நான் என்ன செய்யட்டும்? நான் என்ன செய்ய முடியும்? நான் ஏன் செய்யனும்? தமிழன் தமிழன்னு சொல்லறவங்க, எல்லாம் தமிழ்லயே… பேச மாட்டேங்குறாங்க, இதுல தமிழச்சியை பத்தி சொல்லவே வேணாம். நல்ல தமிழ் பேசுற பெண்ணை காட்டின, நான் தீக்குளிக்க கூட தயாரா இருக்கேன். பிழைக்கதான் ஆங்கிலம் படிக்கிறோம் அதுக்காக தமிழை சாவடிக்கிறது சரியா?
நான் என்ன செய்யட்டும்? நான் என்ன செய்ய முடியும்? நான் ஏன் செய்யனும்? கடவுள் கடவுள்னு சொல்லறவங்க, கடவுள பாக்கல, கேக்கல, ஆனா ஆனா உணர்த்துட்டாங்கலாம் (?), நாட்டுல மதத்தின் பேரால, மாநிலம், மாநில சாதி பேரால நடக்குற பிரச்சனைகள், வன்முறையெல்லாம் இவங்க பாக்கலையா? கேக்கலையா? பார்த்தும், கேட்டும், உணரல அதனே…? ஆண்டவன் நமக்கு அள்ளி கொடுப்பான். சொன்ன உணர்ந்துடும். கோயிலுக்கு போறவகங்களுக்கெல்லாம் ஒரு கை போயிடும் அப்படினு சொன்னா இங்க யாராவது அந்த பக்கம் போவாங்க???
நான் என்ன செய்யட்டும்? நான் என்ன செய்ய முடியும்? நான் ஏன் செய்யனும்? பெண்களெல்லாம் கடவுளுக்கு சமம்னு சொல்லுவாங்க… ஆனா இப்பயும் அந்த பெண்னுக்கு மரியாதை இல்ல… பெண்னுன்னா மெண்மைனு எவன் சொண்னானோ? அவனத்தான் முதல்ல அடிக்கனும். அழகு, மெண்மைனே சொல்லி காலகாலம அடிமையாக்குவங்க… இதுல சிரிப்பே இது தெரியாம பெண்களே, அடிமையாகிறதுதான்… கற்புனு ஒரு பெரிய தங்க சுரங்கம் இவங்கதான் பார்த்துகனும், இல்லீனா காக்கா தூக்கிடு போயிடும்…. அழகு, மெண்மை, அன்பு, பாசம், கற்பு, ஒழுக்கம் இன்னும் எத்தனை விலங்கு?? இதெல்லாம் நல்ல பண்புகள்தானேனு.. நீங்க சொல்ல வரலாம்.. ஆனா பசிச்சாதான் சாப்பிட முடியும், நாளைக்கு பசிக்கும்னுட்டு இன்னைக்கே சாப்பிட முடியாது… அது போலதான் இதுவும் தேவையானதப்பதான் எடுத்துக்கனும்.
போதும்… போதும்… இதுக்கு மேல… நான் என்ன செய்யட்டும்? நான் என்ன செய்ய முடியும்? நான் ஏன் செய்யனும்?
நீங்களே சொல்லுங்க… நீங்க கண்டிப்பா சொல்லுவீங்க…
இவன், மு.இரா.
0 comments:
Post a Comment