிப்படை புறப்பட்ட அன்றே

நம் கடல் பகுதியின்

அமைதி குலைக்கப்பட

அங்கீகாரம் வழங்கப்பட்டது.

உனக்கு ஏனோ

புரியாமல் போயிற்று

ஆன்றோர் அறிவுரை

உனக்கு

உறைக்காமல் போனது,

அன்று மட்டுமல்ல-

இன்று வரையிலும் தான்!

தமிழா!

ஈழ இளங்குருத்துக்களின்

குருதிக் கறை படிந்த

"கை"க்கும்

மானங்கெட்டு,

பிச்சைப் பாத்திரத்தினுள் கவிழ்ந்து

உதிக்க மறந்த "சூரியனு"க்கும்

நீ போட்டாயே ஓட்டு,

அவை திரும்பிவரும்...

பகைப்புலங்களின் ஆயுத வீச்சுகளாய்!

செய்தித்தாள்களில் மட்டுமே

நீ -

வாசித்தறிந்த வடபுலத்து யுத்தங்கள்

இன்று நம்

வாசற்கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன.

விண்மீன்களைக் கண்டால் கூட

வீறிட்டு அலறும்

ஈழக் குழந்தைகளின்

அவல அனுபவங்கள்,

நமது தலைமுறைகளுக்கும்

தயாராகிக் கொண்டிருக்கின்றன

நீயோ-

ஒலிம்பிக் விழாவில் சிதறும்

சீனப் பட்டாசுகளைப் பார்த்து

வாய்ப்பிளந்து கொண்டிருக்கிறாய்

ஈழத்திரு மண்ணில் -

பிணம் புதைக்கத் தோண்டப்பட்ட

குழிகளில் கூட

குருதி கொப்பளித்துக்கொண்டிருந்த

அக்கொடூரப் பொழுதுகளில்

நீ

"கவர்"களின் கனத்தக்

கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தாயே...

நினைவில் கொள்!

ஈராயிரம் ஆண்டுகளின் சாரம் ஊறி,

ஆறு பத்தாண்டுகளில் வைரம் ஏறி

உயிர் ஊற்றி வளர்த்திட்ட

ஈழமரம் -

வெட்டப் படுவதற்குக்

கோடாலி வார்க்கப்பட்டது

உனது உலைகளில்!

வெட்டப்பட்ட மரம்

நிச்சயமாய் துளிர்க்கும்;

ஆயிரமாயிரம் -

துவக்குகளாய் உயிர்க்கும்!

இங்கு நீயோ,

உன் வேர்களை வெட்டிக்கொண்டிருக்கிறாய்

எச்சரிக்கை!

நன்றி: http://www.thenseide.com


Saturday, July 25, 2009

சொல்லாமல் போகார் எம் தலைவர்.

தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆய்வுகள் என்னைப் பொறுத்தவரை தேவையற்றவை என்றே நான் கருதுகின்றேன். தமிழ் மக்களை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் சக்தியாக வளர்த்தெடுத்து, தமிழர் தாயக தேசத்தை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும் என்பதை தமிழினத்திற்கு தலைவர் மிகத் தெளிவாக கூறிவைத்திருக்கின்றார்.

எனவே, தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதங்களைத் தவிர்த்துவிட்டு தலைவர் காட்டியுள்ள வழியில் சென்று தாயகத்தை வென் றெடுப்பதே இன்றைய நிலையில் தமிழ் மக்களின் காலப்பணியாக இருக்க வேண்டும்.

ஆனாலும், தங்களது சுய நலன் களுக்காக தலைவரை இந்திய, சிறீலங்கா அரசுகளைவிட பலமுறை தங்கள் அறிக்கைகளில் கொன்றுகொண்டிருக்கும் நம்மவர்களுக்காக இங்கே சில கருத்துக்களை நான் முன்வைக்கலாம் என்ற உணர்விலேயே பால்ராஜ் அண்ணையின் இந்தத் தொடரின் ஊடாக, கடந்த காலங்களில் நிகழ்ந்த சில விடயங்களை எமது மக்களோடு இந்தக் கால நேரத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

தலைவர் எப்போதும் தன்னை யொரு தலைவராக வைத்துக்கொள்ள விரும்பியதில்லை. ஒரு போராளியாக வாழவே அவர் எப்போதும் விரும்புபவர். ஒரு போராளியாக வாழ்ந்து, ஒரு போராளியாக களமுனையில் எதிரியுடன் மோதி வீரச்சாவைத் தழுவுவதே கெளரவமான சாவு என்று கருதுபவர்.

இதற்கு பல ஆதரங்களை இங்கே முன்வைக்க முடியும். 1987ம் ஆண்டு களில் அனுபவ ரீதியாகக் கண்ட சில விடயங்களை இந்த இடத்தில் ஆதாரமாக வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் டில்லியில் அசோகா விடுதியில் தங்க வைக்கப்பட்டி ருந்தார். விடுதலைப் புலிகள் ஆயுதங் களை ஒப்படைக்க வேண்டும் என்பதை அங்குவைத்து இந்திய அதிகாரிகள் தலைவரிடம் எச்சரித்தே கூறியிருந்தனர். வெளியுலக தொடர்புகள் துண்டிக்கப் பட்டிருந்த நிலையில் ஆயுதங்களை ஒப்படைப்பது குறித்து தலைவர் போராளிகளுக்கு அறிவிக்கவேண்டும் என அவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால், அவர்களின் கைகளில் மிகவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருந்தபோதும் அங்கு காவலுக்கு நின்ற கறுப்பு பூனைகள் படைப்பிரிவின் ஊடாகவே தலைவர் தாயகத்தில் உள்ள போராளிகளுக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தார்.

அந்தத் தகவலில் அவர் மிகத் தெளிவாக ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். அதாவது,

தான் நேரில் வராமல் யாரும் ஆயுதங்களை ஒப்படைக்கக்கூடாது. அவ்வாறு ஒலி நாடாவில் எனது குரலோ, அல்லது ஒளிநாடாவிலோ நான் கதைத்த பதிவுகளை யாராவது கொண்டுவந்து தந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டாம்.

நான் நேரில் வந்து உங்களிடம் சொல்லும் வரைக்கும் யாரும் ஆயுதங் களை ஒப்படைக்கக்கூடாது. அதனையும் மீறி இந்திய இராணுவத்தினர் வந்தால் தாக்குதலைத் தொடங்குங்கள். அவ்வாறு இந்திய இராணுவத்தினருடன் மோது வதற்கு விருப்பம் இல்லாதவர்கள், ஆயுதங்களை வைத்துவிட்டு போகலாம்"

என்பதையும் இந்தியாவின் முற்றுகைக்குள் இருந்துகொண்டும் தலைவர் உறுதியாக அறிவித்திருந்தார்.

பின்னர், தலைவர் நேரில் வந்து அறிவித்ததன் பின்னரே ஆயுத ஒப்படைப்பு நிகழ்ந்தது என்பது வரலாறு.

இப்படிப்பட்ட தலைவர், எந்த மக்களுக்காக போராடுகின்றாரோ அந்த மக்களுக்கு எந்தவொரு கருத்தையும் நேரிலோ, ஒளிப்பதிவாகவோ சொல்லாமல், முகம் தெரியாத ஒருவரை நீங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவித்துவிட்டு சென்றுள்ளாரா என்பதை இந்தச் சம்பவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

நன்றி: ஈழமுரசு.


Sunday, July 19, 2009

காக்கத் தவறினோம்! கழுவாய் தேடுவோம்!! - பழ. நெடுமாறன்.

Nedumaran

உலகெங்கும் வாழும் சுமார் பத்துக் கோடி தமிழர்களில் ஏறத்தாழ ஆறரைக் கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ் கிறார்கள். எனவே உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களுக்கு இடர் சூழும் போதெல்லாம் அதிலிருந்து மீள தமிழகத்தையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழகத்திற்கு உண்டு.

மியான்மர் முதல் பிலிப்பைன்ஸ் வரை உள்ள தென்கிழக்கு ஆசிய நாடு கள் எல்லாவற்றிலும் சீனர்கள் பெருந் தொகையாக வாழ்கிறார்கள். அவர்களின் நலனில் செஞ்சீனம் மிகுந்த அக்கறைக் கொண்டிருக்கிறது. எனவே இந்நாடுகளில் அவர்களுக்கு எதிராக சுண்டு விரலை அசைப்பதற்கு கூட மற்ற இனத்தவர்கள் அஞ்சுகிறார்கள்.

உலகத் தமிழர்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமையைத் தமிழகம் செவ்வனே செய்திருக்கிறதா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்வது நல்லது.

இலங்கையில் மிக அண்மையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் கள் சிங்கள இராணுவ வெறியர்களினால் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுப்ப தற்குக் குரல் கொடுக்க வேண்டிய தமி ழகம் அந்த கடமையை முழுமையாகச் செய்யவில்லை. இந்த இரங்கத்தக்க நிலை இன்னமும் தொடர்கிறது. கடந்த 26-06-2009 அன்று தமிழகச் சட்ட மன்றத்தில் அ.தி.மு.க மற்றும் ம.தி.மு.க., பா.ம.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சார்பில் கீழ்க்கண்ட தீர்மானம் முன் மொழியப்பட்டது. ‘சர்வதேசச் சட்டம் மற்றும் ஜெனிவா உடன்பாட்டில் உள்ள போர் விதிமுறைகள் ஆகியவற்றை முற்றிலுமாக மீறி அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர் களை கொன்று குவித்து ஓர் இனப் படு கொலையை இலங்கை அரசு நடத்தி யுள்ளது. இது மனித உரிமையை மீறிய செயலாகும். எனவே இலங்கை அரசின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டி மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.’

இத்தீர்மானம் எக்கட்சியின் நலன் சார்ந்த தீர்மானமும் அல்ல. ஈழத் தமிழர் நலன் பற்றிய தீர்மானமாகும். கட்சி எல் லைக் கோடுகளுக்கு அப்பால் அனைத் துக் கட்சிகளும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் சட்டமன்றப் பேரவையின் தலைவர் இத்தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதைத் தள்ளிப் போட் டார். உடனடியாக எடுக்க வேண்டிய இத்தீர்மானத்தை ஒத்தி வைத்ததற்குப் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது வெளிப்படையாகும்.

இலட்சக்கணக்கானத் தமிழர் களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த இலங்கை அரசை சர்வ தேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்த வேண்டியது தமிழனாகப் பிறந்த ஒவ் வொருவரின் கடமையாகும். ஆனால் அந்தக் கடமையை மறந்தும் துறந்தும் செயலாற்றுவது தமிழினத்திற்கு இழைக்கப்படுகிற துரோகமாகும்.

திட்டமிட்ட இனப் படு கொலையை சர்வதேச சமுதாயம் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இரண் டாம் உலகப் போரில் ஏற்பட்ட அத் தனை அழிவுகளுக்கும் காரணமான ஜெர்மானியத் தலைவர்களைப் போர்க் குற்றவாளியாக்கி விசாரணை செய்ய நூரம்பர்க் எனும் நகரில் விசாரணை நீதிமன்றமும் ஜப்பானியப் போர்க் குற்ற வாளிகளை விசாரிக்க டோக்கியோவில் விசாரணை நீதிமன்றமும் அமைக்கப் பட்டன. இந்த நீதிமன்றங்கள் வகுத்த வரைமுறைகளிலும் அய்.நா பேரவை நிறைவேற்றியத் தீர்மானங்களிலும் 1948-ஆம் ஆண்டு இனப் படு கொலையைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குமான மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர் மானங்களும் இன்று வரையிலும் இப் பிரச்னையில் உலக நாடுகளுக்கு வழி காட்டி வருகின்றன.

இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ ஒரு கோடியே இருபது இலட்சம் சிலேவிய, யூத இனங்களைச் சேர்ந்த மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் வெள்ளை யர் ஆட்சியின் போது கருப்பினத்தைச் சேர்ந்த நீக்ரோ மக்களும் இந்திய மக்களும் இனப் படுகொலைக்கு ஆளானார்கள்.

இஸ்ரேல் ஆக்கிரமித்தப் பகுதி களில் இருந்த எண்ணற்ற அராபிய மக் கள் இனப் படுகொலைக்கு ஆளாயினர்.

வியட்நாமில் அமெரிக்கப் படை யினர் வியட்நாம் மக்களை இனப் படுகொலை செய்தனர்.

சீனா திபெத்திய மக்களைக் கொன்று குவித்தது.

பாகிஸ்தான் கிழக்குப் பாகிஸ் தானைச் சேர்ந்த வங்க இன மக்களை இனப் படுகொலைக்கு ஆளாக்கிற்று.

அதைப் போல இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள இராணுவ வெறி யர்களால் திட்டமிட்ட இனப் படு கொலைக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள்.

உலகின் பல பகுதிகளில் நிலவி வரும் இத்தகைய இனப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காகவும் குற்ற வாளிகளைத் தண்டிப்பதற்காகவும் சர்வ தேச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 1945-ஆம் ஆண்டு அய்.நா இதை அமைத்தது. அய்.நா-வின் பட்டயத்தில் இந்த அமைப்புக் குறித்தும், அதன் அதிகார வரம்புக் குறித்தும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அய். நா பேரவையும் பாதுகாப்புக் குழுவும் கூடி சர்வதேச நீதிமன்றத்திற்குரிய 15 நீதிபதி களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அய். நா-வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்க வேண்டும். ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர் இதில் இடம் பெற முடியாது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹெக் நகரில் இயங்கும்.

1990-ஆம் ஆண்டில் போஸ்னி யாவின் கிழக்குப் பகுதியில் வாழும் சுமார் 40,000-க்கு மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்களை போஸ்னியா-செர்பிய இராணுவம் திட்டமிட்ட இனப்படுகொலைச் செய்தது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. யூகோசிலேவியா, செர்பியா ஆகியவற்றின் முன்னாள் அதிபரான சுலோ போடன் மிலோசெவிக் மற்றும் முக்கியமான 30 பேர்கள் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இடைக்காலத்தில் மிலோசெவிக் இயற்கையாக மரணம் அடைந்தார்.

2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி சர்வதேச நீதிமன்றம் போஸ்னிய இனப்படுகொலை வழக்கில் திட்டமிட்ட இனப்படுகொலை நடை பெற்றிருக்கிறது எனத் தீர்ப்பு அளித்தது. மேலும் இவ்வழக்கில் பலர் தண்டிக்கப் பட்டனர். சிலர் விடுதலையாயினர்.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி அய்.நா பேரவை நிறைவேற்றிய தீர்மானம் எண் 47/121-இன் படி இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையும் இனப் படுகொலையேயாகும். இந்த தீர்மானத்தின்படி போஸ்னியாவில் செர்பி யர்கள் நடத்திய இனப் படுகொலைக் கண்டிக்கப்பட்டது.

2005-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27-ஆம் தேதி அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை போஸ்னியாவில் நடெைபற்ற இனப் படுகொலையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

எனவே அய்.நா பேரவை, அமெ ரிக்க பிரதிநிதிகள் அவை, சர்வதேச நீதிமன்றம் போன்ற அமைப்புகள் இனப் படுகொலையை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளன. அதன் அடிப்படையில் தமிழகச் சட்டமன்றமும் இத்தகைய தீர் மானத்தை நிறைவேற்றுவது இன்றியமை யாததாகும். உற்றார் உறவினர் பெற்றோர் பிள்ளைகள் எல்லோரையும் இழந்து சாவின் விளிம்பில் நின்று தத்தளித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு இத்தகைய தீர்மானம் நம்பிக்கைக் கீற்றாக விளங்கியிருக்கும்.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களைப் படுகொலைச் செய்த கொலைக்காரக் கும்பலை தமிழகம் ஒரு போதும் மன்னிக்காது. அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க முயலும் என்பதை நிலை நிறுத்த ஒரே வழி தமிழகச் சட்டமன்றத்தில் இத்த கையத் தீர்மானத்தை நிறைவேற்றுவ தேயாகும். ஆனால் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலின் விளைவாக பெறும் விவா தம் மட்டும் நடத்தி பிரச்சனையத் திசை திருப்பியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

தி.மு.க தமிழ்நாட்டில் ஆளுங் கட்சி மட்டுமல்ல. மத்திய அரசை ஆளும் காங்கிரசுக் கூட்டணியில் தி.மு.க-வும் இணைப்பிரிக்க முடியாத அங்கமாக விளங்கி வருகிறது. அப்படி இருந்தும் ஒரு இலட்சம் தமிழர்களைக் காப்பாற்ற தி.மு.க தவறிவிட்டது. இதற்கு கழுவாய் தேடும் வகையிலாவது போர்க் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்க வேண்டும். அதையும் செய்ய தி.மு.க. தவறியது வரலாற்றில் என்றும் அழியாத கறையாகும்.

நன்றி: www.thenseide.com


Wednesday, July 1, 2009

வீர வணக்கம்! எம் வீரர்களுக்கு – ஜெகத் கஸ்பர்.

1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து மலைமகள் என்றொரு பெண் எனக்குக் கடிதம் எழுதினாள். அவள் ஒரு போராளி. இன்றும் நான் மறவாத பெயர், மலைமகள். கடிதத்தையும் ஆவணப்படுத்தி காலத்தின் பதிவாய் வைத்திருக்கிறேன்.
மலைமகள் எழுதிய கடிதத்தின் சில வரிகள் இவை: ""தந்தை வீரச்சாவு அடைய, தன் மகனை களத்துக்கு அனுப்பினாள் ஒரு தாய் என்று நான் வாசித்திருக்கிறேன். ஆனால் களத்திலே வீரச் சாவடைந்த தன் மகனுக்குப் போராளித் தந்தை மண் போட்டதை நான் கண்டிருக்கிறேன். மணநாள் நிச்சயிக்கப்பட்ட தன் போராளித் துணைவியின் உடல் களத்தில் சிதறிட அவளுக்காக நினைவுக்கல் நாட்டிய போராளிக் காதலனை நான் கண்டிருக் கிறேன்.
பிறந்து 45 நாட்கள் மட்டுமே ஆன தன் பெண் குழந்தையை பின்னால் ஒரு போராளி சுமந்து வர, முன்னே தன் போராளிக் கணவனின் வித்துடலை தன் தோளிலே சுமந்து நடந்து விதை குழியில் வைத்து மண் போட்டு மூடிய போராளி மனைவியின் அருகே நின்றிருக்கிறேன்.
தன் ஒரே மகனை களத்தில் இழந்த தாய், அவன் பாதையில் போன கடைசி மகளும் வீரமரணமடைந்து உடலமாய் வீடு வர, "உனக்குப் பின்னாலே போராட அனுப்ப எனக்கு இன்னுமொரு பிள்ளை இல்லாமல் போய்விட்டதே' என்று அழுததை நான் பார்த்திருக்கிறேன்.
ஒருவர் மற்றவருக்குச் சொல்லாமல் போராட்ட இயக்கத்தில் சேர்ந்து சண்டைக் களத்தில் தற்செயலாய் தொலை தொடர்பு கருவியில் குரல் கேட்ட பின்னரே தான் மட்டுமல்லாமல் தன் வாழ்க்கைத் துணை யும் களத்தில் நிற்பதை அறிந்து கொண்ட போராளித் தம்பதிகளை நான் அறிந் திருக்கிறேன். அடுத்த வேளை சமைக்க உணவு இல்லை என்று தெரிந்து கொண்டே, களைத்துப் போய் வந்து தன் வீட்டுத் திண்ணையில் சாய்ந்திருக்கும் போராளிப் பிள்ளைகளுக்கு உணவு சமைக்கும் ஏழைத் தாய்மாரை நான் பார்த்திருக்கிறேன். இவையெல்லாம் உலகிற்குத் தெரியுமா? எத்தனையோ வேதனைகள் விம்மல்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டுதான் இங்கே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்...'' -இவ்வாறாக மலைமகளின் கடிதம் தொடர்ந்தது.
மலைமகள், சிவசங்கரி, அங்கயற்கண்ணி என நெருப்பின் குழந்தைகள் களத்தில் இருந்து காவியங் களாய் அனுப்பிய நூற்றுக்கணக்கான கடிதங்களை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறேன். நக்கீரன் ஊடாகவே அவை நித்திய வரலாற்றுக்காய் பதிவுபெறும்.
ராஜீவ்காந்தி படுகொலை என்ற வரலாற்றுப் பிழை தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் பயங்கரவாதம் என்ற குற்றச் சாயம் பெறுவதற்கும், இன்றைய நினைத்துப் பார்க்க முடியாத பேரழி விற்கும் காரணமாயிற்று. ஆயினும் இவ் வரலாற்றுப் பிழைக்கும் அப்பால் அவ்விடுதலைப் போராட் டத்திற்கு தார்மீகமும் புனிதத் தன்மையும் இருந்தது. அப்புனிதத்தை கொடையாக போராட்டத்திற்குத் தந்தவர்கள் துரும்பளவுதானும் சுயநலம் இன்றி, தன்முனைப்பு இல்லாதவர்களாய், தம் தலைமுறைகள் நலமுடன் வாழ தமிழ் ஈழ நிலமொன்று உரிமையுடன் வேண்டுமென்ற ஒரே நோக்கிற்காய் தம்மையே ஆகுதியாக்கிக் கொண்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள்.
இந்திரன் என்ற போராளி 1998-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதியிட்டு எனக்கு எழுதிய கடிதம் எத்தனையோ அதிகாலை வேளைகளில் என்னை தனியாக அழ வைத்த கடிதம். இப்போது அதனை எழுதும்போது கூட என் கண்கள் பனிக்கின்றன. அப்போது கிளிநொச்சி நகரை ராணுவப் பிடியிலிருந்து மீட்க விடுதலைப்புலிகள் ஆயத்தமாகிக் கொண்டி ருந்த காலகட்டம். இந்திரன் இவ்வாறு தன் கடிதத்தை தொடங் கியிருந்தான்: ""அண்ணா! நான் பல சமர்களில் பங்கு பற்றியிருக்கிறேன். ஆனால் இச் சமருக்குச் செல்லும் முன் எதையாவது எழுதிவிட்டுச் செல் என்று என் மனம் சொல்கிறது. எந்தச் சண்டைக்குப் போனா லும் இப்படி மனம் இருப்பதில்லை. அதனால் உங்களுக்கு இக்கடிதம் எழுதி என் தோழனிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறேன். அவன் நான் இச்சமரில் வீரச்சாவு அடைந்தால் மட்டுமே இக்கடிதத்தை உங்களுக்கு அனுப்பி வைப்பான். (ஆக, கடிதம் என்னை வந்து சேர்கிறது... அந்தப் போராளி இந்திரன் உயிரோடு இல்லை).
இந்திரன் எழுதிய கடிதத்தில் என் உயிரைப் பிழிந்த வரிகள் இவை: ""அண்ணா! ஒரு மனிதனுக்குத் தான் சாகப் போகும் போது, மரணம் அருகில் வந்துவிட்டதென்ற உணர்வு மேலிடுகையில் பலவிதமான ஆசைகள் இறுதி ஆசையாக மனதிலே தோன்றும். அதேபோல் என் மனதிலும் சில இறுதி ஆசைகள். தமிழீழம் கெதியா (விரைவாக) கிடைக்கணும். எங்கட சனத் தின்றெ கஷ்டங்கள் தீரோணும்''. வானகமே, வையகமே, நேயமுள்ள மனுக்குலமே! மரணம் மௌனமாய் அருகில் வந்து அணைக்கக் காத்திருப்பது கண்ணுக்குத் தெரிகிறபோதும்கூட தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தவரைப் பற்றியோ தன் பிற நேசங்களைப் பற்றியோ எண்ணாமல், "கெதியா தமிழீழம் கிடைக்கணும் எங்கட சனத்தின்றெ கஷ்டங்கள் தீரணும்' என்று ஆசித்து உயிர் சமர்ப்பிக்கும் எங்கள் பிள்ளைகளையா பயங்கரவாதிகள் என்று சொல்கிறீர்கள்?
இந்திரன் இவ்வாறு தன் கடிதத்தை நிறைவு செய்திருந்தான்: ""அண்ணா! என்ன இருந்தாலும் இந்தச் சண்டையில் நான் கட்டாயம் வீரச்சாவு அடைவேன் என்று என் மனம் சொல்கிறது. நான் வீரச்சாவு அடைந்தாலும் என் உயிர் தமிழ் ஈழ வான் பரப்பிலே உலவிக் கொண்டிருக்கும். உயிர் பிரிந்தாலும் உங்கள் குரலை வான்பரப்பில் நான் தவறாது கேட்பேன். "தமிழீழம் மலர்ந்துவிட்டது' என ஒருநாள் நீங்கள் வானொலியில் அறிவித்து அதனைக் கேட்டு என் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென் பதும் என் இறுதி ஆசைகளில் ஒன்று. அண்ணா! உங்கள் முகத்தை எனக்குத் தெரியாது. ஆனால் தூரத்தில் இருந்து எம் விடுதலையை நேசிக்கும் எல்லோரது முகங்களையும் எம் தலைவரின் முகத்தில் பார்க்கிறேன்!'.
நான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் என சுற்றித் திரிந்து விடுதலைப் போராட்டத்தின் பன்முகத் தன்மைகளைப் பதிவு செய்த அந்நாட்களில் நான் உணர்ந்து பதிவு செய்த உன்னதமான உண்மைகளில் ஒன்று, களத்தில் ஆயுதம் தாங்கும் அப்போராளிகள் மனதில் எத்துணை கனிவானவர்களாகவும், மென்மையான வர்களாயும், வருணிக்கவே முடியாத நேயம் கொண்டவர்களாயும் இருந்தார்களென்பது.
சந்தனம் எனக்குப் பிடிக்கும். சந்தனச் சிமிழ் எங்கிருந்தாலும் எடுத்து நெற்றியில் பொட்டிடும் பழக்கம் எனக்கு நீண்ட நாட்களாய் உண்டு. ஏதோ ஒரு தெய்வீக ரகசியம் சந்தனத்தில் இருக்கிறது. வயிரம் ஏற வாசம் கூடும் மரம் அது. அதனிலும் முக்கியமாக எரிந்து குளிர்தரும் அதிசயம் சந்தனம். போராளிகளையும் நான் அவ்வாறே கண்டேன். விடுதலைக்காய் நெருப்பாகிச் சுடர்விட்ட அதேவேளை நெஞ்சுக்குள் குளிர் தடாகங்களாய் நேசமாகிக் கிடந்த அபூர்வப் பிறவிகள். எனவே தான் மாவீரர்களாய் அவர்களின் வித்துடல்கள் விதைக்கப்படுகையில் பாடப்படும் பாடலும் நான் இதுவரை கேட்ட பாடல்களிலெல்லாம் மறக்க முடியாததாய் நிற்கிறது.
தாயக கனவுடன் சாவினை தழுவிய
சந்தனப் பேழைகளே! இங்கு
கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்குதா
குழியினுள் வாழ்பவரே?
உங்களைப் பெற்றவர், உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் -அன்று
செங்கழல் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.
எங்கே, எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்!
தாயக கனவுடன் சாவினை தழுவிய
சந்தனப் பேழைகளே!
வல்லமை தாரும் -முன்
உங்களின் வாசலில் வந்துமை வணங்குகின்றோம்.
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்.
வல்லமை தாரும் -முன்
உங்களின் வாசலில் வந்துமை வணங்குகின்றோம்.
சா வரும் போதிலும் தணலிடை மீதிலும்
சந்ததி தூங்காது.
எங்கள் தாயகம் வரும்வரை
தாவிடும் புலிகளின் பாதங்கள் தீராது.
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்,
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்!
உயிர்விடும் வேளையில் உங்களின் நாவுகள்
உரைத்தது தமிழீழம்.
அதைவிட யாதொரு குன்றில் விரைவினில்
நிச்சயம் எடுத்தாளும்.
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனி அரசு வென்றிடுவோம் -எந்த
நிலை வரும் போதிலும் இனி உளோம்
உங்களின் நினைவுடன் ஒன்றிடுவோம்.
எங்கே, எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்,
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்!
-நண்பர்களே! தமிழர்களே! பயங்கர வாதம், தவறுகள் குற்றங்கள் அனைத்திற்கும் அப்பால் தமிழீழ விடுதலை என்ற கனவு தூய்மையானது. அவர்களது மரணம் வீர மரணம். வணக்கம் பெறுவார்கள், தமிழ் இனம் இப்பூமிப் பரப்பில் உள்ளவரை!
-ஜெகத் கஸ்பர்
(நினைவுகள் சுழலும்)


Tuesday, June 30, 2009

பிரபாகரனை சாகடிக்க முயலும் பச்சோந்திகள்.

PIRABAKARAN_Page1
பிரபாகரன் இறந்ததை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, 3ஆம் கட்ட ஈழப் போராட்டத்தில் நாம் இணைந்து கொள்வோமென அடம் பிடிப்பவர்கள், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
மிகத் தெளிவாக, பல விடயங்கள் எமது அறிவுக்குத் தெரிகிறது. தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்கிற விடயத்தை நிரூபிப்பதற்கு, சிங்களம் பல முயற்சிகளை மேற்கொண்டது.
சூரன் போரில், தலையைத் திருப்புவது போன்று, முதலில் ஒரு நாடகத்தை பேரினவாதம் அரங்கேற்றியது.
சிங்களவர்களே அதை நம்பமறுத்தார்கள். பின்னர் நந்திக் கடலோரத்தில், பிரபாகரன் அவர்களின் உடலைக் கண்டு எடுத்தோமெனக் கூறும்போது, அதனையும் நம்பமறுப்பார்கள் என்பதற்காக, கருணாவையும் தயா மாஸ்டரையும் சாட்சிக்கு அழைத்தது சிங்களம்.
சாட்சிக்கு அழைத்துவரப்பட்ட ஓணான்கள், வேலிக்கு சாட்சியாக இருப்பார்கள் என்பது எமது சிற்றறிவிற்கு தெளிவாகத் தெரியும்.
காலநேரம் கரைந்துசெல்ல, திறந்திருந்த விழிகள், பாதியாக மூடத்தொடங்கியது. சவரம் செய்யப்பட்ட முகத்தில் வெண்ணிற மயிர்கள் முளைக்கத் தொடங்கின.
10 நாள் மரபணுப்பரிசோதனை ஒரே நாளில் முடிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட உடலத்தின் சாம்பல், கடலிலும் கரைக்கப்பட்டது.
உடலம் புதைக்கப்படவில்லை, எரிக்கப்பட்டது என்கிற விவகாரம், மீண்டும் தோண்டி எடுத்து பிண அரசியலை முன்னெடுத்து விடுவார்களோ என்கிற அச்சத்தால், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது போல் தெரிகிறது.
தமது இன அழிப்புப் போரின் முழுமையான வெற்றியைப் பிரகடனம் செய்யவேண்டுமாயின், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இல்லையயன்பதை தெளிவு படுத்து வேண்டிய தேவை சிங்களத்திற்கு உண்டு.
தேசியத் தலைவர் இறந்த செய்தியை 53வது படையணித் தளபதி, சரத் பொன் சேக்காவிடம் தெரிவித்தபோது, அதனை உறுதி செய்யுமாறு கூறியதாக கொழும்புச் செய்திகள் வெளிப்படுத்தின.
ஆனாலும் இராணுவத் தளபதியோ அல்லது கோத்தபாய இராஜபக்சவோ அந்த உடலத்தைச் சென்று பார்க்க அக்கறை கொள்ளவில்லை.
19ஆம் திகதி பேசிய மனிதர், 17 ஆம் திகதி இறந்ததாக புதியகதையயான்றும் உலா வந்தது. அவர் இறந்துவிட்டாரென்று, வன்னியிலிருந்து யார் தகவல் கூறியது என்கிற விடயம் இன்னமும் எமது அறிவுக்குத் தெளிவாகவில்லை.
சற்றலைட் தொலைபேசியில் உரையாடியவர், தனது தொடர்பினை துண்டித்துக்கொண்டால், அவர் இறந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ளும் யதார்த்தத் தெளிவு, சிலருக்கு ஏற்படுகிறது.
இறுதியாக நடைபெற்ற ஆனந்தபுர பெரும் சமரில், வெடிகுண்டுகளை நெஞ்சில் கட்டி களமாடிய தேசியத் தலைவர், முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறுகையில், எதிரிகளிடம் அகப்படக்கூடிய வாய்ப்புக்களையும் அனுமானித்திருப்பார்.
பக்கத்திலிருந்து பார்த்தவர் போன்று, கட்டிய வெடி குண்டுகளை, பொட்டம்மான் அகற்றிவிட்டாரென புதிய விளக்கங்களும் தெரிவிக்கப்படுகின்றன.
சமரின் இறுதி நாட்களில், களத்தில் நின்ற பலர், முகாம்களுக்குள்ளும், சிலர் வெளியிலும் இருக்கின்றார்கள்.
அவர்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், மே 13 ஆம் திகதிக்கு முன்பாகவே தேசியத் தலைவர் முற்றுகைக்குள் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டாரெனத் தெரிகிறது.
அவர் அங்கிருந்தும் பேசலாம். பொதுவாகவே, அவர் சற்றலைட் தொலைபேசி ஊடாக பேசுவதில்லையயன்று உடனிருந்த பலர் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
முகாமில் இருக்கும் மக்களுடன் வெளியுலகத் தொடர்பு ஏற்பட அனுமதித்தால், பல திடுக்கிடும் உண்மைகள் கசியலாமென்பதால், எவரையும் உள்நுழைய விடாமல் தடுக்க முனைகிறது சிங்களம்.
ஆனாலும் அதனையும் மீறி, இறுதி நாட்களில், பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு கோரத்தாண்டவம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
வீழ்ந்து கிடந்த உடலங்களை ஏறி மிதித்து, வெளியே தப்பி ஓடி வந்த கொடூரச் சம்பவங்களை, 18ஆம் திகதியன்று முற்றுகைக்குள் இருந்து வந்த மக்கள் தெரிவித்தார்கள்.
சிங்களப்படைகள் மீது ஏராளமான கரும்புலித்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு, குறுகிய நிலப்பரப்பெங்கும் புகை மண்டலங்களால் நிரம்பி வழிந்தது.
இதேபோன்று நந்திக் கடல் ஊடறுப்புச் சமரில், மேற்குக்கரையோரம் கடற்கரும்புலிகளால் கைப்பற்றப்பட்டதோடு, முற்றுகையை உடைத்து வெளியேறிய முதல் அணியினர் ஒட்டிசுட்டான் காட்டுப் பிரதேசத்தை நோக்கித் தப்பிச் சென்றதாக, கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்சின் இராணுவ ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
இந்த முற்றுகையிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள், இன்னமும் மர்மமாகவே இருக்கிறது.
33 வருடகால தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது, மூன்று நாட்களில் முடிந்து விட்டதென சிங்களமும், இந்திய புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொள்ளும் பரப்புரைகளில், பல அரசியல் சூத்திரங்கள் ஒளிந்திருக்கின்றன.
தேசியத் தலைவருக்கு அஞ்சலி செலுத்தாதோர் வரலாற்றுத் துரோகிகள் என்று நம்மில் சிலர் அவசர அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
வருடந்தோறும், விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழ் மக்கள்.
பிரிகேடியர் தமிழ் செல்வனும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களும், பல அரசியல் வரலாற்றுத் தவறுகளைப் புரிந்ததாகவும் இவர்கள் நிறுவ முற்படுகிறார்கள்.
பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு, தாயகம் திரும்பிய தமிழ்ச்செல்வன், உலகநாடுகளின் உண்மையான நிலைப்பாட்டினை, தலைவருக்குத் தெளிவுபடுத்தாமல் தவிர்த்து விட்டாரென்னும், புதியதொரு குற்றச்சாட்டினை முன்வைக்கிறார்கள்.
பேச்சுவார்த்தை மூலம், ஒரு மண்ணும் நடைபெறாதென, தலைவருக்கு மட்டுமல்ல முழுத் தமிழினத்திற்கே தெரியும்.
சர்வதேச அளவில், எமது போராட்ட நியாயப்பாட்டினைக் கொண்டு செல்லும் தளமாகவே, இப்பேச்சுவார்த்தை மேடை பயன்படுத்தப்பட்டது.
திம்புவில் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத சிங்களம், ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் பரிசீலனைக்காக மேசையில் போடப்பட்ட, உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாதென்பதை தேசியத் தலைவர் புரிந்துகொள்வார்.
ஏதோ, இப்பூவுலகின் புதிய ஒழுங்கினைப் புரியாமல், பிரபாகரன் போராட்டம் நடாத்தினார் என்பது போன்று சித்தரிக்க முனைபவர்கள், இனி என்னசெய்யலாம் என்பதைக் கூறவேண்டும்.
பூகோள அரசியலானது, உலகப் பொருளாதாரச் சீரழிவோடு புதியதொரு ஒழுங்கினை நோக்கிக் காலடி வைக்கிறது. அதில் சீனாவின் வகிபாகம் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
ஆயுதப் போராட்ட, இன அழிப்புச் சூத்திரதாரிகளின் பங்கு, தென்னாசியாவில் எவ்வகையில் பிரயோகிக்கப் படுகிறதென்பதை, விடுதலைப்புலிகள் புரிந்து கொள்ளவில்லையயன்று எண்ணுவதும் தவறான பார்வையாகும்.
ஆனாலும் இவர்கள் நிறுவ முற்படும் 3ஆம் கட்ட ஈழப்போராட்டத்தில், இந்திய வகிபாகம் தவிர்க்கப்படமுடியாத சக்தியாக இருக்கப் போகிறதென்று இனி இவர்கள் கூறப் போகிறார்கள்.
கொழும்பு, தமிழ்நாடு, புதுடெல்லி என்கிற அச்சினுள், மறுபடியும் எமது ஈழப்போராட்டத்தை இழுத்துச் செல்லும் காய்நகர்த்தல்களின், பங்குதாரர்களாக இவர்கள் மாறுவார்கள்.
தலைவர் இல்லையயன்பதை அழுத்திக் கூறுவதன் ஊடாகவே, இத்தகைய இந்திய உள்நுழைவு சாத்தியமாகுமென்பது இந்த அறிவியலாளர்களின் கணிப்பு.
மகிந்த இராஜபக்ச, என்ன முடிவெடுத்தாலும், அதனை இந்தியா உறுதியாக ஆதரிக்குமென்று சிவசங்கர் மேனன் தெரிவிக்கும் கருத்தினை உன்னிப்பாக அவதானித்தால், இந்தியா இல்லாமல் ஈழப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாதென அடம்பிடிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அறிஞர்களின் உள்நோக்க நிகழ்ச்சி நிரலைப் புரிந்துகொள்ளலாம்.
இனப்படுகொலை, யுத்தக்குற்றம் போன்றவற்றிலிருந்து தப்பிச் செல்லும்வரைதான், இந்தியாவின் உதவி மகிந்தருக்குத் தேவை.
அதற்கு முன்பாக, சிறீலங்காவைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் வகையில், இந்திய - சிறீலங்கா பாதுகாப்பு ஒப்பந்தமொன்றினை உரு
வாக்க, மேனன் முயற்சிகளை மேற்கொள்கிறார்.
ஆகவே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, இந்தியா உறுதுணையாக நிற்கும் என்கிற கற்பனை அரசியலில் காலத்தை கடத்தாமல், சிங்களத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளை அம்பலமாக்கும் செயற்பாடுகளில், புலம்பெயர்ந்த ஈழத் தமிழினம் முழு மூச்சாக ஈடுபடவேண்டும்.
- இருக்கிறாரா? இல்லையா?- என்கிற உளவியல் அறிக்கைப் போர்களில் காலத்தைச் செலவிட்டால், சிங்களம் செய்த இனப்படுகொலைகளும், செய்து கொண்டிருக்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மூடி மறைக்கப்படும். இரத்தக்கறை படிந்த கைகளோடு, புதிய புத்தர்களும் உருவாகிவிடுவார்கள்.
பிரபாகரன் இறந்ததை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, 3ஆம் கட்ட ஈழப் போராட்டத்தில் நாம் இணைந்து கொள்வோமென அடம் பிடிப்பவர்கள், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
மக்களைத் துரோகிகளாகச் சித்தரிப்பவர்கள், மக்களிடமிருந்து அந்நியமாகிச் சென்ற வரலாறுகளை, முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
மக்களால் உருவாக்கப்படும் தலைவர்கள் அழிவதில்லை, சராசரி மானிட வயதெல்லை, 100 ஐயும் தாண்டி, அவர்கள் மக்கள் மனங்களில் நீடித்து நிலைப்பார்கள்.ஆகவே, புதிய தலைமுறை மாணவ, இளைஞர்கள், இதுவரை முன்னெடுத்த போராட்டங்களைத் தொடர்ந்து நடாத்தவேண்டும். 2008ஆம் ஆண்டு மாவீரர்தினச் செய்தியும் அதுதான்.
-இதயச்சந்திரன்
நன்றி:ஈழமுரசு


Monday, June 29, 2009

தலைவரை சாகடிப்பதனூடாக எதையுமே சாதிக்க முடியாது.


மக்களின் உளவியலை புரிந்து கொண்டு மக்கள் போராட்டத்திற்கு வழி விடுங்கள்

தமிழ் மக்களின் விடுதலைப்போர் அறுபத்து ஒரு வருடங்களை பல பரிணாமங்களின் ஊடாக கடந்த போதும், அது தற்போது ஒரு நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் மரபுவழியிலான படைபலத்தை பிராந்திய வல்லரசுகளின் துணையுடன் சிறீலங்கா அரசு முறியடித்த பின்னர் தமிழ் மக்களின் உரிமைக்கான போரின் அடுத்த கட்டத்தை நகர்த்துவதில் தமிழ் சமுதாயம் பல நெருக்கடிகளை எதிர் நோக்கி நிற்கின்றது.

விடுதலைப்போர் சந்தித்த மிகப்பெரும் மனிதப்பேரவலத்தின் இறுதி நாட்களில் வீறுகொண்டு எழுந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் எழுச்சிகள் தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்கும் வரை தொடர வேண்டும். அதன் மூலம் தான் எமது இனம் சந்தித்த இழப்புக்களையும், துன்பங்களையும், பேரழிவுகளையும் உலகின் பதிவுகளில் இருந்து அழியாது பேணமுடியும்.

கடந்த ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழினமும் ஏற்படுத்தியிருந்த பெரும் எழுச்சிக்கு கடந்த 20 ஆம் நாள் பிரித்தானியா தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை செயல்வடிவம் கொடுத்திருந்தனர்.

எமது எழுச்சிகள் அடங்கிப்போனால் எமது உரிமைகளும் அதனுடன் அடங்கி போய்விடும் என்ற சிறீலங்கா அரசின் எதிர்பார்ப்புக்கு அவர்களின் இந்த எழுச்சி மீண்டும் ஒரு பேரிடியை கொடுத்துள்ளது.

போராட்டம் அடுத்து பயணிக்கப்போகும் பாதைக்கு அனைத்துலகத்திலும் பரந்து வாழும் ஒட்டுமொத்த தமிழினத்தின் ஆதரவுகள் தேவை. ஆனால் அதனை சிதைத்துவிடுவதில் இந்திய - சிறீலங்கா அரசுகள் முனைப்பாக செயற்பட்டு வருகின்றன.

அவர்களின் தற்போதைய நடவடிக்கைகள் முழுவதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை மையமாக கொண்டே நகர்த்தப்பட்டு வருகின்றன. அதனை உறுதிப்படுத்துவது போலவே வன்னியில் படை நடவடிக்கைகயை மேற்கொண்ட பல படை அதிகாரிகளை வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் சிறீலங்கா அரசு பணிகளில் அமர்த்தியுள்ளது. அவர்களின் மூலமும் பல ஊடுருவல்களை மேற்கொள்ள அரசு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஆனால் அவற்றை எல்லாம் புறம்தள்ளி நாம் மேற்கொள்ளப்போகும் தொடர் போராட்டங்கள் மூலமே காத்திரமான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களை ஏற்படுத்த முடியும்.

கடந்த வாரம் பிரித்தானியாவில் அணிதிரண்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உறவுகளை போல எதிர்வரும் 28 ஆம் நாள் பிரான்ஸிலும், ஏனைய நாடுகளிலும் நாம் ஒன்று திரண்டு எமது பலத்தை மீண்டும் மீண்டும் நிருபிக்க வேண்டிய கட்டயாம் உள்ளது.

எமது மக்கள் தாயகத்தில் சந்தித்த பேரழிவுகளுடன் எமது போராட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது என்ற கருத்தை நாம் தான் மாற்ற வேண்டும். ஆனால் எமது மக்களின் உளவுரைனையும், போராடும் மனவலுவையும் சிதறடிப்பதற்கு பல புறச்சூழல்கள் எம்மை சுற்றி உருவாக்கப்டுகின்றன.

பல அறிக்கைகளும், நேர்காணல்களும் எமது மக்களின் மனஉறுதியை தகர்க்கும் நோக்கங்களை மையமாக கொண்டு வெளியிடப்படுகின்றன. இது பெரும் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கும் ஒரு இனத்தின் உளவியலை மேலும் பல மடங்கு சிதைப்பதற்கே உதவும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை எதிரி ஒரு முறைதான் தனது ஊடக வலிமையை கொண்டு சாகடித்தான்;

ஆனால் எம்மில் சிலர் மீண்டும் மீண்டும் அந்த மாமனிதனை தமது ஊடகச்சமரில் சாகடித்து வருகின்றனர். மேலும் எத்தனை முறை அவரை சாகடிக்கப்போகிறார்களோ தெரியாது.

இந்த ஆதாரமற்ற தகவல்களால் ஒரு இனம் எவ்வளவு தூரம் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கிறது என்பதை யாருமே உணரத் தயாராக இல்லை. தலைவரை சாகடிப்பதனூடாக எதையுமே சாதிக்க முடியாது. அதை வரலாறு தெளிவாகப் பதிவு செய்து விட்டது.

எமது இனத்தைப் பொறுத்த வரையில் அவர் அந்த மக்களின் மனங்களில் இரத்தமும் சதையுமாக வாழ்கிறார். நாடு கடந்த அரசாங்கம் என்றாலும் இழந்த எமது உரிமைகளை மீளப்பெறுவதாக இருந்தாலும் அதற்கு பின்னால் மக்கள் அணிதிரள வேண்டுமானால் அந்த மக்களின் உளவுரனையும், மனவுறுதியையும் நாம் உயர்வாக பேணவேண்டும்.

மக்கள் ஆதரவு இல்லாத எந்த போராட்டமும் வெற்றியடைந்ததாக சரித்திரம் இல்லை. புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்டம் வினைத்திறன் வாய்ந்தது. ஆனால் அவர்களுடைய உழைப்பையும் சக்தியையும் சில சம்பவங்களை வீணடித்து விடுகின்றன.

ஆதாரங்கள் இன்றி தொடர்ந்து வலியுறுத்தப்படும் சில நிகழ்வுகள் கேலிக்கூத்தாக்கப்போவதை வரலாறு பதிவு செய்யக் காத்திருக்கிறது. எனவே மக்களின் உளவியலை புரிந்து கொண்டு மக்கள் போராட்டத்திற்கு வழி விடுங்கள்.


Sunday, June 28, 2009

இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புலனாய்வுப் போராளியின் மடல்.

தமிழீழ தேசத்தின் இரத்த உறவுகள் உங்கள் எல்லோரையும் இந்த மடல் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
p8 உங்களுடன் தற்போதய நெருக்கடியான சூழ்நிலையில் கொஞ்சம், எதிர்கால நிகழ்வுகளை நீங்கள் எப்படி அணுகப் போகிறீர்கள் அணுகிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதையிட்டு எமக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றைக் களைந்து நாம் சரியான பாதையில் பயணிக்க வேண்டிய கடமையும் இளையோரை தெளிவு படுத்த வேண்டிய நிலைமையும் எமக்கு ஏற்பட்டு இருக்கிறது.
நாம் இரண்டு மிகப் பெரும் நெருக்கடிக்குள் சிக்குண்டு இருக்கிறோம். அவற்றை நாங்கள் திறம்பட முறியடித்து மீண்டும் எங்கள் ஊர்களுக்கு திரும்பிப் போவோம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நீங்களும் அந்த நம்பிக்கையில் இருப்பீர்கள் என்பது எமக்குத் தெரியும்.
ஒன்று சர்வதேச நெருக்கடி. மற்றையது உள்நாட்டு நெருக்கடி.
இதில் தற்போது பரப்பப்பட்டு வரும் வதந்திகள் உளவியல் சார்ந்த புலனாய்வு வேலைகளை சிங்கள இன வெறி அரசு, இந்தியா, தென்னாசியாவில் காலூன்ற நினைக்கும் மேற்கத்தேயங்கள், சீனா, றைசியா அமெரிக்கா போன்ற எல்லா அரசுசுகளும் தமது நலனையிட்டு சர்வதேச அரங்கில் நல்ல சிறந்த ஒரு நடிப்பாற்றலை வெளிப்படுத்துகின்றன.
நாம் அதை இறுதியில் வட்டுவாகல் வரை கண்டு களித்தோம். அதற்கு ஏற்றாற் போல் நாம் எங்களுடைய ஆக்ரோசமான கை தட்டல்களை இந்த நாடுகளுக்கு தெரிவிக்க கடமைப் பட்டு இருக்கிறோம் என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அத்தோடு எங்கள் இரத்த மரபணுக்களில் படிந்து இருக்கும் ஒன்று படாத குணமும் காட்டிக்கொடுக்கும் சாதுர்யமும் படைத்த இன சகோதரர்களுக்கும் எங்களின் பணிவான நன்றிகளை தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஏனெனில் இவர்கள் எல்லோரும் சீறுந் தமிழனின் உண்மையான நிலையை தமிழனுக்கு உணர்த்தி இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம். நாம் மிகவும் இறுமாந்து இருந்தோம். அந்த இறுமாப்பை சிதறடித்து இப்போ ஒரு குற்ற உணர்வை எல்லா தமிழனுக்கும் பரிசளித்து இருக்கிறார்கள்.
நாம் ஒரு உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். சிங்களவன் முழு உலகையும் கொண்டு எம்மை தோற்கடித்து இருக்கிறான். அந்த இறுமாப்பு அவனிடம் நிறையவே உண்டு. அதை நாம் அனுபவித்து அதன் பின்பு தான் உங்களுக்கு இப்படி ஒரு மடலை எழுதக் கூடிய நிலைக்கு நாம் வந்தோம்.
வட்டுவாகல் தாண்டும் போது வரவேற்றவர்களில் நான் ஒரு சீக்கிய இந்திய தளபதியைக் கண்டேன். சிறிது தூரத்தில் சிங்களப் படை சிப்பாயின் சீருடையில் ஒரு வெள்ளை இன அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. கள முனைகளுக்கு அப்பால் நான் கண்ட முதலாவது வேற்று நாட்டு படை அதிகாரிகளில் இவர்கள் என்னை கவர்ந்தார்கள்.
ஏனெனில் மோட்டார் எறிகணை வீச்சுக்குள் இருந்தார்கள். வரும் போது ஒர் சிங்கள இராணுவத்தினர் “ LTTE செல் அடிக்கப்போகுது வேகமாக செல்லுங்கள்.” என கட்டளை வழங்கிக்கொண்டு இருந்தான். LTTE யின் செல்லை நினைத்தால் தங்களுக்கு தலையிடி வருவதாக மேலதிக தகவலையும் சொல்லிவைத்தான். ஆனால் துரதிஸ்டவசமாக அவனுக்கு தலையிடி கொடுக்க எம்மிடம் செல்கள் கையிருப்பில் இருக்கவில்லை என்பதை அவன் எப்படி அறிவான்?
வரும் போது நந்திக் கடலுக்கும் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட ஒடுங்கிய பகுதிகளில் நான் அதிக இராணுவத்தைக் காணவில்லை. ஆனால் செல் மட்டும் மலையாக மக்கள் மீது பொழியப்பட்டு கொண்டே இருந்தன. மக்களின் வெளியேற்ற பாதையை படம் பிடிக்க 3 வேவு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு அந்த இடங்களை 81 மோட்டார்களும் 5 இஞ்சி செல்களும் நிரையாக தொடர்ச்சியாக வீசிக் கொண்டு இருந்தார்கள். ஒரு மனிதனின் இடுப்புக்கு குறிவைத்து சுடப்பட்டும் நீண்ட தூர சுடகலன் பிரயோகம் நடை பெற்றுக் கொண்டு இருந்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டை தாண்டிய மக்களை விளையாட்டாக சினைப்பர் துப்பாக்கியாளர் இடையிடை சுட்டுக் கொண்டே இருந்தனர்.
சரணையடைய கைகளை தூக்கிய விடுதலைப்புலிகள் சுடப்பட்டனர். நடக்க முடியாமல் உயிரைக் காப்பாற்ற பாதைகளில் அரக்கி அரக்கி வந்தவர்களில் அநேகமானவர்கள் சுடப்பட்டனர். ஒரு சிலருக்கு வீதிகளில் வீசிச் சென்ற சயனற் வில்லைகள் கொடுக்கப்பட்டது.
இதில் குறைந்த அளவானோர் தப்ப முடிந்தது. பங்கர்களில் வெளியேற முடியாமல் இருந்த வர்கள் புளுடோசர்களால் அப்படியே மூடப்பட்டனர். இதில் ஆண் பெண் வேறுபாடு பார்க்;கப்படவில்லை.
ஒரு சிலர் தப்பி வரும் நேரத்தில் அங்கு நின்ற இராணுவ வீரர்களின் மன நிலைதான் அவர்களின் தலை விதியை தீர்மானித்தன. எமது மக்கள் எல்லோரும் இராணுவ பயிற்சி பெற்ற மக்களாக இருந்த காரணத்தினால் இந்தப் படுகொலைகளில் இருந்து தப்ப பெரிதும் உதவின என்பதை இராணுவம் கூட ஏற்றுக் கொள்ளும்.
இறுதி நாளில் மட்டு;ம் சுமார் 6000 மக்கள் கொல்லப்பட்டனர்;.
மொத்தமாக இந்த யுத்தத்தில் 50000 பேர் வரை படு கொலை செய்யப்பட்டு 150000க்கு மேற்பட்ட மக்கள் காயப்படுத்தப்பட்டு 25000க்கும் அதிக மானவர்களை ஏதோ ஒரு வித்தில் ஊனமாக்கப்பட்டனர்.
எங்களின் இறுதி நிலப்பரப்புக்குள் நடந்து போக இடமில்லை. ஓரே மக்கள். அதற்குள் பிணங்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன. மலங்களிக்க கூட ஒரு இடமில்லாத நிலைமை. எல்லாமே வெளிப்படையாக நடந்தேறின. யாரும் யாரையும் பார்க்கும் நிலைமையில் இல்லை.
தமிழன் வாழ்வியலில் மறக்கப்படமுடியாதது ஒன்று. மிகப்பெரும் கடனை உலக நாடுகள் சிங்களவனுக்கு கொடுத்தது. (பணமும் ஆயுதமும்.) சிங்களவன் எமக்கு கொடுத்தது மரணமும் ஓலங்களும்.
இதை நான் எந்த திரைப்படத்திலும் பார்க்கவில்லை. இரண்டாம் உக யுத்தம் கூட இவ்வளவு குறகிய கால இனப் படுகொலையை ஒரே நேரத்தில் நிகழ்த்தவில்லை என நான் நினைக்கின்றேன்.
ஆனால் எமது மக்கள் இறுதிவரை எம்முடன் நின்று எம்மைப் பலப்படுத்தினார்கள். இப்போது அவர்கள் எங்களாலேயே ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இதை சர்வதேசம் திறம்பட செய்தது.
எம்மை போரிட செல்ல விடாமல் ஒரு தீர்வை எமது மக்களுக்கு நாட்டை பெற்றுத்தருவோம் என மறைமுக வாக்குறுதிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் போன்ற தோற்றத்தையும் காட்டி நாம் இறுதியில் ஏமாற்றப்பட்டோம். இதை தமிழர் பரம்பரை உள்ளவரை மறக்க முடியாது.
தமிழ் மக்கள் செய்த ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் பிரயோசனம் அற்றவையாக்கப்பட்டு புலம் பெயர் தமிழர்கள் ஏமாற்றப்ட்டார்கள். அதை விட கொடுமை சொந்த நாட்டில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த எந்த தமிழ் உறவுகளும் வாய் கூடத் திறக்கவில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு உயிர் பயத்தை ஊட்டி இருந்தான் சிங்களவன்.
எனக்கு ஒரு சந்தேகம். நாம் சரணடையும் பரம்பரையில் வந்தவர்கள் அல்லவே. எப்படி 10000க்கும் மேற்பட்ட புலிகளை சரணடையச் செய்ய முடிந்தது என்பதே. அதற்கான விடைகளை நீங்கள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும்;. அதற்கான ஆரம்ப வித்து தூவப்பட்டது சமாதான உடன்படிக்கையில் என்பதே.
36 வருடங்களாக போராடிப் போராடி எங்கள் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து இருந்தார்கள் என்பது உண்மைதான். அதனால் எல்லோரும் ஓர் போர் நிறுத்தத்தை விரும்பியது என்னவோ உண்மை ஆனால் அதுவும் சர்வதேச நிர்ப்பந்தத்தில் தான் என்பதை உலகே அறியும்;.
சமாதானத்திற்கு முன் வீரனாக இருந்தவன் எப்படி கோழையாக மாற்றப்பட்டான் என்பது மிகவும் சுவாரஸ்சியமானவை.
சர்வதேச பாணியில் கால அளவைப் பார்த்து எல்லோருக்கும் திருமணங்கள்.
சர்வதேச இராணுவம் என கற்பனை பண்ணி எல்லோருக்கும் மாதாந்த கொடுப்பனவுகள்.
வசதி வாய்ப்புக்கள். சட்லைற் ரீவிடிஸ்கள். மின்சாரம் அல்லது சோலார் சிஸ்ர வசதிகள். நவீன வாகனங்கள் அதை விட நவீன கலாச்சாரங்கள் எல்லாம் வெகு விரைவில் பரப்பப்பட்டன. இதைப் பல தொண்டு நிறுவனங்கள,; மதம் சார்ந்த நிறுவனங்கள் என்பன மக்களின் துன்பம் போக்க இலவசமாகவே செய்து வந்தன.
ஒரு சில நாடுகள் கொடுப்பனவுகள் வளங்க பணமும் கொடுத்தன என்பது திரைமறைவுக் காட்சிகள் அதிகமானவை.
உதாரணம் சமாதான காலத்தில் எம்முடன் எங்கள் மக்களுக்காக பாடுபட்ட ஒரு ஐ.நா தொண்டு நிறுவன தலைமை பெண் அதிகாரி பாம்பு கடிக்கு இலக்கானார். உடனே வந்தது இராணுவ கெலி. என்னடா கெலி வருகிறது எனப் பார்த்தால் உண்மையில் அவர் ஒரு இராணுவ மேயர் ஜெனரலுடைய மாணவி. ஆனால் அவருக்காக எங்கள் முகங்கள் கூட திறந்தே கிடந்தன. அவரும் எங்களுக்கென்றால் தனது வாகனத்தைக் கூட பரிசளிப்பார்.
திறமையான அப்படி ஒரு ஊடுருவல். இதே போல் பல நிறுவனங்கள் எம்மால் கண்டுபிடிக்கப்பட்டன.
நேர்மையாக அல்லது மக்களுக்காக சேவை செய்தார்கள் என்பவர்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டார்கள்.
நாம் சாமாதானத்தின் பின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு பரப்புரைகளுக்கு போய் வந்தோம். அங்கு எம்முடன் தொடர்பை ஏற்படுத்திய பல வல்லவர்கள் ஒர சில இராணுவ வீரர்களை கொண்று தமது வீரப் பிரதாபங்களை எமக்கு காட்டுவார்கள். நாங்களும் அவரை விட்டால் ஆள் இல்லை என நினைத்து பழைய ஆட்களைப் பின்னுக்கு தள்ளி அவர்களை புதுப் புலிகளாக சேர்த்துக் கொள்வோம். அவர்களும் நம்பிக்கையாக நடந்து கொள்வார்கள். பின்பு முக்கிய தளபதிகளுடைய மெய்ப்பாது காவலர்கள் அல்லது முக்கியமான வேலைகளை செய்து கொண்டு இருக்கும் நபர்கள் ஆகிவிடுவார்கள்.
இது எங்கே கொண்டு விட்டது தெரியுமா?
ஒரு சிலர் ஆவணங்களுடன் கம்பி நீட்டினர்.
பல தோல்விகளுக்கும் காரணமே கண்டு பிடிக்கப்படவில்லை இன்று வரை.
ஒர சிலர் திறமையாக இறுதிவரை இருந்து இறுதியில் தப்பி வந்தனர்.
அவர்கள் எல்லோரும் இறுதியாக சரணடைய வரும் மக்களோடு வந்த விடுதலைப்புலிகளை பெயர் கூறி வரவேற்றனர்.
ஒரு சிலர் இராணுவ சீருடையில் இருந்தனர். தாம் இராணுவம் என வெளிப்படையாக அறிவித்தனர்; எங்கள் எல்லோருக்கும் கண்ணீரைப் பரிசளித்த தமிழ் உத்தமர்கள் இவர்கள்.
மலையகம் மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளை சேர்ந்த தமிழர்கள்.
நாமும் சிங்களம் தெரிந்த புலிகளைத்தானே விரும்பினோம். அதனால் இராணுவம் எமக்கு கொடுத்த அன்பளிப்பு அவர்கள்.
இப்படித்தான் ஒருவர் வைத்தியசாலைக்கு வந்தார். தொப்பியும் முகத்துக்கு கறுப்புத் துணியும் கட்டியிருந்தார். எல்லோரையும் பாடசாலை மாணவர்கள் போல் இருத்திவிட்டுக் கேட்டார். இதில் புலிகள் இருந்தால் சரணடையுங்கள் என. யாரும் எழும்பவில்லை. அவர் ஒரு சிலரை சுட்டிக்காட்டி நீ இந்த படையணியில் இருந்த நீ! உனது பெயர் இது எனக் கூற,
அவர்கள் இல்லை என மறுத்தனர். வந்தவன் ஒரு இகழ்ச்சி சிரிப்பின் பின் தொப்பியைக் கழட்டிக் கேட்டான். என்னைத் தெரியுமா? என்ன யாரும் பதில் சொல்லவில்லை. முகத் துணியைக் கழட்டினான். ஒரு சிலர் குனிந்து அழுதனர். பதில் சொல்ல மறுத்த பலர் தலை குனிந்து இருந்தனர். அவனே கதைக்கத் தொடங்கினான். நான் ஒரு இராணவவீரன். சமாதான காலத்தில் ஊடுருவியிருந்தேன். நான் “கேணல் சாள்ஸ்க்கு பொடிக்காட்டாக இருந்திருக்கிறேன்”;.
அவருக்கு கிளைமோர் அடித்துக் கொன்றதும் நான் தான் என்றும், சில திகதிகளில் வன்னிக்குள் பஸ் வண்டிகள் மீது நடந்த தாக்குதல்களையும் தான், தான் வழி நடாத்தியதாக சொன்னான். எப்படியிருக்கிறது?
உண்மையில் இதற்காக நாமெல்லோரும் வெட்கப்பட வேண்டும்; இதில் என்ன மனக்கஸ்டம் என்றால் எனது சிறப்புத் தளபதி கூட இதற்கு தப்பவில்லை. அவரும் இதில் விழுந்து விட்டார். அந்தப் பாவத்திற்கு நாமெல்லாம் காரணமாகவும் அமைந்தோம்; எனும் போது வெட்கமாக இருக்கிறது. இதற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்ய போகிறாம் என்னும் கேள்வியும் எழுகிறது.
இதை நான் ஏன் உங்களுக்கு சொல்ல வருகிறேன் என நீங்கள் நினைக்கலாம். நாம் நிறைய இழந்து விட்டோம். எங்களின் கண்டுபிடிப்புகள், சொத்துக்கள், ஆயுதங்கள், நிலங்கள் அவற்றையெல்லாம் விட பல்லாயிரம் மாவீரர்கள்.
எல்லாமே விடுதலைக்காக. அவை தமிழீழம் என்ற ஒன்றுக்காக. அது மாறாது இறுதித் தமிழன் உள்ளவரை இந்த யுத்தம் தொடரும். இது துட்ட காமுனுவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து நடக்கும் பெரும் போர். இதில் நாம் தொடர்ந்து தோற்க முடியாது. தொடர்நு அடிமையாக வாழ முடியாது.
நாம் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வரும் சிங்களவனுக்கு முற்பட்ட ஒரு இனம.;; ஆனால் எம் முன்னோர் வரலாற்று சான்றுகளை எங்கள் சந்ததிக்கு விட்டு செல்லவோ அல்லது சேகரித்து வைக்கவோ இல்லை. இருந்தும் தென் இந்தியா புராண இதிகாசங்கள் மதம் சார்ந்த விடயங்கள் எங்களை இந்த மண்ணின் பூர்வீக குடிகளாக அறிவிக்கப் போதுமானவை.
நாம் இராணுவப் பரம்பரை. எங்களின் ஆட்சியில் இந்த முழு இலங்கையுமே இருந்தது. அதை எங்கள் ஆட்கள் தான் பின் நாளில் கூறு போட்டார்கள். அந்நியருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். இறுதியில் அடிமைப்பட்டார்கள். இது வரலாறு. இந்த வரலாற்றை மாற்றப் புறப்பட்ட வீரன் தான் எங்கள் தலைவன். எமது அண்ணன். பிரபாகரன். அவரின் மறைவு தற்காலிகமா? அல்;லது நிரந்தரமானதா? என யாரும் இப்போ உங்களக்குள் சேறு பூசும் வேலைகளை செய்ய வேண்டியதில்லை.
அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் எதிர்காலத்தை நன்கு உணர்ந்து இருந்தார். எனவே அதற்கு களம் பதில் சொல்லும். எனவே என் அன்பு உறவுகளே இதைப் பற்றியோ அல்லது என்ன செய்யலாம் என்ற வாதப் பிரதிவாதங்களை தற்போது நிறுத்தி யார் தலைவர் என உங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளாமல் நீங்கள் ஏற்கனவே என்ன வேலைகளைச் செய்தீர்களோ அவற்றை இன்னும் திறமையாக இராஜதந்திர நகர்வுகளுடன் எம் புலம் பெயர் வாழ் தமிழர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது எங்கள் அவா.
அதன் மூலம் எமது விடுதலைக்கு மேலும் உரம் சேர்ப்பீர்கள் என நாம் நம்புகிறோம். ஏனெனில் உங்களின் இந்த தடுமாற்றம் எங்களைத் தோற்கடிக்க உதவிய நாடுகளுக்கு இன்னும் சந்தோசத்தையும் அவர்களின் ஏனைய வேலைகளை இலகுவாக்கவும் உதவுகின்றன.
அவர்களும் இதையே எதிர் பார்க்கிறார்கள்.
இதில் இந்தியாவும் அமெரிக்காவும் முக்கியமான பாத்திரங்கள். ஏனெனில் 16ம் திகதி வரை நாட்களைக் கடத்தி, எங்களை ஏமாற்றிய கைங்கரியம் இவர்களை முழுமையாக சாரும். இதற்கு ஏனைய நாடுகளும் உதவின. நாம் இறுதிவரை நம்பியிருந்தோம்.
ICRC இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதில் பணி புரியும் வெள்ளையர்கள் இராணுவத்திற்கு வேலை செய்கிறார்கள் என்பதை நிருபிக்க முடியாவிட்டாலும் எமக்கு அந்த சந்தேகம் நிஜம் என்பது தெரிந்து இருந்தது.
உதாரணம் காயமடைந்த நோயாளர்களை ஏற்றிக் கொண்டு போகும் கிறீன் ஓசையன் கப்பலில் வரும் வெள்ளையினப் பெண் அதிகாரி வைத்தியசாலையில் வந்து எமது பிரதேச வைத்தியர்களுடன் ஒரு நாள் வாக்குவாதப்பட்டதை நான் நேரில் கண்டேன். காரணம் முந்நூறுக்கு மேற்பட்ட நோயாளர்களை ஏற்ற வந்ததாகவும் இப்போது நூற்றைம்பது வரையானோர் இருப்பதாகவும் கூறி ஓர் வெள்ளைப் பெண்மணி சண்டை பிடித்தார். ஏனெனில் கடும் காயக்காரர்களுக்கு மட்டும் நாங்கள் அனுமதியை வழங்கினோம்.
சிறிது நேரத்தில் வைத்திய சாலை வளாகத்தில் நின்ற படி அந்தப் பெண்மணி யாருக்கோ சற்லைற் தொலைபேசி மூலம் கதைத்தார். ஒரு சில நிமிடங்களிலேயே வைத்தியசாலையை அண்டிய பகுதியில் சுமார் 20, 30 எறிகணைகள் விழுந்தன. எல்லாமே தரப்பாள் வீடுகள். சிதறியவர்கள் போக, அன்று அந்தப் பெண்மணி 450 பேர் வரையில் ஏற்றிக் கொண்டு போனார். இது ஒரு வழி முறையாக மக்களை மீட்கும் இலங்கை இராணுவத்திற்கு iஉசஉ வழங்கிய ஒரு சிறு உதவி தான்.
அதை விட இரகசிய உள் நுழைவுகளுக்கு UN வாகனங்களில் கூட இராணுவம் பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் இந்த நிறுவனங்கள் எங்களில் பிழை பிடிப்பதிலும் எங்களுக்க எதிராக மக்களை திசை திருப்புவதிலும் பெரும் பங்கை ஆற்றின.
பிபிசி றோவின் கைப் பொம்மையாக எங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை உலகெங்கும் முடுக்கி விட்டது. இதற்கு அமெரிக்காவும் விதி விலக்கல்ல.
பல நாடுகளுக்கு காலச் சந்தைகளில் ஆயதங்களை விற்கும் இதே அமெரிக்கா எங்களையும் வாழ விடவில்லை. தனது நலனுக்காக எதையும் செய்யும் அமெரிக்கா பல நாடுகளுக்கு சுதந்திரத்தையும் ஆயதங்களையும் பல நாடுகளை சூறாடியும் கொண்டு தனது விஸ்தரிப்பை செய்கிறது.
ஆனாலும் றைசியா சீனா போன்ற அமைரிக்காவிற்கு எதிரான நாடுகளும் எங்கள் மண்ணில் தமது பங்குக்கு இராஜதந்திர நகர்வுகளை செய்கின்றன. அமெரிக்காவை காலூன்ற விடாமல் தடுத்தும் வருகின்றன.
ஆனால் இப்போதைய காலூன்றலுக்கு உதவி, இலங்கை அரசுமட்டும் என நம்பி, எங்களைக் காட்டிக் கொடுத்து அமெரிக்கா எங்கள் பலரை, ஆயுதக் கொள்வனவு செய்தார்கள் எனப் பிடித்து உள்ளே போட்டு எங்கள் சர்வதேச வலைப் பின்னலையும் இலங்கை அரசிற்கு காட்டிக் கொடுத்து புலனாய்வு தகவல்களையம் வழங்கியது.
ஏனைய நாடுகளையும் தனது வழியை பின்பற்ற செய்து, புலம் பெயர் நாடுகளில் நிதி முடக்கம், ஆயுத கொள்வனவுகளைத் தடுத்தல். ஆதரவாளர்களை கைது செய்;தல் போன்ற வற்றை தான் விரும்பியபடி செய்கிறது. எங்களையும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது அவர்களின் இராணுவ நலனில் எங்களை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இன்னும் அமைரிக்காவுக்கு உண்டு.
அவர்கள் இப்போ கண் வைத்து இருக்கும் ஆட்கள் நீங்கள் தான். உங்களில் பலரை விடுதலைப்புலிகளின் பிரமுகர்கள் என இனம் கண்டபின் உங்களுடன் இப்போ பேச வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. இதை இலங்கை அரசிற்கு வலியுறுத்தி வருகிறது. இது மிகவும் பெரிய ஒரு இராஜதந்திர சதி. இதில் தமிழ் மக்கள் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.
இதே போல் தான் ஆயுதம் வாங்கினார்கள் என காட்டிக் கொடுத்தவர் ஒரு தமிழர். அவரையும் அவர் செய்த போதைப்பொருள் வியாபாரத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்று அவர் காட்டிக் கொடுக்க வேண்டுமென கேட்கப்பட்டு, அவர் பின்பு அவர்களைக் காட்டிக்கொடுத்தார் என்பதை தகவலறிந்தவர்கள் சொல்கிறார்;கள்.
எனவே அமெரிக்காவும் வஞ்சகன். இந்தியாவும் வேண்டாம்; நாம் நாமாக இருப்போம் ஏனெனில் சமாதானத்திற்கு முன் யாராலும் எங்களை எடைபோட முடியாமல் இருந்தது. நாங்கள் ஒரு விடுவிக்கப்படாமல் இருந்த புதிர். எங்களைப் பார்த்து உலகம் வியந்தது. இதை சர்வதேசம் திட்மிட்டு சிதறடித்திருக்கிறது. நாங்கள் தோற்க காரணமானவை சில.
1. சமாதான உடன் படிக்கை.
2. சுனாமி
3. கருணா அம்மான் எங்களில் இருந்து பிரிந்து அரச கைபொம்மையானது.
4. பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் அண்ணையின் வீர மரணம்;
5. கேணல் சாள்ஸ் அண்ணையின் வீர மரணம்.
6. பிரிகேடியர் பால்ராஜ் அண்ணையின் வீர மரணம்.
என்பன மிக முக்கியமானவை.
இவற்றை எங்களால் உடன் மறு சீரமைக்க முடியாத படி போர் தொடங்கப்பட்டது. இதை இந்தியாவே நடாத்தியது. எல்லா வழிகளாலேயும் அடைத்து எங்கள் வயல் நிலங்களை எல்லாம் சூறையாடப்பட்டு, பின் ஆறுதலாக எங்கள் ஊர்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இதை எதிர்த்து போரிட முடியாமல் எங்களுடன் திரை மறைவில் பேச்சு நடாத்தப்பட்டது. இறுதியில் மக்களுக்குள் ஊடுருவி மக்களை மாற்றும் முயற்சியிலும் இவர்களுக்கு ஓரளவு வெற்றியைக் கொடுத்தது.
ஏனெனில் நாம் நீண்ட பல வருடங்களாக எமது கட்டுப்பாட்டுக்குள் மக்களை சுதந்திரமாக வைத்திருந்தோம். எங்களின் ஆட்சியை எல்லோரும் மெய்ச்சினார்கள். களவுகள் கொள்ளைகள் இல்லை. எந்த நேரமும் யாரும் எங்கும் போய் வரலாம.;; கலியாணம் கச்சேரி பெருமையாக நடந்தன. வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது. மக்கள் வீடு வாசல்களைக் கட்டி வாழ்ந்தனர். மாணவர்கள் கல்வி பொழுது போக்கு என மெய்மறந்து இருந்தனர்.
எல்லோருமே விடுதலை இது தான் என இருந்தனர். சமாதானம் பலரை குடும்பஸ்தர்களாக மாற்றியது. பலர் வெளிநாடு போயினர். அல்லது வெளி மாவட்டங்களுக்கு போயினர். மீண்டும் யுத்தம் வரலாம் என நாம் சமாதான காலத்தில் முடிவெடுத்த நேரத்தில் யாரும் இதய சுத்தியுடன் போராட வர விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கு போராடவேண்டிய தேவை இருக்கவில்லை. எந்த துன்பமும் இல்லாதவன் ஏன் போராட வேண்டும்.
அதனால் கட்டாய ஆட் சேர்ப்பு நடை பெற்றது. இதைச் சாக்காக வைத்து பலர் பலவிதத்தில் மக்களுக்கும் எமக்கும் விரிசலைத் தோற்றினர். இதை எமது போராளிகள் பலர் செய்தனர் என்பதே மனவருத்தமான விடயம்;.
இறுதியில் நாங்கள் பிள்ளை பிடிகாரராக சர்வதேச அரங்கில் பிரச்சாரப்படுத்தப்பட்டோம். போராளிகளைக் கள முனைகளில் இருந்து ஓட, பெற்றோர் ஊக்கம் கொடுத்தனர். விளைவு எதிரி எங்கள் வயல்கள் தாண்டி, கிராமம், நகரம் தாண்டி, எங்கள் வாசல்களை தாண்டி எம்மைச் சுட்டுக் கொன்றான்.
ஆகவே இன்று நிலைமை அப்படி இல்லை. முகம்களில் வாழும் எங்கள் உறவுகள் கண்ணீரோடு வாழ்கிறார்கள். அவர்கள் இப்போ தங்கள் நிலையை, உயிர் தப்பி வந்ததை விட சொந்த மண்ணில் செத்துப் போய் இருக்கலாம் என்பது அவர்களின் இன்றைய எண்ணப்பாடு. கஞ்சியைக் குடித்தாலும் அவர்கள் அங்கு சுதந்திரமாக இருந்தார்கள். அவர்களுக்கு எறிகணைகளும் உணவுப் பட்டினியும் இல்லாவிட்டால் இன்று இந்த முகாம்கள் யாரையும் கண்டு இருக்காது.
அவர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் நிச்;சயம் சொந்த மண்ணுக்காக போராடியிருப்பார்கள்.
அவர்களின் இந்தப் போக்கை மாற்ற இலங்கை அரசு ஒர் உளவியலை பாவிக்கின்றது. எல்லாவற்றிற்கும் வரிசையில் நிற்கவைத்தல். (சாப்பாடு, மருந்து, குடி தண்ணீர் எல்லாம்). இதனால் மனிதனுக்கு அன்றாடம் சாப்பிடவே பெரிய பாடாக இருக்கும்போது அவன் வேறு எதைப் பற்றியும் யோசிக்;காமல் செய்யும் ஓர் உளவியல் போர்.
குளிக்க தண்ணீர் இல்லை. குடிக்கவும் அடிபாடு. நீண்ட வரிசையில் நின்று தான் நீரைப்பெற்று கொள்ள வேண்டும். மல சல கூடங்களுக்கு பாவிக்க போதமானதாக நீர் இல்லை. எல்லா இடமும் ஒரே நாற்றம்; வறண்ட களிதரையில் தண்ணீர் கூட வற்றாது. எனவே ஓரே சாக்கடை நாற்றம். எல்லோருக்கும் வயிற்றோட்டம், காய்ச்சல், செங்கண்மாரி வேறு நோய்களும்;.
மருத்துவத்திற்கு செல்ல பல கட்டுப்பாடுகள். போகவே முடியாது. அதற்காகவே புல் மோட்டையில் இருந்த இந்திய மருத்துவமனை வீணாக செட்டிகுளத்திற்கு மாற்றப்படுகிறது. 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனை முகாமுக்குள்ளேயே. இனி யாரும் வெளியில் மருந்துக்குக் கூட செல்ல முடியாது. இந்திய மருத்துவர்கள் உருவத்தவத்துடன் புலனாய்வும் செய்வார்கள். றோ தனது பங்கிற்கு ஆட்களை சேகரித்துக் கொள்ளும்;.
டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோருடன் பான்கி மூனும் மற்றய நாடுகளும் இந்த உலகிலேயே மிகப் பெரிய சிறையைக் கவனித்துக் கொள்வார்கள். அமெரிக்கா அதற்கு வாழ்த்துச் சொல்லும்;. இதைப்போல வசதிகள் எங்கும் செய்து கொடுக்கவில்லை என.
இதைச் சொல்லும் போது ஒரு ஞாபகம் வருகிறது. முள்ளிவாய்க்;காலில் நின்ற நேரம் மூன்று நாள் போர் நிறுத்தம் அறிவித்தது அரசாங்கம். இது எல்லோருக்கும் தெரியும். அதை ஐ.நா.வர வேற்று பெரிய பிரச்;சாரம் செய்தது. அப்போது சிங்கள இன வெறி அரசு அறிவித்தது விமானத் தாக்குதலையும் கனரக ஆயத பாவனையும் நிறுத்தி வைக்கிறோம் என. அறிவித்த அன்று காலையில் இருந்து மாலை வரை கிட்டத்தட்ட 20-22 தடைவைகள் வரை ஓயாத விமானத்தாக்குதல்கள் நடைபெற்றன.
ஒரு தடவை சுமார் 3 அல்லது 4 மிகையொலி விமானங்கள் தாக்குதலை நடாத்தின. 30 நிமிடம் கூட இடைவெளி கொடுக்கவில்லை. ஏராளமான மக்கள் குடியிருப்பு அழிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. ஆனால் வெளி உலகம் அறிவிப்பை வர வேற்றுக் கொண்டு இருந்தது. தொடர்ந்து வந்த மூன்று நாட்களும், சிங்களவன் ஆட்டிலறிகளையும் முல்ரி பரல்களையும் மக்கள் செறிந்த எல்லா இடங்களுக்கும் அடித்து, வேவு விமானம் மூலம் படம் பிடித்து இடைவிடாது மக்களைக் கொன்று தள்ளிக் கொண்டிருந்தான்.
விடுதலைப் புலிகளை அழிப்பது என்றால் களமுனைகளையும் இராணுவ நிலைகளையும் தான் அழித்த இருக்க வேண்டும்.
சங்கக் கடைகளில் நீண்ட தொடர் வரிசையில் வைத்து பசியைப் போக்க கஞ்சியாவது காய்ச்சுவோம் என காத்திருந்து அரைக்கிலோ அரிசிக்காக நாட்கணக்கில் ஏங்கித் தவிக்கும் மக்களை அவர்களின் வாழ்விடத்தை ஏன் குறிவைத்தது இன வெறி அரசு. ஏன் என்று ஐ.நாவும் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தான் சொல்ல வேண்டும்;.
மக்கள் பசி போக்க விடுதலைப் புலிகள் மக்களுக்கு சுவையான கஞ்சியாவது வளங்கினார்கள் இறுதிவரை. ஆனால் அரசை நம்பி வந்த மக்களுக்கு பல நாட்கள் உணவே கிடைக்கவில்லை.
இராணுவம் வழங்கிய தண்ணீர் போத்தலுக்கும் பிஸ்கற் பக்கற்றுகளுக்கும் பலர் அடிபட்டு இறந்து போயினர். தற்;போதும் உதவி நிறுவனங்கள் இல்லா விட்டால் அரச படை பிச்சைதான் எடுக்கவேண்டும்;. அதைத்தான் சிங்கள இன வெறி அரசு செய்து கொண்டு இருக்கிறது.
இதில் ஐ.நாவின் பங்கு அளப்பெரியது. பட்டினியால் தவிக்கும் போது உணவை வளங்காமல் ஆயதமாக்கி தடுத்தது.
ஆரம்பத்தில் 70000மக்களே உள்ளனர் என்றும் இறுதியில் 2000 பேர் என அரசு அறிவிக்க அவர்களுக்கு அதை விட குறைந்த உணவையே ஐ.நா அனுப்பியது. ஆனால் இறுதி நாட்களில் எப்படி 200000க்கும் மேற்பட்ட மக்கள் வந்தார்கள் என்பதை இவர்கள் வாய் திறக்கவி;ல்லை. முகாம்களில் 400000க்கும் மேற்பட்ட மக்கள் எப்படி வந்தனர்.
இந்த உண்மையை தமிழன் வாய்கிழியக் கத்தியும் ஏன் ஐ.நா ஏற்றுக் கொள்ள வில்லை. உண்மையில் இந்த ஐ.நா இனப்படு கொலையை அறிந்து இருக்கிறது.
சிங்களவன், தமது பேச்சைக் கேட்க வேண்டும் என்பதற்காக செய்மதிப் படங்களைக்காட்டி பூச்சாண்டி காட்டிய இவர்கள் மக்களின் அழிவைப் பார்த்து ரசித்தது எந்த விதத்தில் நிட்சயம் என அவர்களுக்கு மட்டும் தெரியும்.
அதைவிட சமாதானத்தை ஏற்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி அரசு கருணாவைப்பிரித்து பின் பிள்ளையான் தலைமையில் ஆரம்பித்த ஆட்கடத்தல் (கொலைகள்) இன்று அரச கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்தது.
முக்கியமாக தலை நகர எல்லாத் தமிழரையும் பல மில்லியன் கோடிகளில் பாது காப்பு நிதி எனக் கடத்தி கப்பம் பெற்றார்கள். இதற்கு உதவிய தமிழர்களும் பின் உண்மை வெளியே வராமல் இருக்க காணாமல் செய்யப்பட்டார்கள்.
எத்தனை ஆயிரம் பிணங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் இருக்கிறது என கருணா, பிள்ளையான், EPDP, Plote, UNP, தற்போதய அரசு என்பவற்றிடம் தனித்தனியாகத் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றில் சேர்ந்த பணத்தை அமெரிக்காவுக்கு அருகில் உள்ள நாடுகளில் வைப்பு செய்ததையும் நாம் செய்தியாகப் படித்தோம்.
இந்த கோடிக்கணக்கான டொலர் நிதி பின்பு தமிழ் மக்களுக்கு எதிரான போரில் ஆயுதங்களாக தமிழ் மக்களையே திரும்பி வந்து சேர்ந்தது.
இதை CIA போன்ற நிறுவனங்கள் அறியவில்லையா? அறிந்து இருந்தால் அவர்களின் படைத்துறை வெளியீடுகளில் இலங்கைக்காக ஒதுக்கப்பட்ட பக்கத்தில் எழுத்தில் இருக்கவேண்டும்.
ஆனால் அவர்கள் புலிப்பயங்கரவாதம் என எங்களுக்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்து எம்மை சர்வதேசத்தில் இருந்து அந்நியப்பட வைத்தார்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களை ஒபாமாவோ அல்லது கிலாரியோ காப்பாற்ற வரவில்லை. அமெரிக்க நலனை நாமும் புரிந்து அதற்கேற்றாற் போல் விலை போகாமல் எதிர்காலப் போரில் நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்.
எழுத்துப் பிரிவில் இரண்டு பிரிவினர் எழுதுகிறார்கள். ஒன்று உண்மையை நடு நிலைமையாக எழுதுகின்றது. மற்றையது உளவு நிறுவனங்களுக்கு விலை போனவர்கள். அல்லது எதிர் நாட்டு அல்லது கட்சி சார்ந்தவர்கள், எங்களைப் பற்றி எழுதினால் தான் எதுவும் விற்பனையாகும் என்பதை நன்கு அறிவார்கள்.
அதனால் நாலு வாரத்தையில் எம்மைப் புகழ்ந்து, சூசகமான முறையில் எங்களை, எங்கேயாவது ஒரு இடத்தில் கடுமையான குற்றம் சாட்டி எழுதுவார்கள். பார்க்கும் போது நடு நிலைமையாளர் போல்தான் தெரியும். ஆனால் உண்மையில் எங்களுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் தந்திரமான முறையில் இவர்கள் பரப்புவார்கள். இவர்களை நாம் கொஞ்சம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். சமூகத்திற்கும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்;. எனவே விடுதலை பற்றி மக்களை பிழையாக வழிநடத்துபவர்களை எழுத்துலகை விட்டு அகற்றுங்கள்.
உண்மையில் எமது மக்கள் தங்கள் சந்ததிக்கு இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்கள் எல்லாவற்றையும் சிறு வயதிலேயே கற்பிக்க வேண்டும் என்பது எமது விண்ணப்பம்.
ஏனெனில் இராமாயணம் மகாபாரதம் என்பவற்றைப் பிரதி பண்ணித்தான் மகாசேனன் காலத்தில் அவன் மாமனான மகானாம தேரர், திட்மிட்டு எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது மகாவம்சம்.
இதை வைத்துத் தான் இன்று சிங்கள மக்களை உசுப்பேற்றிக் கொண்டு இருக்கின்றனர். உண்மையில் விஜயன் சிங்களவனும் அல்ல பௌத்தனும் அல்ல. அவன் வருகைக்கு முன் இங்கு மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களை மகாவம்சம் பேய்களாக சொல்கிறது.
இராமாயணம் எப்படி தென்புல தமிழர்களை குரங்காகவும், இராவணனை அரக்கனாகவும் ஆரியர் சித்தரித்தனரோ, அந்த வழி நடந்து சிங்களவர்களும் தாங்கள் ஆரியர் என சொல்லிக் கொள்கின்றனர்.
நாம் மகாவம்சம் எதை சொல்ல வருகிறது என்பதை நிட்சயம் அறிய வேண்டும்;.
ஏனெனில் அதை சிறு வயதிலேயே கற்பித்து அதன் வழியில் தான் சிங்களவன் வழி நடத்துகின்றான்.
மகிந்தனும் சங்கமித்தையும் வரும் போது சிங்களம் ஆட்சி மொழியும் இல்லை அப்படி ஒரு மதமும் இல்லை. ஆற அமர இருந்து மகானமார தேரர் பாளி மொழியில் மகா வம்சத்தைக் எழுதி பின்பு சிங்களத்தை உருவாக்கினார்கள் என்ற வரலாற்றையும், சிங்களவன் வந்தேறு குடி என்பதையும் எங்கள் உறவுகள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தாழ்மையான விண்ணப்பம்.
தமிழன் இரண்டோடு நிறுத்த சிங்களவனோ பன்றி போல் பதினாறு பெற்று பெருகி இன்று அவன் பெரும் பான்மை. நாம் சிறு பான்மை. என்று ஒரு புதுக் கதையை சொல்லி எங்களை வாழ்நாள் அடிமையாக மாற்ற நினைக்கிறான்.
எமது வரலாற்று சான்றுகளை அழித்து தமது மதச்சின்னங்களை தமிழ் பிரதேசங்களில் இராணுவ ஆக்கிரமிப்புடன் செய்து வருகிறான். இதை நாங்கள் எல்லோரும் சரிவரப் புரிந்து கொள்வதாலேயே முறியடித்து விடமுடியும்.
இதற்காகவே கைப்பற்றிய இடங்கள் எல்லாம் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லாம் தரை மட்டமாக்கப்பட்டு, போராட்ட சிந்தனை வர விடாமல் எமது ஆதிகால மற்றும் தற்கால சான்றுகள் எல்லாம் திட்மிட்டு அழிக்கப்படுகின்றன.
அத்தேடு இங்கு காணப்படும் அகழ்வாராய்ச்சி பொருட்கள் என்பனவும் இருக்கிறது. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லா விட்டால் இந்த உலகம் தமிழனை உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடும்;;.
இனி உங்களிடமிருந்து விடை பெறுமுன். உங்களுக்கு சில விடயங்களைத் தெளிவாகக் கூறுகின்றேன். இந்த யுத்தத்தில் சிங்களவன் எமது தாயகத்தை எமக்கு வளங்கும் வரை போராடுவோம்.
உலகில் தமிழனுக்கு என்றொரு ஒரு நாடு, அது தமிழீழம் என்பதை இந்த உலகிற்கு புரிய வைப்போம்.
ஒரே தலைவன் அவனே எங்கள் இறைவன். இதை நாம் என்றும் ஏற்று நடப்போம்.
வரும் துன்பங்களை ஏற்று, நம் எதிர்காலம் நோக்கிய சீரிய சிந்தனையில் எங்களை எமது தாய் நாட்டுக்காக அர்ப்பணிக்க துடிப்புள்ள ஒவ்வொரு இளைஞரும் முன்வரவேண்டும்;.
நீங்கள் எவ்வளவு தூரம் எம் தேசத்தை நேசித்தீர்கள் என்பது எமக்கும், எங்கள் மக்களுக்கும் தெரியும். நீங்கள் கூறியபடி இராணுவம் எங்கள் நிலங்களைக் கைப்பற்றினால் நாமெல்லோரும் தாயகம் சென்று ஆயதமேந்தி தனிநாடு காண்போம் என்ற வார்த்தையை மெய்ப்பிப்பீர்கள் என நாங்கள் உரிமையுடன் எதிர் பார்க்கிறோம்;.
எங்களுடன் கை கோர்த்து, நவீன உலகில் எங்களின் நாட்டை நாங்கள் உருவாக்குவோம்; என்பதில் நீங்கள் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் விடுதலைக்கு உரம் சேருங்கள்.
எங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளைக் களைந்து அநாவசியமான சந்தேகங்களை உறுதிப்படுத்த முனையுங்கள். உங்களுக்கு சரியான ஒரு தெளிவு பிறக்கும்;.
எல்லோரும் ஒவ்வொரு கதைகளை சொல்லிச் சொல்லி மக்களை குழப்பாமல் தெளிவாக இருந்து மற்றவரையும் தெளிவு படுத்துவோம்.
மகாபாரதத்தில் கிருஷ்ணர் சமாதானம் பேசித்தான் எதிரிகளை பிளவு படுத்தி, படை பலத்தை பெருக விடாமல் செய்து இறுதியில்போருக்கு சென்று வெற்றியும் பெற்றார். கர்ணனை அர்ச்சுனன் தனி ஒருவனாக கொல்லவில்லை. அதே போல் எங்களை சிங்களவனால் தனித்து வெற்றி கொள்ள முடியாது.
நாங்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறோம். மீண்டும் சிங்களவன் சேர்க்கும் படைகள் சிதறடிக்கப்படும். எங்கள் மக்களின் சதைகளையும் பிண்டங்களையும் பார்த்து மனம் இறுகி இரும்பாக இருக்கிறோம்;.
நாங்கள் இழந்தவை ஒன்றும் சாதாரணமானவை அல்ல. அவற்றை நாம் விரைவில் சிங்களவனுக்கு கொடுப்போம். போருக்கு ஆதரவு தெரிவித்த ஒவ்வொருவரும் எங்களைக் கொன்று சந்தோசமடைந்த சிங்களவனும் மனம் வருந்தி சாக என, நாம் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்;. விதைத்ததை அவர்கள் அறுவடை செய்வார்கள் பல மடங்காக.
இந்தியா நரித்தனமாக எங்களை விழுத்தி இருக்கலாம். தொடர்ந்தும் எங்களை நசுக்க முற்பட்டால் இந்திய பரந்த தேசத்தில் ஒர் நாடு தனியாக உடையும். அதை எங்கள் சேர, சோழ, பாண்டிய வம்சத்தினர் ஆள்வார்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்;. அதைப் பார்க்க தற்போதைய ஆட்சியாளர் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்பது தான் கவலையான விடயம்.
இந்திய வரலாறுகளில் நிறைய அடக்கப்பட்டவன் அரியணை ஏறிய கதைகள் உள்ளன. அவற்றை இந்த பார்ப்பனர்கள் மீண்டும் படித்து தெளிய வேண்டும்;;
கலைஞர் போன்ற பெரியவர்களை நாம் நம்பி இருக்க, அவர்களும் எல்லாம் வெறும் அரசியல் தான் என தமிழினத்திற்கே புரிய வைத்ததிற்கு அவருக்கும் எங்கள் கை கூப்பிய வணக்கங்கள்.
இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற நாம் தான் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி.
தடைகளை உடைப்போம் தமிழீழம் அமைப்போம்;.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்;.
அன்புடன்
படைப் புலனாய்வுப் போராளி
அரவிந்தன்.


கடவுள் அல்ல… தலைவர் பிரபாகரன் மனிதன்.

அது நடந்துவிட்டது என்று நம்புவதற்கு நம்மில் பலருக்கு இன்னும் முடியாமல் இருக்கிறது என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை.

நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்யாமல், கோத்தபாய ராஜபட்சே சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்கிறார், கட்டுரையாளர். பிரபாகரன் கொல்லப்படவில்லை, தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

கட்டுரையாளர் யார் என்று ஆராய்வது வேண்டாத வேலை. அவர் மிகச் சிறந்த விடுதலை உணர்வாளராகவும், மிகவும் ஆழமான தமிழ்த் தேசப் பற்றாளராகவும் கூட இருக்கக்கூடும். அவர் எவராயிருந்தாலும் நீடூழி வாழ்க! கட்டுரையில் உள்ள விஷம் அல்லது விஷயம் தொடர்பாக மட்டுமே நாம் பேசவேண்டியிருக்கிறது.

இலங்கை அரசு காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகிறோம் என்ற வாக்கிய அமைப்பு, எழுதியவரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. அந்த உடல் அவருடையதுதான் என்றே எம்மில் பலரும் நம்புகிறோம் என்று நேரடியாக எழுதாமல், எதிர்மறையாய் எழுதி சேம்சைடு கோல் போடுகிற வேலை இது.

ஊருக்கும் உலகுக்கும் இலங்கை அரசு காட்டிய அந்த உடல்தான், பிரபாகரன் சாகவில்லை என்பதற்கு சந்தேகத்துக்கு இடமில்லாத சான்றாக இன்றுவரை திகழ்கிறது. உண்மையிலேயே பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால், அவரது உண்மையான உடலைக் காட்டி உலகெங்கிலுமுள்ள தமிழர் இதயங்களைச் சம்மட்டியால் அடித்து நொறுக்கிவிட்டுத்தான் கோத்தபாய-பாசில்-மகிந்த கும்பல் வேறுவேலை பார்த்திருக்கும். அதை விட்டுவிட்டு, பிரபாகரனைப் போன்ற இன்னொரு உருவத்தைக் காட்டவேண்டிய அவசியமென்ன?

54 வயது பிரபாகரனுக்கு பதில் ஒரு 35, 36 வயது பிரபாகரன் உருவம் காட்டப்பட்டதால்தான் உலகே சந்தேகப்பட்டது. பிரபாகரனா இது, 54 வயது பிரபாகரனா இது என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு டி.வி.யைப் பார்த்தது. கட்டுரையாளருக்கு இப்படியொரு சந்தேகம் எழவேயில்லையா? அல்லது, பிரபாகரன் மீது மற்றெல்லோரையும் காட்டிலும் 420 மடங்கு மரியாதை வைத்திருக்கும் அவர், இப்படியொரு நிலையில் அவரது உடலைப் பார்க்கவேமாட்டேன் என்று கண்ணை மூடிக்கொண்டாரா?

உண்மையிலேயே கொல்லப்பட்டிருந்தால் அந்த உருவத்தைத் தானே நீ காட்டியிருக்கவேண்டும், வயதுகுறைந்த ஓர் உருவத்தை ஏன் காட்டினாய் என்று கேட்டு கோத்தபாயவுக்கு குறைந்தபட்சம் ஒரு மெயிலாவது அனுப்பியிருக்கலாம் கட்டுரையாளர்.

உயிரிழந்ததும் இளமை திரும்பிவிட பிரபாகரன் என்ன கடவுள் அவதாரமா? கடவுளுக்கு நிகராகவே அவரைக் கருதியதாக உருக்கத்துடன் குறிப்பிடும் கட்டுரையாளரின் உணர்வை மதித்தே இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.... இவர் இப்படி உருகுவதால், அவர் அப்படி ஆகிவிடப் போகிறாரா? ஐயா, பிரபாகரன் ஒரு மனிதன், மாமனிதன். ரத்தமும் சதையுமாய் நம்மிடையே வாழும் 54 வயது மனிதன். தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விஷயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ளமுடியாத விருப்புவெறுப்பியல் தாக்கத்தில் தவிக்காதீர்கள்.

ஆம்புலன்ஸில் தப்ப முயன்றபோது சுட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 600 மீட்டர் பரப்புக்குள்ளிருந்து ஆம்புலன்ஸில் தப்பிக்க முயல்வதென்பது ஒரு கேலிக்கூத்து. இப்படியெல்லாம் காமெடி செய்ய முள்ளிவாய்க்காலில் என்ன கிரேஸி மோகன் நாடகமா நடந்துகொண்டிருந்தது என்ற கேள்வி எழுந்ததும், பிரபாகரனின் உருவம் என்று ஒரு உருவத்தைக் காட்டிப்பார்த்தார்கள். அது 54 வயது பிரபாகரனும் இல்லை, நெற்றிக்குமேல் தலையும் இல்லை. இந்த நாடகமும் தோல்வியடைந்தபின், யார்யாரையோ தேடிப்பிடித்து, மெய்யாலுமே செத்துட்டார் என்று கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்ய வைக்கிறார்கள்.

அடைத்து வைக்கப்பட்டுள்ள முள்கம்பிகளுக்கு உள்ளே வரிசையில் நின்று சோற்றுக்காக எம் இனம் தட்டேந்தும் நிலையில், வெளியே, வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப் போல் கோத்தபாயவுக்காக சாட்சி சொல்லவும் கியூவில் நிற்கின்றன எம் சொந்தங்களில் சில. நாம் நம்ப மறுத்தாலும் அவர் இனி திரும்பிவரப் போவதில்லை என்று மூக்கைச் சீந்துகின்றன. இவர் நம்புவதிலும் நம்ப மறுப்பதிலுமா அந்த மனிதனின் உயிர் இருக்கிறது! அவர் ஒருபோதும் திரும்பிவரக்கூடாது என்ற தன்னுடைய ஆசையை அல்லது நம்பிக்கையை ஆண்மையோடு அறிவித்துத் தொலைக்க வேண்டியதுதானே!

போர்த் திறனுக்காக மட்டுமின்றி நிர்வாகத் திறனுக்காகவும் பாராட்டப்பட்டது பிரபாகரனின் உன்னதத் தலைமை. நெற்றிக்குமேல் தலையே இல்லாமல் காட்டப்பட்ட ஒரு உருவத்தில், தலைமயிருக்குக் கருப்புமை பூசப்பட்டிருந்ததாகப் புழுதி கிளப்பும் கட்டுரையாளர், அந்தத் தலைமைபற்றி ஒரு புகார்ப்பட்டியலையும் சமர்ப்பிக்கிறார். அதுகூட அவரது குற்றச்சாட்டுகள் இல்லையாம், பிரபாகரன் தன்னைத் தானே நொந்துகொள்கிறாராம். அப்படிப் போகிறது கதை.

கடைசிக்காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்று தனக்குத்தானே கேள்வியெழுப்பிக்கொண்டு, தனது கடவுளின் கடைசிக்காலத்தைக் கடைவிரிக்கிறார் கட்டுரையாளர். அதில் கூறப்பட்டிருக்கும் சில குற்றச்சாட்டுகள், "தமிழினத்தைத் தவிர வேறெதைக் குறித்தும் கவலைப்படாத" ஆனந்த சங்கரி வகையறாக்களால் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டவைதான் என்றாலும், இரண்டில் மட்டும் கூடுதல் விஷமம் தொனிக்கிறது. ஒன்று, அன்டன் சொன்னதை பிரபா கேட்கவில்லை என்கிறது. இன்னொன்று, பிரபாவை தமிழ்ச்செல்வன் ஏமாற்றிவிட்டார் என்கிறது.

வல்லரசு சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து இயங்கவேண்டும் என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளை கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று (பிரபாகரன்) நினைத்திருப்பாரோ? என்று கூடுவிட்டு கூடு பாய்கிறார் கட்டுரையாளர்.

அன்டன் மீண்டும் மீண்டும் சொல்லியும் பிரபா கேட்கவில்லை என்று பழிசுமத்துவதுடன் நின்றுவிடுவதா? ஒரே கல்லில் இரண்டு கருத்தகொளும்பன் அடிக்கவேண்டாமா? அதனால்தான், இந்த நிலைக்கு வந்துவிட்டோமே என்று பிரபா நொந்துபோனதாக நூல் விடுகிறார். தலையில் பூசியிருந்ததாகச் சொன்ன கருப்புமையை அந்த மாவீரனின் முகத்திலும் பூசி திருப்தியடைகிறார்.

பாலாவும் பிரபாவும் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்து வைத்திருந்தவர்கள். காசி ஆனந்தன் சொன்னதைப் போல், பாலா பிரபாகரனுக்குத் தாயாகவும் இருந்தார், மகனாகவும் இருந்தார். அவர் சொன்னதை இவர் கேட்கவில்லை என்று, பாலா இல்லையென்ற தைரியத்தில் யாரும் பேசக்கூடாது. பாலா இல்லைதான். ஆனால், அடேல் இருக்கிறார்.

தமிழ்ச்செல்வன் மீதான குற்றச்சாட்டு, இறந்தும் வாழும் அந்த மாவீரனின் புகழுடம்பைப் பேனாக் கத்தியால் கிழிக்கும் முயற்சி. வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட தமிழ்ச்செல்வன், மாறிவரும் உலகின் போக்குபற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னை தவறாக வழிநடத்திவிட்டதாக பிரபாகரன் நினைத்திருப்பாரோ என்கிறார் கட்டுரையாளர். பிரபாகரனை தமிழ்ச்செல்வன் ஏமாற்றியிருக்கிறார் என்பதுடன் நின்றுவிடாது, பிரபாகரன் ஏமாந்துவிட்டார் என்றும் அறிவுப்பூர்வமாக அறிவிப்பதுதான் எழுதியவரின் நோக்கம்.

போர்க்களத்தில் வேரூன்றி, சமாதான தளத்தில் காலூன்றியவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன். அதனாலேயே அமைப்பு அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இது கட்டுரையாளருக்குப் பிடிக்கவில்லை, தமிழ்ச்செல்வனை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்ததும் பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

புலத்திலிருக்கும் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் எழுதுகிற, பேசுகிற, செயல்படுகிற நபர்களை தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது எஸ்.பி. நேரிலேயே கண்டித்திருப்பது பழைய செய்தி. கட்டுரையாளரின் இப்போதைய வார்த்தைகளைப் பார்க்கும்போது, இதேமாதிரி குழப்பம் ஏற்படுத்தும் விதத்தில் ஏற்கெனவே இவர் எழுதியிருப்பாரோ என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

தனது தவறுகள் பற்றிய சிந்தனையே இல்லாமல், எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்திருப்பதாக இறக்கும் தருவாயில் பிரபாகரன் நம்பியிருப்பாரோ என்ற வார்த்தைகள் பிரபாகரன் மீது கட்டுரையாளர் வைத்துள்ள உண்மையான மதிப்பீடு என்ன என்பதை அம்பலப்படுத்துகிறது. இதை மறைக்கவே, மானாவாரியாக சகதிவாரிப் பூசிவிட்டு, எங்களாலும் முடியும் என்று அவர்தான் எங்களை நம்பவைத்தார் என்றெல்லாம் சந்தனம் பூசுகிறார்.

பிரபாகரனின் உன்னதத் தலைமையில் ராணுவ அளவிலும் நிர்வாக அளவிலும் மிகச் சிறந்த கட்டமைப்பைக் கொண்ட வலுவான அரசமைப்பாக தலைநிமிர்ந்த தமிழ் ஈழம், ஒன்று இரண்டல்ல.... நான்கைந்து வல்லரசுகளின் துணையோடுதான் வீழ்த்தப்பட்டிருக்கிறது. இதற்காக நாம் வருந்துகிறோம். கட்டுரையாளரோ 30 வருடமாக பிரபாகரன் கட்டிவளர்த்த தமிழ் சாம்ராச்சியம் அவர் கண்களுக்கு முன்பே துகள்களாக உடைந்து நொறுங்கி மண்ணோடு மண்ணாகிவிட்டது என்று ஈவிரக்கமில்லாமல் வருணிக்கிறார். லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதட்டிலிருந்து உதிரும் வார்த்தைகளுக்கும், அவரது அடிமனத்தில் அடர்ந்துகிடக்கும் அழுக்குக்கும் தொடர்பில்லாததை இந்த வார்த்தைகளிலிருந்து தெளிவாக அறியமுடிகிறது.

பிரபாகரன் திரும்ப வருவார் என்ற பொய்யான நம்பிக்கையை ஊட்டுவது அவரை நம்பி இந்தப் போராட்டத்தின் முதுகெழும்பாய் இருந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம் என்று கோபத்தோடு புழுதிவாரித் தூற்றும் கட்டுரையாளரைக் கேட்கிறேன்.... அன்புள்ள ஐயாவே... பிரபாகரனைக் கடவுளாகவே மதிக்கும் ஐயாவே... இரண்டகம் செய்வது யார்?

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று ஜோடிக்கப்பார்க்கும் இலங்கையின் கூற்றை வழிமொழிவதும்இ இருக்கிறார் என்ற நம்பிக்கையை நிராகரிப்பதும் உங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தது. பிரபாகரனின் தலைமைத்துவம் பற்றியும்இ அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கூட நீங்கள் விமர்சிக்கலாம். உங்களுக்கு அதற்கான தகுதி இருக்கிறதோ இல்லையோ, உரிமை இருக்கிறது. ஆனால், அவரது இழப்பைத் தாங்கும் மனோதிடம் எமக்கு இல்லை என்று அழுதுபுலம்பியபடியே அவர்மீது சேறு பூசக்கூடாது. அதைஇ அந்த மனிதனை உண்மையாகவே நேசிக்கும் நாங்கள் வேடிக்கை பார்க்கமுடியாது.

அந்த மாமனிதன் இறந்துவிட்டான் என்று ஒரு போலி உடலைக் காட்டித்தான் பிரச்சாரம் செய்தது இலங்கை. அதனால்தான், பிரபாகரன் இறக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறோம். அவன் திரும்பிவரும் திருநாளைக் கொண்டாடக் காத்திருக்கிறோம். உங்களுக்கோ, இலங்கை அரசு உண்மையைத் தவிர வேறெதையும் பேசாது என்ற நம்பிக்கை. அதனால், அந்த மாதலைவனுக்கு இறுதிவணக்க மரியாதையைச் செய்யவிடாமல் தடுப்பது நியாயப்படுத்த முடியாத தவறு என்கிறீர்கள். உயிரோடு இருக்கிற ஒரு மகத்தான மனிதனுக்கு இறுதி வணக்கம் செய்யச்சொல்லி வற்புறுத்துவது மட்டும், நியாயப்படுத்திவிடக் கூடிய தவறா?

தமிழ்க்கதிருக்காக,

காற்றுக்கென்ன வேலி திரைப்பட இயக்குநர்

- புகழேந்தி தங்கராஜ்