என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, 'கண்ணா பிரபாகரன்தான்டா சுத்த ஆண்மகன், உன்னோட ரோல் மாடல்னு' பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததேஈழ மண்ணுக்குள்ள பெருமை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ் விருப்பம் கொண்டுள்ளார். சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்ததகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், 'நான் ஈழத்தில்பிறந்திருந்தால் நிச்சயம் பிரபாகரன் பின்னால்தான் விசுவாசமாகநின்றிருப்பேன்' என்று கூறியுள்ளார்.
பிரபாகரன் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது... "பிரபாகரனைப் போய் சிலர் சர்வாதிகாரின்னு சொல்றாங்க. சொந்த மக்களையேகொன்று குவித்த ஹிட்லரா அவர்?... தன் மக்களுக்காக களத்தில் நின்று 30ஆண்டுகளுக்கும் மேல் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சுத்த வீரன்பிரபாகரன். தாக்குறது அல்ல அவர் நோக்கம்... தற்காப்புதான்.
அவர் என்ன வல்லரசு ஆசையில் உலகம் பூரா வலிந்து தாக்குதல் செய்து நாட்டைப்பிடிக்கவா முயற்சி பண்ணார்?... கால காலமா தாங்கள் வாழ்ந்த மண்ணை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க போர்க்களம் புகுந்தவர்.
அவர் வாழ்க்கையை நினைத்தால் சிலிர்க்கிறது. எத்தனை நேர்மை... எளிமை...வீரம்...! இந்த இனத்தின் பெருமை பிரபாகரன்.
கொண்ட கொள்கை, இலட்சியம் வெல்ல தன் உயிரைப் பணயம் வைத்து எப்போதும் கழுத்தில் சயனைடு குப்பியுடன் காட்சி தந்த பிரபாகரன் தான் இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ரோல்மாடல். நாமெல்லாம் நேதாஜி, பகத் சிங் பத்திபடிச்சிதான் தெரி்ஞ்சிக்கிட்டோம். ஆனா பிரபாகரன் என்ற சுத்த வீரனைப்பார்த்து வளர்ந்தோம்.
என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், இதோ பார்... 'இந்த மாவீரன்தான்டா உன் ரோல்மாடல்' என்று காட்டி வளர்த்திருப்பேன்... பிரபாகரனைப் போல் அர்ப்பணிப்பு குணம் உள்ள ஒரு பெரும் தலைவனைப்பெற்றெடுத்ததே ஈழத் தமிழ் மண்ணுக்குள்ள பெருமையா நான் பார்க்கிறேன்.
'வன்னியில் 5 புலி இறக்கிறார்கள்... 50 புலிகள் பிறக்கிறார்கள்' என்ற கவிதை நூறு சதவிகிதம் உண்மையானது என்று கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.
பிரகாஷ்ராஜ் மகன் சுகவீனம் காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: http://www.sankathi.com/
0 comments:
Post a Comment