Wednesday, July 1, 2009

'வீரத்தின் வித்துக்கள்' – போராளி சங்கர்.

sangar
சங்கர் ஒரு முழுநேரப் போராளி கம்பர்மலை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கரின் சொந்தப்பெயர் சத்தியநாதன். விடுதலைப் போராட்டத்தின் பரிமாணாமங்களை முழுமையாக அறிந்து கொண்டவன். 1981ஆம் ஆண்டு நீர்வேலி வங்கியில் போராட்டத் தேவைக்காக பணம் பறித்தெடுக்கப்பட்ட தாக்குதலில் சங்கரின் துணிச்சல் வெளிப்படுத்தப்பட்டது.

அவனது அந்தச் துணிச்சலான செயற்பாடு விடுதலைப் போராட்டத்திற்குப் பொருளாதார பலத்தை அளித்தது. 27.10.1982 அன்று நடைபெற்ற சாவகச்சேரி பொலிஸ்நிலையத் தாக்குதலின் போது சீலன் அதற்குத்தலைமை தாங்கினான். சீலன் காயப்பட்டதும் அத்தாக்குதலை சங்கர் தலைமை தாங்கி வழிநடத்தினார்.

எதுவித பதட்டமும் இன்றி முன்னேறினான். பொலிசார் பின்வாங்கி ஓடினார்கள். தாக்குதல்கள் முழுமையான வெற்றியைத் தந்தது. சங்கரின் திறமை போராட்டத்திற்கு முழுமையான நம்பிக்கையை ஊட்டியது. இத்தாக்குதல் பற்றி பொலிஸ்மா அதிபராக இருந்த ஸ்ரான்லி சேனநாயக்கா இதில் பங்கு பற்றிய கெரில்லாக்கள் மிகவும் மதிநுட்பமும் அபார துணிச்சலும் மிக்கவர்கள் என ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

சீலனுக்கு வைத்திய வசதிகள் செய்வதற்காக பேரினவாதப் படைகளின் தேடுதல் வேட்டையும் சுற்றி வளைப்பும் அடிக்கடி நடந்தன யாழில்! அத்தோடு தேசத்துரோகிகளின் காட்டிக் கொடுப்புக்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தன இருப்பினும் சங்கர் இதனை முறியடித்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தான்.

அந்த வேளையில் தான் யாழ் நாவலர் வீதியில் ஒருவீட்டருகே எதிரியின் துப்பாக்கிக்கு இலக்காகிறான். காயமடைந்து ஆதரவாளர் ஒருவரினால் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு கடல்வழியூடாக தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டான். இருந்த போதும் சரியான சிகிச்சையின்றி அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் அவனது உயிர் தலைவன் மடியில் பிரிந்தது.

அந்த மாவீரன் சங்கர் நினைவான நவம்பர் 27ஐ தமிழீழ மாவீரர் தேசிய மாவீரர் நாளாக தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் தமிழர் தாயகத்திலும் தமிழர் வாழும் நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி லெப். சீலன் ஆகும். அவனது பிறப்பிடம் திருகோணமலை அங்கு இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலந்தொட்டு அவனிடம் ஒரு போராடும் ஆற்றல் வெளிப்பட்டு வந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஆட்சியில் சிறிலங்காவை இரண்டாவது தடவையாகவும் ஐனநாயக சோசலிசக் குடியரசாக பிரகடனப்படுத்தினார்.

1972இல் சிறிமாவோவும் இவ்வாறு பிரகடனப்படுத்தியிருந்தார். உள்ளுராட்சி அமைச்சராக இருந்த சு.பிரேமதாசா பிரதமரானார். அரச திணைக்களம், கல்வி நிறுவனங்கள் எங்கும் சிங்கக் கொடியை ஏற்றுமாறு சுற்று நிரூபம் அனுப்பினார். இதன் பிரகாரம் 1979 செப். 7ஆம் நாள் திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் சிங்கக் கொடி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைவிரும்பாத சீலன் மிகவும் தந்திரோபாயமாக சிங்கக் கொடிக்குள் பொட்டாசியத்தை மறைத்து வைத்தான். கொடி ஏற்றப்பட்ட போது அது தீப்பற்றி எரிந்தது. பேரினவாதச் சிந்தனையாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

அந்தக் கணமே சீலன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியானான். அவனது ஆற்றலும் ஆயுதப்பயிற்சியும் அவனை ஒரு தாக்குதல் அணித் தலைவனாக்கியது. மிக வேகமாக வளர்ந்தான். பெரும் தாக்குதல்கள் பலவற்றிற்கு தலைமை தாங்கினான். 1981 அக 15 யாழ்நகர் தாக்குதல், 1982 அக் 27 சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல், 1983 மே 18 யாழ் கந்தர்மடம் சைவப்பிரகாசா வித்தியா சாலையில் இராணுவத்தின் மீதான தாக்குதல் என்பன முக்கியமானவை. சீலனின் இந்தத் துணிகரத் தாக்குதல்கள் சர்வதேச மட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னிலைப்படுத்தின.

இது விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி என்ற பட்டத்தையும் சீலன் பெற்றுக் கொண்டார். 1983ஆடி 15அன்று மீசாலையில் இடம்பெற்ற படைகளின் சுற்றி வளைப்பில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான். விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் தன்னை முழுமையாக அற்பணித்த மற்றுமொரு போராளி செல்லக்கிளி அம்மான் ஆகும். விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அனோகமான தாக்குதல்களில் செல்லக்கிளி அம்மானின் பங்குண்டு. விடுதலைப் போராட்டத்தைச் சிதைக்கப் பொலிசார் மற்றம் இரகசிய் பொலிசார் முனைப்போடு களமிறங்கிய வேளை ஏராளமான தமிழ் இளைஞர்கள் காரணமின்றி கைது செய்யப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் வந்த காலத்தில் செல்லக்கிளி அம்மானின் தந்திரோபாய காய் நகர்த்தல்கள் இரகசியப் பொலிசாரின் வலைப்பின்னலை அறுத்தெறிந்தது.

ஒரு கட்டத்தில் CIDஐ கருணாநிதி செல்லக்கிளி அம்மானாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனித்தனி பொலிஸ்மீது நடத்தப்பட்ட தாக்குதல் மெல்ல பொலிஸ் ஐீப்வண்டிகள் மீதும் நடத்தப்பட்டன. அதுவே பின்னர் பொலிஸ் நிலையங்கள் மீதும், இராணுவச் சிப்பாய்கள் மீதும் நடத்தப்பட்டன. 1983யூலை 23ஆம் நாள் பலாலிவீதி திருநெல்வேலியில் வைத்து இராணுவத் தொடரணி முதல் முதலாக விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது. செல்லக்கிளி அம்மானின் தலைமையில் இடம்பெற்ற இத்தாக்குதலில் அப்போதிருந்த அநேகமான போராளிகள் பங்குபற்றினர். 13இராணுவம் பலியானது.

இத்தாக்குதலே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையை உணர்த்தி நின்றது. உலகம் திரும்பிப் பார்த்தது. இனக்கலவரமொன்றிற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்த ஆளும் ஜே.ஆர் பிரேமதாசா போன்ற தலைவர்கள் இதனை தமக்கு சாதகமாக்கி தமிழர்களை தென்னிலங்கையில் இருந்து விரட்டினர். அப்போது சுமார் மூவாயிரம் வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர் இங்கு குறிப்பிடத்தக்கது. ஜே.ஆரின் இனப்படுகொலைக்கு பதிலடி கொடுக்கவும் இராணுவ பொலிசு அடக்கு முறைகளை உடைத்தெறிந்தும் தமிழனது இழந்த தாயகத்தை மீட்க ஆயுதப் போராட்டமே சிறந்தவழி என இளைஞர்கள் உணர்ந்து கொண்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராளியாகப் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள்.

இந்த வரலாற்றுத் திருப்பு முனைக்கு வித்திட்ட திருநெல்வேலித் தாக்குதலில் செல்லக்கிளி அம்மான் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான். செல்லக்கிளி அம்மானைத் தொடர்ந்து பண்டிதர் ரவீந்திரன் தாக்குதல் பிரிவுத் தலைமையை ஏற்றார். போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதிலும் போராட்டத் தேவைகளின் தேவைகளின் தயாரிப்புக்களில் பரிமாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டார். தலைசிறந்த போராளி தலைமைத்துவம் அவனது ஆற்றலில் மிளிர்ந்தது. எதிர்பாராத விதமாக 1985ஐனவரி மாதம் ஒரு இராணுவச் சுற்றி வளைப்பில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்தார்.

அந்த மாவீரனது பெயரால் இன்றும் போசப்படுகிறது. பண்டிதரின் மறைவைத் தொடர்ந்து கேணல் கிட்டு யாழ்மாவட்டத் தளபதியாகப் பெறுப்பேற்றார். ஜே.ஆர் பிரகடனப்படுத்தப்படாத போரை தமிழ் மக்கள் மீது திணித்தார். பல இராணுவ முகாம்களும், மினி முகாம்களும் அமைக்கப்பட்டன. பெருமளவிலான சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டனர். பெருமளவிலான தேசிய வளங்கள் போருக்காக செலவிட்டனர். பல உயிர் இராணுவ அதிகாரிகள் பயிற்சிக்காக வெளிநாடு சென்று வந்தனர். முதன் முதலாக 1984 சித்திரை போருக்காக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டார். (லலித் அத்துலத்முதலி) வடக்கு-கிழக்கில் கடுமையான சட்டங்கள் அமுலுக்கு வந்தன.

இவ்வாறு ஐனாதிபதி ஜே.ஆர் படைக் கட்டுமானங்களிற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் செய்து கொடுத்து இராணுவக் கட்டமைப்பை விரிவு படுத்தினார். இவ்வாறானதொரு காலகட்டத்தில் தான் கேணல் கிட்டுவும் யாழ்மாவட்டத் தளபதியாக பொறுப்பேற்றார். குறிப்பாக அரசின் இராணுவ வலுவும் யாழ்மீதே குவிந்திருந்தது. இந்தச் சவால்களைச் சிறப்பாக கிட்டு எதிர்கொண்டார். இராணுவ முகாம்களை விட்டு வெளிவந்த படைகள் விடுதலைப் புலிகளால் வழிமறித்து தாக்கப்பட்டன. ஆக்கிரோசமான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத படை பின்வாங்கியும் இழப்புக்களைச் சந்தித்தும் வந்தன.

இதன்பிரதிபலிப்பு யாழ்மாவட்டத்தில் இராணுவ முகாமிற்குள் முடங்கியது. இதுகேணல் கிட்டுவின் போராற்றலுக்குக் கிடைத்த வெற்றியாகும். இராணுவத்தீர்வு சாத்தியமாகாது என உணர்ந்த ஜே.ஆர் அரசாங்கம் 1985ஆம் ஆண்டு நடுப்பகுதியில் போர்நிறுத்தத்திற்கு இணங்கியதுடன் பூட்டான் திம்புவில் தமிழ் போராளிகளுடன் பேசவும் இணங்கினார். இது எமது போராட்ட வரலாற்றில் விடுதலை இயக்கங்களிற்கு கிடைத்த முதல் அங்கீகாரம் ஆகும். அதுவும் அது சர்வதேச மட்டத்தில் கிடைத்த அங்கீகாரமாகும். அதுவும் அது சர்வதேச மட்டத்தில் கிடைத்த அங்கீகாரமாகும். என்பதால் முக்கியம் பெற்றது.

சிம்பு பேச்சுவார்த்தையை ஜே.ஆர் அரசு குழப்பி சம்பூர், கூனித்தீவு போன்ற இடங்களில் இராணுவத்தை ஏவி இனப்படுகொலையைச் செய்தது. இக்காலகட்டத்தில் தான் தளபதி கிட்டு தலைமையிலான போராளிகள் யாழ்ப்பாணக்குடாவில் பல பகுதிகளிலுமுள்ள இராணுவ முகாம்களைச் சுற்றி வளைத்து இராணுவம் வெளியேறாதபடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இது இற்றைக்கு 500ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழரின் னைக்கு யாழ்குடாவந்த செய்தி உலகிற்கு உணர்த்தியது. குடா நாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இந்தப் புனிதமான பணியில் ஈடுபட்ட மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டியவர்களே.

போராட்ட இலட்சியத்தைக் காக்கவே லெப். கேணல் திலீபன் போராட்ட வடிவத்தை மாற்றினான். இந்தியா அகிம்சை வழியில் விடுதலை பெற்றது. எனவே அதேவழியில் இந்தியாவிடம் நீதி கேட்டான். திலீபன் செப் 15 1987 தொடக்கம் செப் 27வரை நீரின்றி உண்ணா நேன்பிருந்து உயிர் துறந்தார். அவனது ஐந்து அம்சக்கோரிக்கைகளையும் குறித்து இந்தியா பாராமுகமாக இருந்து விட்டதே என்பது தமிழர்களிற்கு இன்றளவும் ஒரு கவலையான விடயமே.இருப்பினும் தியாகி திலீபனது அந்தப் 12 நாட்களும் உடலை மெல்ல மெல்ல உருக்கி எம்கண்முன்னே உயிர்துறந்தது. தமிழ் மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது. ஆயினும் திலீபனும் அந்தச் சாவு உலகின் விடுதலைக்காகப் போராடும் இனங்களிற்கு ஒளியாக மிளிர்கிறது.


0 comments:

Post a Comment