Thursday, May 28, 2009

இந்தியாவின் பஞ்சாப் போராட்டம் ஒடுக்கப் பட்ட மக்களின் எழுச்சியா?


எங்கோ இருக்கிற ஆஸ்திரியாவின் வியன்னாவில் நான்கு சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு ஒட்டு மொத்த சீக்கிய மக்களுமே கிளர்ந்தெழுந்து போராடுகிறார்கள்

ஈழத்தில் இத்தனை கொடூரங்கள் நடந்த பிறகும் தமிழகம் அமைதியாக இருக்கிறது. என்ற கொதிப்புகளைக் கேட்க முடிகிறது. தமிழகம் தொடர்ந்து போராட வில்லை என்கிற மனக்குறைகள் இருந்தாலும் பஞ்சாபில் சீக்கியர்கள் ஒற்றுமையாகத்தான் போராடுகிறார்களா? இது சீக்கிய ஒற்றுமைக்கான போராட்டமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்து சாதீய அழுக்குக்கு எதிராக இந்தியாவில் பல் வேறு சிறு சிறு சமய வழிபாட்டு சித்தாந்தங்கள் காலம் தோறும் தோன்றியிருக்கின்றன. இந்து இஸ்லாமிய முரண்களின் உணர்வெழுச்சியில் இருந்து குருநானக் அவர்களால் உருவாக்கப்பட்டது சீக்கிய சமயம்.

ஜாட் பிரிவு மக்களைப் பெரும்பான்மையாக கொண்டிருந்தாலும் தேராசச்சா பிரிவினரும் கணிசமான அளவில் சீக்கிய மதத்தில் உண்டு. ஜாட்கள் மேட்டுக்குடியினர் செல்வந்தர்கள். பெரும்பாலான வணிக நிறுவனங்களையும் சொத்துக்களையும் வைத்திருக்கும் ஜாட்கள் தேராசச்சா பிரிவு சீக்கியர்களை ஏற்றுக் கொள்வதில்லை.

மண உறவு கொள்வதில்லை என்பதோடு ஜாட்களின் நிலங்களில் கூலி வேலை செய்யும் நிலையிலேயே தேராசச்சா பிரிவினர் உள்ளனர். சாதீய அடையாளப்படி ஜாட்கள் OPC ( இதர பிற்படுத்தப்பட்ட சாதியினராகவும்) தேராசச்சா பிரிவினர் (LC) தாழ்த்தப்பட்ட்டோராகவும் உள்ளனர். ஜாட்களால் ஒடுக்கப்படும் தேராசச்சா பிரிவினரின் குமுரல் நீண்ட நாட்களாகே பஞ்சாபில் கொதித்துக் கொண்டிருந்த ஒன்றூதான்.

இந்நிலையில்தான் ஆஸ்திரியாவின் வியன்னாவில் குருதுவாராவில் ஒடுக்கப்பட்ட தேராசச்சா பிரிவைச் சார்ந்த் குருதாஸை ஜாட் பிரிவினர் கொலை செய்துள்ளனர். கொதித்தெழுந்த தேராசச்சா பிரிவினர் பஞ்சாபையே தங்களின் போராட்டங்களால் எரியவினர். மூன்றூ நாட்காளுக்குப் பிறகு ஊரடங்கு இன்று தளர்த்தப்பட்ட பிறகும் மாநிலம் முழுக்க இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை.

ஐந்து தேராசச்சா பிரிவினர் போலீசால் சுட்டுக் கொல்லப்பட பிரச்சனை மேலும் சிக்கலாகியிருக்கிறது. பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் பாதல் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் விளைவாய் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைத்தாலும் பஞ்சாபில் நிரந்த அமைதி என்பது தேராசச்சா பிரிவினருக்கு சமூக நீதி வழங்குவதிலேதான் இருக்கிறது என்கிறார்கள்.

பஞ்சாப் நிலை குறித்த ஒரு சிறு செய்திக் குறிப்பும் புகைப்படங்களும் ‐ ஈழத்தில் இத்தனை கொடூரங்கள் நடந்த பிறகும் தமிழகம் அமைதியாக இருக்கிறது உங்களை வன்முறையில் ஈடுபட சொல்லவில்லை ஒற்றுமையாக குரல்கொடுக்க கூட முடியவில்லையே !!!

நன்றி: http://www.tamilskynews.com/


1 comments:

Arun said...

a very nice post.. though the punjab protests are to be criticized the unity that u want to see in Tamil Nadu is very the mst important thing that is missing in us now... we run after money and forget our national duties..

Post a Comment