உங்கள் சட்டத்தினால்
எங்கள் கைகளுக்கு விலங்கிடலாம்:
எந்தச் சட்டத்தினால்
எங்கள் உணர்வுகளுக்கு
விலங்கிடப் போகிறீர்கள்?
அஞ்ச மாட்டோம்
அச்சுறுத்தாத நாங்கள்
எந்த அச்சுறுத்தலுக்கும்:
தடை விதிப்பது
உங்கள் கடமையானால்
உடைப்பது எங்கள் உரிமையாகும்...
என்ன செய்வது!
காவல் துறையோ,
உங்கள் கையில் அடக்கம்
நீங்களோ
"கை"க்குள் முடக்கம்
தமிழினத்தின்
வேராக இருப்பீர்கள்
என நம்பினோம்
நடைமுறையில்
நீங்கள் "வேறாக" இருக்கிறீர்கள்
சட்டத்தைச் சொல்லி
மிரட்டும் நீங்கள்
நீதிமன்றத் தீர்ப்பினை
மதிப்பதில்லையே!
கொள்கையின் குறுக்கே
எத்தனை தடுப்புச் சுவர்களானாலும்
தகர்ப்பது ஒன்றே
எங்கள் தலையாய பணி
அய்யா முதல்வரே!
அஞ்சமாட்டோம்...
தடியடிக்கும்
சிறைக் கொட்டடிக்கும்
புலிகளை
புலிக்கொடியை
பிரபாகரனை
எந்நாளும் ஆதரிப்போம்
எழும் ஈழம்...
Friday, September 4, 2009
ஈழம் எழும் விழுப்புரம் கா. தமிழ்வேங்கை.
Posted by மு.இரா at 9:44 AM
Labels: கவிதைகள், தமிழீழம், தமிழ்நாடு, தன்னம்பிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment