Thursday, May 21, 2009

எம்ஜிஆர்தான் உண்மையான தமிழினத் தலைவர்! – புரட்சியாளன் சீமான்.

தமிழினத்தின் உண்மையான தலைவர் புரட்சித் தலைவர் எனப் புகழப்பட்ட எம்ஜிஆர் மட்டுமே. இந்த இனத்துக்காக தன்னலமின்றிப் பாடுபட்ட ஒரே தலைவன் அவர்தான். தமிழகத்துக்கு ஒரு எம்ஜிஆர், ஈழத்துக்கு ஒரு பிரபாகரன், என்றார் இயக்குநர் சீமான்.

சென்னையில் நடந்த ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட சீமான் பேசியதாவது:

சிறை என்றால் எல்லோரும் பயப்படுகிறார்கள். எனக்கும் பெரிய பயம் இருந்தது. ஆனால் உள்ளே போய் வந்த பிறகுதான் அந்த பயம் நீங்கியது. சிறைக்குள் எந்த பயமும் கிடையாது. ரொம்ப நல்லவர்கள் எல்லாம் உள்ளே இருக்கிறார்கள். ரொம்ப கெட்டவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள்.

நான் 70 நாட்கள் தனிமை சிறைக்குள் இருந்தேன். உள்ளே அலைபேசியை பயன்படுத்தக்கூடாது. ஒரே ஒரு ரூபாய் நாணயம் போட்டு வெளியில் யாரிடமாவது பேசிக்கொள்ளலாம். அப்படி பேசும்போது இலங்கையில் நடப்பதையும் இங்கே நடப்பதையும் தெரிந்துகொண்டு கழிவறைக்குள் உட்கார்ந்து அழுதேன். கட்டிப்பிடித்து அழக்கூட யாரும் துணைக்கு இல்லை.

எம்.ஜி.ஆர்.தான் தமிழினத் தலைவர்!

எம்.ஜி.ஆர்.தான் தமிழ் இன தலைவன் தமிழ் இனத்துக்காக பாடுபட்டவர் தமிழ் நாட்டுக்கு ஒரு எம்.ஜி.ஆர். தமிழ் ஈழத்துக்கு ஒரு பிரபாகரன். இப்படி பேசுவதால் என்னை யாரும் கைதுசெய்யமுடியாது. கைதுசெய்தால் தேர்தலில் தோற்றுப் போய்விடுவார்கள், என்றார் சீமான்.முன்னதாக புதுச்சேரி சிறையிலிருந்து விடுதலையான அவர், நேராக அரியாங்குப்பம் சென்ரு பெரியார் சிலைக்கு மாலையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய சீமான், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழுமையான பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்றார்.

“ஈழ விடுதலையை யார் அங்கீகரிக்கிறார்களோ, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். தமிழீழத்தை ஆதரிக்கும் இயக்கத்துக்கு ஆதரவு அளிப்போம். இதற்காக பலபேர் பல வடிவத்தில் போராடுகிறார்கள். 13 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர்.

காங்கிரஸ்தான் இனப்பேரழிவுக்கு காரணம். காங்கிரசை வீழ்த்தும்வரை போராடுவோம். அது யாருக்கு சாதகம், பாதகம் என்றெல்லாம் பார்க்கமாட்டோம். இலங்கை தமிழர் பற்றி பலரும் பேசும்போது, சோனியாகாந்தி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அதற்கு என்ன அர்த்தம்? 1-ந் தேதிக்கு பின்னர் என்னைக் கைது செய்த இடத்திலிருந்தே பிரசாரம் தொடங்குவேன்”, என்றார் சீமான்.


0 comments:

Post a Comment