Friday, July 3, 2009

தொல்.திருமாவளவனின் போர்ப்படைத்தளபதி எல்லாளனிடம் ஒரு நேர்காணல்.

விடுதலைச்சிறுத்தைகளின் மதுரை மாவட்ட செயலாளரும்,  தொல். திருமாவளவனின் போர்ப்படைத்தளபதியுமான திரு.மோ.எல்லாளன் அவர்களுடன் ஒரு நேர்காணல். 

 

புலிகள் மீதான தடைய நீக்க வேண்டும் என்று உங்களது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கூறியுள்ளார் அதனைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
ஈழத்தமிழர்கள் அனைவரது நெஞ்சிலும் நீங்கா இடம் பெற்றவர்கள் புலிகள் மட்டும் தான்.  அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக செய்தஅளப்பறிய சாதனைகள், தியாகங்கள் அனைவரும் அறிந்ததே.  புலிகள் மீது விதிக்கப்படும் தடை என்பது ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின்
மீது விதிக்கப்பட்ட தடையாகவே நான் கருதுகின்றேன்.  புலிகள் தான் ஈழத்தமிழர்கள். ஈழத்தமிழர்கள் தான் புலிகள். இலங்கை அரசாங்கமே
புலிகள் மீது தடைவிதிக்காமல் இருக்கும் போது, இந்தியா புலிகள் மீது தடைவிதித்து இருப்பது உகந்ததல்ல.  புலிகள் மீதான தடையை நீக்கினால் இந்திய - தமிழீழ உறவு மிகவும் பலமாக இருக்கும்.

 

தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் கோமாளிகள் என்று இலங்கை அரசின் படைத்தளபதி சரத் பொசேகா கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து.
சரத் பொன்சேகா கூறியது மிகவும் கண்டனத்திற்குரிய செயல்.  அவரது இந்தப்பேச்சுக்கு இலங்கை அரசே பொறுப்பேற்று தமிழகத்திடமும், இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தமிழகத்தில் இருப்பவர்களை எல்லாம் கோமாளி என்று சொல்கின்றார். அவரது
கூற்றுப்படியே தமிழர்கள் கோமாளித்தனமாக நடந்து இருந்தால் இந்நேரம் சிங்களமே இருக்காது.

 

ஈழத்தமிழர்களுக்காக அனுப்பப்படும் நிவாரணப்பொருட்கள் இலங்கை இராணுவத்தினரால் சூறையாடப்பட்டுள்ளன இது எதனைக்  காட்டுகின்றது.
ஈழத்தில் தமிழர்கள் பூர்வகுடிமக்கள் இதனை அனைவரும் அறிவர்.  ஈழத்தமிழர்களையும், தமிழகத்தமிழர்களையும் பிரித்தது கடல்கோள்தான் என்பது அறிவுப்பூர்வமான உண்மை.  எங்களது இரத்த சொந்தம் தான் ஈழத்தமிழர்கள், அவர்கள் உணவுக்காகவும், உடைக்காகவும் அல்லல்படுவதை நினைத்தாலே எங்களுக்கு மனம் பதை பதைக்கின்றது.  இந்த சூழலில் அவர்களுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்கள் சூறையாடப்படுவது என்பது ஒட்டுமொத்த தமிழகத்தையே சிங்களம் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

 

எந்த மாதிரியான ஒரு ஒப்பந்தம் அல்லது தீர்வு ஈழத்தமிழர்களுக்கு நிரந்த்தர தீர்வாக இருக்கும்?
இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களை சிங்கள அரசு என்ன செய்தது என்று உலகிற்கே தெரியும்.  சிங்கள அரசிடம் எந்தவிதமான ஒப்பந்தம் போட்டாலும் அதனை சிங்கள மனம் ஏற்றுக்கொள்ளாது.  உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாமல் தவிக்கும் தமிழினத்திற்கு
உதவிப்பொருட்கள் போவதைக்கூட விரும்பாத ஒரு அரசிடம் நாம் எந்தமாதிரியான ஒப்பந்தத்தை எதிர்பார்க்க முடியும்.  தற்போது இராணுவக்கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்பகுதிகளில் தமிழர்கள் அடிமையிலும் கேவலமாகவே வாழ்கின்றனர். அவர்களுக்கு  பேச்சுரிமை இல்லை, கருத்துரிமை இல்லை.  உதாரணமாக ஒரு இராணுவக்கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் கொழும்பு பயணம் செய்யவேண்டி இருந்தால் ஒரு மாதத்திற்கு முன்பு இராணுவத்திடம் அனுமதி பெற வேண்டும்.
அனுமதி கிடைத்தாலும் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்.  இது என்ன வாழ்க்கை இது ஒரு நாட்டில் வசிப்பவர்கள் தங்களது நாட்டில் ஓரிடத்தில் இருந்து மற்றோரிடம் செல்ல இவ்வளவு அடக்குமுறை வைத்திருப்பவர்களிடம் எந்தவிதமான ஒப்பந்தத்தை எதிர்பார்க்கமுடியும்.
நிரந்தரத்தீர்வு தனித்தமிழீழம் மட்டுமே என்பது என்னுடைய ஆழமான கருத்தாகும்.

 

இலங்கை அரசு பாகிஸ்தானிடம் இராணுப்பயிற்சி பெறுவது இந்திய தேசிய பாதுகாப்பை பாதிக்குமா?
நிச்சியமாக இந்திய தேசிய பாதுகாப்பினைப்பாதிக்ககூடிய ஒரு செயல் இது.  சிங்கள உயர் இராணுவ அதிகாரிகள் இந்தியாவிலும் பயிற்சி பெறுகின்றார்கள். குறிப்பாக சரத் பொன்சேகா இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இராணுவப்பயிற்சி பெற்றவர்.  இதன் மூலம்
இந்தியாவினுடைய இராணுவப்பயிற்சி பற்றிய விபரங்கள், இராணுப்போர்த்தந்திரங்கள் மற்றும் நமது தொழில்நுட்பங்கள் அனைத்தும்  நமது எதிரிநாடான பாகிஸ்தானுக்கு தெரிவது எந்த விதத்தில் நமது இந்திய தேசிய பாதுகாப்புக்கு உகந்ததாகும். இந்தியாவில் நடக்கும்
தீவிரவாதச்செயல்களுக்கு இது ஒரு முக்கிய காரணமாகவே அமையும்.

 

மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பத்தை இலங்கை அரசு கொண்டாடி மகிழ்கின்றது என்பது எவ்வாறு உள்ளது?
மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று நமது உளவுப்பிரிவும், உள்துறை அமைச்சகமும்  உறுதிபடக்கூறியுள்ளது. இந்தச்செயலுக்கு இலங்கை மகிழ்வு கொள்வதை நினைக்கும் பொழுது இதில் இலங்கை அரசும் உடன்பட்டு இருக்கும்
என்று நினைக்க வைக்கின்றது.  இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாத செயலுக்கும் இலங்கை அரசையும் நமது உளவுப்பிரிவு கண்காணிக்க வேண்டும்.
நேர்காணல் :- எமது நிருபர் க. தமிழ் வேள்.
நன்றி: http://www.eelavarkural.com/


1 comments:

Anonymous said...

கருணாநிதி ஊட்ட கரி சோறு போடுறாங்களாம் ரெடி 1 2 3

Post a Comment