Thursday, May 28, 2009

யூத மக்கள் வெற்றியடைந்தது போன்று நாமும் வெற்றியடைவோம்.

தமிழர் இடம்பெயர்ந்த சமூகம் பிரபாகரனின் மரணத்தினால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் தொடர்பாக தமது கௌரவம் ,சமத்துவத்திற்கான போராட்டத்தின் எதிர்காலம் குறித்து முடிவுக்கு வரவேண்டிய நிலையில் உள்ளது. 1940 களில் தனது இருள் சூழ்ந்த நாட்களில் யூதர்களின் புலம்பெயர் சமூகம் செயற்பட்ட விதமானது அவர்களுக்கான (புலம்பெயர் தமிழ் சமூகம்) முன்மாதிரியாக அமையலாம் என்று இந்திய அமைச்சரவையின் முன்னாள் இணைத் தலைமைச் செயலாளர் பி. இராமன் தெரிவித்திருக்கிறார்.


"யாழ்ப்பாணத் தமிழர்கள்' என்ற தலைப்பில் "அவுட் லுக்' சஞ்சிகையில் இராமன் இது தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;

விடுதலைப் புலிகளின் தலைவர் வி.பிரபாகரனின் மரணம் தொடர்பாக தொலைக்காட்சி செதிகளில் நான் பார்த்தேன். அவரது உடல் உருட்டி எடுக்கப்பட்ட விதம் குறித்த செதிகளை நான் கேட்டும் வாசித்தும் உள்ளேன். எனது மனம் 1951 1955 காலப்பகுதிக்கு பின்னோக்கிச் சென்றது. அக்காலகட்டத்தில் சென்னையிலுள்ள லொயோலாக் கல்லூரியில் நான் மாணவனாக இருந்தேன். அக்கல்லூரியை இயேசுவின் சங்கம் நடத்தி வந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் நான் உட்பட நான்கு அல்லது ஐந்து இலங்கையின் வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் கல்வி கற்று வந்தனர். அப்போது ஸ்ரீலங்காவானது, சிலோன் என்று அழைக்கப்பட்டது. 1972 க்குப் பின்னரே ஸ்ரீலங்காவானது. அந்த நாட்களில் கூட அவர்கள் தங்களை சிலோனின் ஒரு பகுதியினராக கருதவில்லை. தங்களை யாழ்ப்பாணத் தமிழர்கள் என்றே அவர்கள் அறிமுகம் செது கொள்வார்கள். இலங்கைத் தமிழர்கள் என்று அவர்கள் கூறுவதில்லை.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடுத்தரவர்க்க குடும்பத்தினர் கூட தாங்கள் சேர்த்த பணத்தைக் கொண்டு தமது பிள்ளைகளை தமிழ்நாட்டிற்கு உயர் கல்விக்காக அனுப்புவார்கள். யாழ்ப்பாணத் தமிழர்கள் கல்வி கற்ற பிரபல கல்லூரிகளான சென்னையிலுள்ள லொயோலா , கிறிஸ்ரியன் கல்லூரிகளும் திருச்சியிலுள்ள புனித ஜோசப் கல்லூரியும் இருந்தன. அவர்கள் புத்திக்கூர்மை உள்ளவர்களாகவும் கடும் முயற்சிகளை மேற்கொள்பவர்களாகவும் சிறந்த நகைச் சுவை உணர்வு உள்ளவர்களாகவும் இருந்தனர். வகுப்புகள் முடிந்த பின்னர் அவர்கள் தங்களுக்குள் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள். ஏனைய மாணவர்களுடன் அதிகளவிற்கு ஒன்றாகக் கலந்துகொள்ள மாட்டார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் போன்றே ஒவ்வொரு யாழ்ப்பாணத் தமிழரும் அரசாங்க உத்தியோகத்தர்களாக வருவதற்கு விரும்புவர். அவர்கள் விரும்பும் மற்றைய தொழில் சட்டத்தரணியாவது இந்தியாவில் தமது கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் கொழும்பிலுள்ள அரச சேவையில் இணைந்துகொள்வார்கள். இலங்கை சுதந்திரமடைந்த சில வருடங்களில் இலங்கையின் அரச உயர் பதவிகளில் யாழ்ப்பாணத் தமிழர்களே ஆதிக்கம் பெற்றிருந்தனர்.

மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் அவர்கள் அரச உத்தியோகத்தில் மேலாதிக்கம் செலுத்தினர். ஆசியாவிலுள்ள தமது காலனிகளில் அரச உயர் அதிகாரிகளாக வேலைவாப்பு வழங்குவதில் பிரிட்டிஷார் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்தனர். அவர்களது புத்திக்கூர்மை, ஆங்கில மொழிப் புலமை, கடும் உழைப்பு என்பவற்றுக்கு அப்பால் யாழ்ப்பாணத் தமிழர்கள் நேர்மையான குணத்தை கொண்டிருந்தனர்.

மலாயா , சிங்கப்பூரிலுள்ள யாழ்ப்பாண தமிழ்ச் சமூகத்தைப் பற்றி விக்கிமீடியா பின்வருமாறு எழுதியுள்ளது. " சுதந்திரத்திற்கு முன்னரான காலகட்டத்தில் பிரிட்டிஷ், மலாயா, சிங்கப்பூரில் அரசாங்க சேவையில் இலங்கைத் தமிழர்கள் பெரும்பான்மையாகக் காணப்பட்டனர். மலாயா, சிங்கப்பூரிலுள்ள வெள்ளையர்கள் அல்லாத முதலாவது ஆசிய மருத்துவர்கள், பொறியியலாளர்களில் பலர் இலங்கைத் தமிழ் வம்சாவளியினராவர். உலகின் முதலாவது ஆசிய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எஸ். திருச்செல்வம் ஆவார். அவர் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலாயா நாட்டவராவார்.

முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ ஒரு தடவை பின்வருமாறு கூறியிருந்தார்.

" எண்ணிக்கையின் அடிப்படையில் யூரோ, ஆசியர்களைப் போன்று இலங்கையர்கள் எமது நாட்டின் பல்வேறு சமூகங்களில் சிறியளவினராவர். ஆனால், நவீன சிங்கப்பூர் , மலேசியாவின் அபிவிருத்திக்கும் வெற்றிக்கும் அவர்களின் பங்களிப்பானது அவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க மிகப் பாரியளவு கொண்டதாகும். மலேசியாவினதும் சிங்கப்பூரினதும் வரலாற்றில் சிவில் சேவையிலும் தொழில் துறையிலும் ஆரம்ப நாட்களில் இலங்கையரே கணிசமான எண்ணிக்கையில் காணப்பட்டனர். இன்றும் கூட இலங்கைச் சமூகம் இந்தத் தொழில் துறையிலும் ஏனைய துறைகளிலும் முன்னணிப் பங்கினை வழங்கி வருகிறது.

இன்று சிங்கப்பூரில் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், பாராளுமன்றத்தின் சபாநாயகர் இலங்கையராவார். பெரிய பிரித்தானியாவிலுள்ள எமது உயர்ஸ்தானிகர் , எமது வெளிவிவகார அமைச்சர் , நீதித்துறை , சிவில் சேவை, பல்கலைக்கழகம் , மருத்துவ சேவை மற்றும் தொழில்துறைகளில் இலங்கையர்கள் தொடர்ந்து கணிசமான அளவு தமது பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அவர்கள் ஆற்றும் பங்களிப்பு அதிகமானதாகும். சிறுபான்மையினர் என்ற அடிப்படையிலல்லாது திறமையின் அடிப்படையிலேயே இத் தொழில்துறைகளில் உள்ளனர்.

தங்களிலும் பார்க்க அதிகளவு எண்ணிக்கையைக் கொண்ட சமூகங்களுடன் அவர்கள் பகிரங்கமான போட்டியின் மூலம் இந்தப் பதவிகளை எட்டியுள்ளனர். சிறுபான்மையினர் என்ற பரிசீலனை மூலம் தங்களுக்கு விசேட கல்விச் சலுகையை அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் கேட்பது எல்லாம் தமது திறமையைத் தீர்மானித்து பாரபட்சமின்றி ஏனைய சமூகங்களுடன் போட்டி போட்டு திறமை அடிப்படையில் தங்களை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதேயாகும். இது முற்றுமுழுதாக நியாயமானதாகும்.

ஆற்றல் , திறமை , உயர்ந்த செயற்பாடு என்பவற்றை அங்கீகரிக்க வேண்டுமென்பதில் அந்தச் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது. எதிர்காலம் அந்த சமூகத்திற்கு உள்ளது என்பதை நான் நம்புகிறேன். இன, மொழி, மத வேறுபாடின்றி ஆற்றலுக்கு வெகுமதி கிடைப்பதிலேயே அந்த சமூகம் நம்பியுள்ளது' .

அவர் இலங்கையர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். ஆனால், உண்மையில் சிங்கப்பூரில் பணிபுரியும் யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றியே அவர் உண்மையில் கதைத்தார்.

எனது இளமைப்பருவ நாட்களில் யாழ்ப்பாணத் தமிழர்கள் சாந்தமானவர்கள் என்ற புகழை பெற்றிருந்தனர். பொலிஸ்காரரோ படைவீரரோ துப்பாக்கியை எடுத்தால் சாரத்தை முழங்காலுக்கு மேல் உயர்த்திக் கட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள் என்று நாம் அவர்களைப் கேலி செவோம். ஆனால், அவர்களுடைய உரிமைக்காக போராடுவதற்கு பிரபாகரன் எவ்வாறு அவர்களை தயார்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும். 1948 இல் பிரிட்டிஷார் இலங்கையை விட்டுச் சென்ற பின் பெரும்பான்மை சிங்களவர்களால் பாரபட்சமாக நடத்தப்பட்டதை உணர்ந்த அவர்கள் தீவிரமாகப் போராடினர்.

35 வருடங்களாக தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், பாரபட்சங்களை அவர்கள் கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் பயங்கரவாதத்தையும் கிளர்ச்சியையும் எடுத்துக்கொண்டனர். சிங்கள பெரும்பான்மைப் பலத்திற்கு எதிரான அவர்களின் கிளர்ச்சி இராணுவத்தால் நசுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் ஆத்திரம் தொடர்ந்தும் இருந்துகொண்டிருக்கிறது. இலங்கையின் தமிழ் பகுதிகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இது காணப்படுகிறது. 1983 கலவரத்தின் பின்னர் சுமார் 10 இலட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களை மேற்கு ஐரோப்பா , வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் காணலாம்.

விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை தொடர்பான எனது கட்டுரைகள் தொடர்பாக புலம்பெயர் சமூகத்திடமிருந்து அதிகளவில் எனக்கு செதிகள் அனுப்பப்படுகின்றன. சிலர் ஆத்திரத்துடனும் வேறு சிலர் பண்பாகவும் செதிகளை அனுப்பியுள்ளனர். சிலர் அச்சுறுத்தியும் தூஷித்தும் செதிகளை அனுப்பியுள்ளனர். சிலர் தமிழர்களைக் கைவிட்டதற்காக குற்றஞ்சாட்டி இந்தியாவை சபிக்கின்றனர். இந்தியாவை தண்டிக்க வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திப்பதாக அவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். "ராஜீவை பிரபாகரன் கொன்றதற்காக முழுத் தமிழ்ச் சமூகத்தையும் நீங்கள் தண்டிக்கிறீர்கள்' என்று ஒரு செதி வந்தது. " இலங்கை இராணுவத்தால் தமிழ் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள் குறித்து கண்டித்து ஒரு வார்த்தை தானும் உங்கள் பிரதமர் தெரிவிக்கவில்லையே. நாங்கள் துன்பப்படும் வழியில் நீங்களும் ஒருநாள் துன்பம் அடைய நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்'.

தமிழ் புலம்பெயர் சமூகமானது கௌரவம், சமத்துவத்திற்கான தமது போராட்டத்தின் எதிர்காலம் குறித்து பிரபாகரனின் மரணத்துடனான விளைவுகளுடன் தீர்மானத்திற்கு வர வேண்டியுள்ளது. 1940 களில் தனது இருள் சூழ்ந்த நாட்களில் யூத புலம்பெயர் சமூகமானது எவ்வாறு செயற்பட்டது என்பதை அவர்கள் (தமிழ் புலம்பெயர் சமூகம்) ஆராந்து கொண்டிருக்கின்றனர். யூத புலம்பெயர் சமூகத்தை நாம் முன்மாதிரியாகக் கொள்வோம். யூத மக்கள் வெற்றியடைந்தது போன்று நாமும் வெற்றியடைவோம் ' என்ற செய்தி புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் முரசறைந்து கொண்டிருக்கிறது.

நன்றி: http://www.tamilkural.com/


0 comments:

Post a Comment