Wednesday, June 24, 2009

இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள் – பாகம்-6.


சகோதர - சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள் புணர்ச்சிகளைப் தேவி பாகவதப் புராணம் (6,17,53-58) வெளிக் கொண்டு வருகின்றது. சமுத்திரத் தேவனின் செல்வப் புதல்வி இலட்சுமிதேவி. தன் சகோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள். இதைக் கண்ட விஷ்ணு கோபம் கொண்டு ''கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமுகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?"27 என்று கோபத்துடன் சீறினான். அவள் கணவன் கேட்டதற்குப் பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்து தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள்.

விஷ்ணுவின் பலதார மணமும், ஒருதார மணத்துக்கு வித்திடும் ஆணாதிக்கத் தீர்வுகளும். கலைவாணி, சரஸ்வதி என்ற கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர். இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாகத் தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, ''ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது"27 என்று கணவனைக் குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியைச் சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியைப் பிரம்மாவிடம் படுக்கும் படியும் கூறி, சக்களத்தி சண்டைக்குத் தீர்வு கண்டாள். இது இந்துமத ஆணாதிக்க அமைப்பு மாறிவந்த வடிவத்தைக் காட்டுகின்றது.

மனிதனாக விஷ்ணு கற்பழித்ததால் பிறந்த கதையைக் கந்தபுராணம் தக்கக் காண்டத்தில் விளக்குகின்றது. கற்புள்ள அரசப் பெண்ணைக் கற்பழித்ததால், அந்தப் பெண்ணின் சாபத்தால் விஷ்ணு மண்ணில் மனிதனாக பிறந்தானாம். இந்தக் கடவுளையும், கந்தபுராணத்தையும் சொல்லி வழிபடும் எமது முட்டாள்த்தனத்தை மெச்சத்தான் வேண்டும்.

கணவனைப் பிரிந்து வாழ இட்ட சாபம். சிவ இரகசியத்தில் இருந்து இதைப் பார்ப்போம்;. விஷ்ணு ஒருநாள் தனது மனைவியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, அற்புதர்க்கன் என்ற சிவகணங்களின் தலைவன் அங்கு சென்றானாம். என்ன இப்படி செய்கிறாய் எனக் கேட்க ~நீ யாரடா கேட்பதற்கு, எனக் கேட்க இதை நந்தியிடம் முறையிட்டானாம் சிவகணங்களின் தலைவன்;. நந்தி உடனே விஷ்ணுவைப் பூமியில் பிறக்க வைத்து, மனைவியைப் பிரிந்து வாழ சாபம் கொடுத்தாராம்;. ஆணாதிக்கப் பாலியல் நெருக்கடிகளைச் சகித்து வாழவும், அடங்கிவாழவும் கோரும் பண்பாடுகளையும் இந்து ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை வழியில் புகட்டுகின்றது.

இராமனின் குற்றப் பிறப்பும் சரி, பிறந்த பின்னாலான வாழ்வும் குற்றமே. ஒரு முனிவரின் மனைவியை விஷ்ணு கொன்று விடவே, அதனால் கிடைத்த சாபத்தினால் மண்ணில் பிறந்து மனைவியைப் (சீதையைப்) பிரிந்து வாழ வேண்டியேற்பட்டதாம். இன்று இராமன் பெயரில் செய்யும் கூத்தும் சமூகத்தின் இழிந்த தண்டனைக்குரிய குற்றங்களே. குற்றவாளிகளை வழிபடக்கோருவதும், அந்த நாய்களை முதன்மைப ;படுத்துவதும் சமூகத்தின் அறிவற்ற மூடத்தனத்தில், சிலர் பிழைத்துக் கொள்ளும் பிழைப்பல்லவா?.

மகளைக் (சரஸ்வதியைக்) கற்பழித்த பிரம்மன் இந்துக் கடவுள்களில் ஒருவர். பிரம்மன் தன் சரீரத்தில் இருந்து தனது மகளாகச் சரஸ்வதியைக் கல்விக்காகப் பெற்று எடுத்தாராம். பெத்த மகளின் அழகைக் கண்டு பிரம்மன் காமம் கொண்டு கற்பழிக்க முயல, சரஸ்வதி பெண் மான் உருவம் எடுத்து ஓடினாளாம். உடனே பிரமன் தானும் ஆண்மான் வேடமிட்டுத் துரத்திச் செல்ல, சிவன் வேடன் உருவெடுத்து பிரம்மனைக் கொல்ல, சரஸ்வதி ஒப்பாரி வைத்து அழ, சிவன் மனமிரங்கி பிரம்மனை உயிர்ப்பிக்கப்பட்ட நிலையில், மகள் சரஸ்வதி பிரம்மனின் மனைவியானாள். அதேநேரம் மற்றொரு விளக்கப்படி, சரஸ்வதி பிரம்மனின் பேத்தியான நிலையில் பிரம்மனின் மனைவியானாள். ஒருநாள் ஊர்வசி மீது காமம் கொண்டபோது பிரம்மனுக்கு விந்து வெளியேற, அதை ஒரு குடத்தில் எடுத்து வைத்தாராம். அந்தக் குடத்தில் இருந்து உருவான அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றானாம். இன்று சொந்த மகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு ஆணாதிக்க இந்துமதக் கடவுள்களே வழிகாட்டுகின்றனர். இது மனைவி, மகள் என்ற எந்த எல்லையுமற்ற நிலையில் கற்பழிப்புகள் சர்வசாதாரணமாக நடக்கின்றது. இதை இந்துமதம் போற்றிப் புகழ்ந்து வழிகாட்டுகின்றது.

பெண்களை நிர்வாணமாக்கி இரசித்த ஆணாதிக்கக் காமுகன் சிவன் இந்துக்களின் கடவுள். ''இராவணனின் மனைவி மண்டோதரியை இச்சித்துப் புணர்ந்ததும், அருந்ததியிடம் அவளை இச்சித்து நிர்வாணமாகப் பிச்சை போடும்படி கேட்டும், சிவன் சாபம் பெற்று சிசுவானது ஆணாதிக்கக் காமமாகும்."34 இதே சிவன் துரோணாச்சாரி மனைவியிடம் விருந்து சாப்பிட சென்ற இடத்தில், ஆணாதிக்க வக்கிரக் காமம் கொண்டு விந்து வெளியேற்றிய நிகழ்ச்சியைப் போற்றும் இந்துமதம் பெண்களின் எதிரியல்லவா? இன்றைய சினிமா, இன்றைய விளம்பரங்கள், இன்றைய டிஸ்கோக்களின் தந்தை சிவன் என்றால் தவறோ? உலகமயமாதல் பெண்ணை உரிந்த நிர்வாண நுகர்வு வக்கிரத்தில், மூலதனச் சந்தையை ஜனநாயகப்படுத்தி பெண்ணியமாக்கும் வழியில், உலகை வீரநடை போட வைக்கும் ஆணாதிக்கப் போக்குக்குச் சிவன் தந்தையல்லவா? இதனால் தான் இந்து இராஜ்ஜியத்தை உருவாக்க பிரகடனம் செய்பவர்கள், ஏகாதிபத்தியத்திடம் சோரம் போகின்றனரோ?

வள்ளியம்மையின் பிறப்பும் மிருகப்புணர்ச்சியாகும்;. காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையைப் பெற்றார். இந்தக் கடவுள்களை, புராணங்களை, இதிகாசங்களை நாம் பின்பற்றலாமா? இவை ஆணாதிக்க வக்கிரப் புத்தியல்லவா?

விபச்சாரியிடம் சுந்தரமூர்த்திக்காகத் தூது போன சிவனின் ஒழுக்கம் என்ன? சுந்தரமூர்த்தி நாயனார் ஆணாதிக்க இந்து மதத்தைப் பாதுகாக்க மக்களுக்கு எதிராக, பார்ப்பனருக்காகப் பொய்யும் புரட்டுகளையும் கூறித்திரிந்த போது, இரண்டாவது வைப்பாட்டியாக விபச்சாரி மீது ஆசை கொள்ள, அவள் மறுக்க, சிவன் தரகு வேலை பார்த்து (ஏகாதிபத்தியத்துக்குச் செய்வது போல்) கடவுளின் பெயரில், சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆணாதிக்கக் காமத்தைத் தீர்த்து வைத்தார். இதை நாம் போற்றலாமா?

பல நூறு இந்து மதப் பிறப்புகள் இது போன்று வக்கரித்த ஆணாதிக்கப் பிறப்பாகும். பெண்கள் மீதான கற்பழிப்புகள், வைப்பாட்டித் தனங்கள், விபச்சாரங்கள், ஓரினச் சேர்க்கை, சுயப் புணர்ச்சி என்ற வகைவகையான பிறப்புகளை, புணர்ச்சி வடிவங்களை இந்துப் புராண இதிகாசங்களாக இந்து மதம் நியாயப்படுத்தி, ஆணாதிக்க வக்கிரமாகக் காணப்படுகின்றது. இன்று பாலியலில் புரட்சி செய்வதாகக் கூறிக்கொள்ளும் பின்நவீனத்துவச் சாக்கடைகளின் பாலியல் தந்தைமார்கள், இந்து பார்ப்பனிய ஆணாதிக்க இந்து மதத்தில் செறிந்து, நிறைந்து காணப்படுகின்றனர். சில மாதிரி வடிவங்களை மட்டுமே இந்துமதப் புராண, இதிகாசங்கள் சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தையும், பின்நவீனத்துவ அழுகல்களையும் புரிந்து கொள்ள இந்த வக்கிரங்களே எமக்குப் போதுமானவை.

நன்றி: www.tamilcircle.net

- முற்றும்.


0 comments:

Post a Comment